விஜய் சேதுபதியை 'குட்டி' என்றுதான் அழைப்பேன்..! - நெகிழும் ஜனகராஜ்

இயல்பான நடிப்பால் எல்லோரையும் கவரும் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் ஹிட் 'விக்ரம் வேதா'. இந்தப் படத்துக்குப் பிறகு, கருப்பன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, அநீதி கதைகள், 96' எனப் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

ஜனகராஜ்

96' படத்தை சி.பிரேம் குமார் இயக்கிக்கொண்டிருக்கிறார். தற்போதுதான் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் காட்சியை எடுத்து முடித்திருக்கிறது படக்குழு. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சினிமாவில் நடிக்க வந்திருக்கும் ஜனகராஜிடம் பேசினோம்.

''சினிமாவை விட்டு சிறிது காலம் விலகியிருந்தேன். என்னை எப்படியோ கண்டிபிடித்துவிட்டார்  இயக்குநர் பிரேம் குமார். நான்தான் இந்தக் கதாபாத்திரம் பண்ண வேண்டும் என்பதில் அவர் உறுதியாகயிருந்தார். இந்தப் படத்தில் ஸ்கூல் வாட்ச் மேனாக நடித்திருக்கிறேன்.  விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர். அவரின் 'தர்மதுரை' படம் எனக்குப் பிடிக்கும். என்னிடம் மிகவும் கனிவாக நடந்துகொண்டார். படக்குழு முழுவதுமே என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டது. இந்தப் படத்தில் என்னுடைய பகுதிகளை அழகாகக் கையாண்டார்கள். ரஜினி, கமல் என அந்தக் காலத்திலிருந்த பெரிய ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறேன். தற்போது இந்தக் காலத்தில் பீக்கில் இருக்கும் விஜய் சேதுபதியுடனும் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.  இதுதவிர, வேறு இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதியைக 'குட்டி' என்றுதான் அழைப்பேன். இதைக் கவனித்த இயக்குநர் படத்திலும் அவரைக் 'குட்டி' என்றே கூப்பிடுங்கள் என்று சொன்னார். அதனால், படத்திலும் விஜய் சேதுபதியை அப்படிதான் கூப்பிட்டேன். படத்தில் எனக்கும் குட்டிக்கும் இடையே ஒரு எமோஷனல் பாண்டிங் இருக்கும்'' என்று முடித்தார் நடிகர் ஜனகராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!