''என் படத்தில் ட்விஸ்ட் அதிகம்..!'' - குலேபகாவலி இயக்குநர் எஸ்.கல்யாண் | More twist in my movie says Gulebakavali Director Kalyan

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (15/08/2017)

கடைசி தொடர்பு:17:48 (15/08/2017)

''என் படத்தில் ட்விஸ்ட் அதிகம்..!'' - குலேபகாவலி இயக்குநர் எஸ்.கல்யாண்

பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'குலேபகாவலி'. கல்யாண் இயக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரேவதி நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் இந்தப் படத்தின் அப்டேட்ஸூக்காக இயக்குநரிடம் பேசினோம்.

குலேபகாவலி

''இது ஒரு பிளாக் காமெடி படம். பழைய ’குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்கும். ஒரு ஃபிளாஸ் பேக் காட்சியும் இருக்கு. இந்தப் படத்துக்காக பிரபுதேவா நிறைய கெட்டப் போட்டிருக்கிறார். பத்ரி என்ற பெயரில் பிரபுதேவாவும் விஜி என்ற பெயரில் ஹன்சிகாகவும் நடிக்கிறாங்க. 

படத்தின் பாடல் காட்சிகளுக்காக நிறைய மெனக்கெட்டு இருக்கிறோம். பாடல் செட்டுக்காக மட்டும் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்தோம். பனிமலை செட், கார் செட் என எல்லா செட்டையும் திரையில் பார்க்கும்போது எல்லோரையும் பிரம்பிக்க வைக்கும். இந்தப் படத்துக்காக ஹன்சிகாவும் நிறைய கெட்டப்பில் வருவாங்க. படத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கும். இதுக்குமேல் சொன்னால், படத்தின் கதையைப் பற்றிச் சொல்வதுபோல் இருக்கும். அதனால் இதோட ஸ்டாப் பண்ணிக்கிறேன்’’ என்று கூறி முடித்தார் எஸ்.கல்யாண்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close