``மிஷ்கின் தந்த பரிசு!'' - 'ஒரு குப்பைக் கதை' இயக்குநரின் நெகிழ்ச்சி அனுபவம்! | Mysskin's gift-Director shares his heartfelt experience

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (09/08/2017)

கடைசி தொடர்பு:17:06 (09/08/2017)

``மிஷ்கின் தந்த பரிசு!'' - 'ஒரு குப்பைக் கதை' இயக்குநரின் நெகிழ்ச்சி அனுபவம்!

நடன இயக்குநர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'ஒரு குப்பைக் கதை'. படத்தின் இயக்குநர் காளி ரங்கசாமி, இயக்குநர் எழிலுடன் உதவி இயக்குநராக இருந்து சினிமாவைக் கற்றவர். பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் காளியிடம் 'ஒரு குப்பைக் கதை' படம் பற்றி பேசினோம்.

oru kuppai kadai

''சென்னையில் இருக்கும் வீதிகளில் குப்பை அள்ளி, சுத்தமாக வைத்துக்கொள்ளும் ஒருவர், தனது வாழ்க்கையில் செய்யும் ஒரு தவறால், அவரது வாழ்க்கையில் நிறைய குப்பைகள் சேர்ந்துவிடுகின்றன. அந்தக் குப்பைகளை அவர் எடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இது ஒரு பேமிலி டிராமா ஸ்டோரி. 

இந்தப் படத்தில் முதலில் நடிக்க வைக்க, சமுத்திரக்கனி சாரை அணுகினேன். அவரும் படத்தில் நடிப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலை எல்லாம் நான் செய்துகொண்டிருந்தபோது, சமுத்திரக்கனி 'நிமிரிந்து நில்' படத்தில் பிஸியாகி விட்டார். அதனால், அவர் என்னை அழைத்து, ’நான் மற்ற படங்களில் பிஸியாகிவிட்டேன். என்னால், இந்தப் படத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், வேறு ஒரு ஹீரோவை கமிட் செய்து கொள்ளுங்கள்’ என்றார். அதன் பிறகு, மிஷ்கின் சாரை அணுகினேன். அவர் கதை முழுவதையும் கேட்டுவிட்டு, அவர் கையில் இருந்த விலை உயர்ந்த ஸ்விஸ் கைக்கடிகாரத்தை எடுத்து என் கையில் போட்டுவிட்டார். ஆனால், அவரும் 'பிசாசு' படத்தில் பிஸியாக இருந்ததால் அவரால் பண்ண முடியவில்லை. 

அடுத்தாக அமீர் சாரை அணுகினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாகப் படத்தில் நடிக்க முடியவில்லை. அப்போதுதான் படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம்,  தினேஷ் மாஸ்டர் இந்தப் படத்தில் நடித்தால் நன்றாகயிருக்கும் என்று அவரை அறிமுகப்படுத்தினார். 

oru kuppai kadhai director

இந்தக் கதையை தினேஷ் மாஸ்டரிடம் சொன்னேன். அவர், ’நன்றாகயிருக்கு என் மனைவியிடம் கதை சொல்றேன். அவருக்குப் பிடித்திருந்தால் இந்தப் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். பின்பு, வீட்டுக்குச் சென்று அவரின் மனைவியிடம் கதை சொல்லி, அவருக்கும் பிடித்திருந்ததால் இந்தப் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் நிறைய பேரிடம் கதை சொன்னேன். அனைவரும், ‘கதை ஓகே, இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அதனால் இமேஜ் கெட்டுவிடும்’ என்று மறுத்து விட்டனர். அப்போது மனீஷாவிடம் சொன்னேன். அவர் எதுவும் சொல்லவில்லை. உடனே,  ஓகே சொல்லிவிட்டார்.

இந்தப் படத்தில் ஒரு ரியல் குப்பை வண்டியை எடுத்துவந்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். சென்னையில் இருக்கும் நிஜ குப்பைக் கிடங்கில் கேமராக்களை மறைத்து வைத்துதான் படம் பிடித்தோம். தினேஷ் மாஸ்டருடன் யோகி பாபுவும் நடித்திருக்கிறார். இருவரும் நிஜ குப்பைகளை இந்தப் படத்துக்காக அள்ளினார்கள். தினேஷ் மாஸ்டர் இதற்காக குப்பை அள்ளும் மக்களிடம் சென்று சில பயிற்சியெல்லாம் எடுத்தார். இந்தப் படத்தை அமீர் சாருக்கு போட்டுக் காட்டினோம். அவர், ‘நீங்கள் சொன்னக் கதையை அப்படியே திரைக்கு கடந்தியிருக்கீங்க’ என்று பாராட்டினார். 

தயாரிப்பாளர் அஸ்லம் என் நெருங்கிய நண்பர். அவர் எனக்காகவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். அதே மாதிரி என் பால்யகால நண்பர் ராமதாஸூம் எனக்காக இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஆனார். அரவிந்த் என்ற ஒருவரும் இவர்களுடன் பாட்னர் ஆனார். இந்தப் படத்துக்காக என்னுடன் இருந்த அனைவருக்கும் என் நன்றி'' என்று சொல்லி முடித்தார் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்