வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (11/08/2017)

கடைசி தொடர்பு:21:24 (11/08/2017)

11 மியூசிக் டைரக்டர்ஸ், 3 ஒளிப்பதிவாளர்கள் - ‘சோலோ’ படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்..!

தமிழில் ‘டேவிட்’ படத்துக்குப் பிறகு, பிஜாய் நம்பியார் எடுக்கும் திரைப்படம் ‘சோலோ’. துல்கர் நான்கு கெட்டப்பில் நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கரின் பிறந்த நாளன்று வெளியிட்டது படக்குழு. நாளை வெளியாகவிருக்கும் படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்று சொல்லும் பிஜாய் நம்பியாரிடம் பேசினோம்.

bejoy nambiyar

“தமிழ் மற்றும் மலையாளத்தில் ஸ்க்ரிப்ட் எழுதி உருவாக்கியிருக்கும் திரைப்படம்தான் 'சோலோ'. இந்தப் படத்தில் நான்கு கேரக்டரில் துல்கர் நடித்திருக்கிறார். இது ஒரு மல்டிபிள் ஜானர். படத்தில் நான்கு கதைகள் இருக்கு. 

என்னுடைய படங்கள் அனைத்திலும் நிறைய மியூசிக் டைரக்டர்ஸ், ஒளிப்பதிவாளர் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் இந்தப் படத்தில் 11 மியூசிக் டைரக்டர்ஸ், மூன்று ஒளிப்பதிவாளர்கள். ஸ்க்ரிப்ட் எழுதும்போதே அதை நான் பிளான் பண்ணுவேன். ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் தமிழில் இந்தப் படம் உருவாவதால் இரண்டு மொழிகளிலும் நன்கு தெரிந்த, பேமஸ் ஆக்டர் இருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஸ்க்ரிப்ட் எழுதும்போதே துல்கரை நினைத்துதான் எழுதினேன். 

dulquer salmaan

சென்னை, கேரளா, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினேன். இந்தப் படத்தில் துல்கர் நான்கு கேரக்டரில் நடித்திருந்தாலும், கேரக்டரில் வித்தியாசங்கள் இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரை பற்றியும் கதை செல்லும். அதனால்தான் 'சோலோ'னு டைட்டில் வைத்தேன். ஸ்க்ரிப்ட் எழுதும்போதே இந்த டைட்டில் வைத்துதான் ரெடி பண்ணினேன். துல்கருக்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் நடித்திருக்காங்க. படத்தில் காதலும் இருக்கும், படம் முழுக்க துல்கர் கதாபாத்திரமும் இருக்கும். நான்கு கேரக்டரும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் கொடுத்து எடுத்தோம். இதற்காக துல்கர் மிகவும் மெனக்கெட்டார்.

துல்கரின் நான்கு கேரக்டரில், ஒன்று ஆர்மி கேரக்டர். இந்த கேரக்டர் பெயர் ருத்ரா ராமச்சந்திரன். நாளை படத்தின் டீசரை வெளியிட பிளான் பண்ணியிருக்கோம். டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும்'' என்று கூறி முடித்தார் இயக்குநர் பிஜாய் நம்பியார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்