யார் இந்த ’சாம்பார்’ ராசன்..?! - குபீர் கிளப்பும் பின்னணி

சமூக வலைதளங்களில் இன்று ஒரு படத்தின் போஸ்டர் செம வைரலாகி வருகிறது. படத்தின் போஸ்டர்களை பார்த்தவர்களுக்குப் பெரிதும் அதிர்ச்சி. 'மாட்டுக்கு நான் அடிமை' என பெயரிடப்பட்டிருந்த அந்தப் படத்தைத் தயாரிப்பவர் 'சாம்பார் ராசன்' பெயரே இப்படி காமெடியாக இருக்கே, படத்தில் என்ன  காமெடியெல்லாம் இருக்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள படத்தின் தயாரிப்பாளர் கம் ஹீரோ 'சாம்பார் ராசனை'த் தொடர்புகொண்டோம்.

sambar rasan

''என் அம்மாவுக்குப் பிறகு, நான் பெரிதும் மதிப்பது குலமாதாகிய மாடுதான். அதனால்தான் இந்தப் படத்துக்கு 'மாட்டுக்கு நான் அடிமை' என்று பெயர் வைத்தோம். இந்தப் படத்தில் என்னைத் தவிர, வேறு யாரும் நடிக்க முடியாது. அதனால்தான் இந்தப் படத்தில் நானே ஹீரோவாக நடிக்கிறேன். இனி நான் தயாரிக்கப்போகும், நடிக்கும் அனைத்து படங்களிலும் மாடு கண்டிப்பாக இருக்கும்'' என்றவரிடம், 

அது என்ன உங்கள் பெயர் 'சாம்பார் ராசன்' பெயர்க் காரணம் சொல்லுங்கள் என்று கேட்டால்,

என் பெயர் ராசன் மட்டும்தான் அதில் சாம்பாரை நான்தான் சேர்த்தேன். சாம்பாரை வாழ்க்கையில் தினமும் டேஸ்ட் பண்ணாதவர்கள் யாரும் இல்லை. அதே மாதிரி நானும் டேஸ்ட்டான ஒருவர். அதனால்தான் சாம்பாரை என் பெயரின் முன்னால் சேர்த்துக்கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக 'கோலி சோடா' படத்தில் நடித்த சீதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க காமெடி திரைப்படம் தான்'' என்றவரிடம்,

உங்களுக்குப் போட்டியாக நீங்கள் தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவை நினைக்கிறீங்க என்றால்,

நான் போட்டியாக நினைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவும் இல்லை. என்னைப் போல் கோமணம் கட்டிக்கொண்டு எந்த ஹீரோவாலும் நடிக்க முடியாது. எனக்கு இணையாக எந்த நாயகனையும் நினைக்கவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, வேறு ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விரைவில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். படத்துக்கான பெயர் ' என் கோமணத்தைக் காணோம்' இந்தப் படத்தில் எனக்கு ஜோடி இரண்டு ஹீரோயின்ஸ்'' என்று நமக்கு ஷாக் கொடுத்து முடித்தார் இந்த சாம்பார் ராசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!