மெர்சல் பேருக்கு ஏற்ற மாதிரி படமும் மெர்சல்தான்! - நடிகர் சத்யன் #Mersal | Actor sathyan speaks about Mersal

வெளியிடப்பட்ட நேரம்: 09:19 (11/08/2017)

கடைசி தொடர்பு:11:29 (11/08/2017)

மெர்சல் பேருக்கு ஏற்ற மாதிரி படமும் மெர்சல்தான்! - நடிகர் சத்யன் #Mersal

விஜய் நடிப்பில் வெளிவரப்போகும் 'மெர்சல்' படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். விஜய் மூன்று வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகள். படத்தின் காமெடியின் வரிசையிலும் வடிவேல், சத்யன், யோகி பாபு என மூன்று பேர் நடித்துள்ளனர். சத்யன், விஜய்யின் 'நண்பன்', 'துப்பாக்கி' எனப் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவரது காமெடி ட்ராக் எப்படி வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள சத்யனிடம் பேசினோம்.

sathyan

'' மெர்சல் படத்தில் நடிக்கும் அனைவருடனும் எனக்கு ஏற்கெனவே அறிமுகம் இருப்பதால், படப்பிடிப்பு மிகவும் ஜாலியாகதான் இருக்கும். இந்தப் படத்தில் எந்த விஜய்யின் கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்றால், அதற்குப் பதில் சொல்ல மாட்டேன். இந்தப் படத்தில் இதுவரை நான் நடித்தது வரை. விஜய்யுடன் நடித்த காட்சிகளை விட, சத்யராஜ் சாருடன் நடித்த காட்சிகள் தான் அதிகம்.

'நான் சிகப்பு மனிதன்' படத்தில் பாக்யராஜ் சார், செந்தில் சார் கேரக்டர் எப்படி இருந்ததோ அதேபோல் இந்தப் படத்தில் நானும் சத்யராஜும் வருகின்ற சீன்ஸ் இருக்கும். படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி படமும் ரொம்ப மெர்சலாக, மிக பிரமாண்டமாகயிருக்கும். இதுவரை பார்க்காத ஒரு விஜய்யை இந்தப் படத்தில் பார்க்கலாம். அவரது கெட்டப் எல்லோருக்கும் பிடிக்கும்.  இதுதவிர 'குலேபகாவலி' படத்தில் பிரபுதேவாவுடன் நடிக்கிறேன். 'ராஜா ராணி' படத்தில் நயன்தாராவுடன் காமெடி ட்ராக் இருக்கும். அதன் பிறகு, எந்த நடிகையுடனும் காமெடி ட்ராக் இல்லை. ஆனா, 'குலேபகாவலி' படத்தில் எனக்கும் ஹன்சிகாவுக்கும் இடையில் ஒரு சில காமெடி ட்ராக் இருக்கும்'' என்று முடித்தார் சத்யன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்