சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியோட ரோல் என்னான்னு தெரியுமா..?!

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியை வைத்து எடுக்கும் திரைப்படம் 'சீதக்காதி'. படத்தில் விஜய் சேதுபதி தவிர வேறு யாரெல்லாம் நடிக்கின்றனர், படத்தின் கதை என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் பாலாஜியை தொடர்புகொண்டோம்.

vijaysethupathi

''சீதக்காதி படத்துக்கு முன்பாக நான் இயக்கிய 'ஒரு பக்க கதை' சென்சார் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது. சென்சார் ரிசல்ட் வந்தவுடன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். முதலில் சென்சார் கமிட்டி கொடுத்த ரிசலிட்டில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதனால், ரீவைஸிங் கமிட்டிக்கு போனோம். அதனால்தான் இந்த தாமதம். 'யு' சர்டிபிகேட் தரேன்னு சொல்லியிருக்காங்க'' என்றவர் சீதக்காதி படத்தைப் பற்றி பேசினார்.

''செத்தும் கொடுத்தார் சீதக்காதினு ஒரு பழமொழி இருக்கும். அந்த மோடில் சொல்லும் கதைதான் சீதக்காதி. இது ஒரு பேமலி டிராமா கதைதான். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கேரக்டர் ஒரு சுவாரஸ்யமாக இருக்கும். இதுவரை அவர் இந்த  கேரக்டரில்  நடித்ததில்லை. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஒரு நடிகராக நடிக்கிறார். ஆனால், அவர் எந்த நடிகராக நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ். 

விஜய் சேதுபதி தவிர இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அவர்களின் கேரக்டராகவே வருவார்கள். பார்வதி நாயர் கதாபாத்திரத்துக்கு முதலில் ஓவியாவைதான் கமிட் பண்ணினோம். ஓவியா கால்ஷீட் கொடுத்த தேதியில் எங்களால் படப்பிடிப்பை நடத்தமுடியவில்லை. அதனால் பார்வதி நாயர் கமிட் ஆனார். அதன்பிறகு ஓவியா 'பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்று விட்டதால் அவரை கான்டெக்ட் செய்ய முடியவில்லை. இவர்கள் தவிர இந்தப் படத்தில் மெளலி சார், அர்ச்சனா மேம் இருக்காங்க. மகேந்திரன் சாருக்கு முக்கியமான ரோல் இருக்கு. ஒரு கலைஞனுக்கும், அவன் சம்பந்தப்பட்ட கலைக்கும் இடையில் உள்ள டிராவல்தான் படம். 

படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான ரோல் பண்றார். அவர் படம் முழுக்க ட்ராவல் பண்ணுவார்னு சொல்ல முடியாது. அதே மாதிரி அர்ச்சனா மேம் படம் முழுக்க வருவாங்க. அவங்களுக்கு ஒரு வலுவான கதாபாத்திரம். அவங்ககிட்ட கதை சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டாங்க.  படத்தில் இன்னும் நிறைய கேரக்டர் இருக்கு. படம் பார்க்கும் போது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்'' என்றார் பாலாஜி தரணிதரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!