வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (15/08/2017)

கடைசி தொடர்பு:18:15 (15/08/2017)

கோலிசோடா டீசருக்கு கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்ததன் பின்னணி! - இயக்குநர் விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் 'கோலி சோடா 2'. 2014 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கப்போடு போட்ட 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்தப் படம். இந்தப் படம் கொடுத்த வெற்றியின் காரணமாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மில்டன் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

கோலி சோடா

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது. ஆனால், இந்தப் படத்திலும் சின்ன வயது பசங்க தங்களது அடையாளத்தை தேடுவார்கள் என்று சொல்லியிருந்தார் விஜய் மில்டன். 

இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனியை நடிக்க வைத்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்துக்கு வலுச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் டீசரில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனை பின்னணி குரல் கொடுக்க வைத்திருக்கிறார். இதுபற்றி விஜய் மில்டனிடம் கேட்டோம்.

''இந்த டீசருக்கு இருவர் வாய்ஸ் கொடுத்தால் நன்றாகயிருக்கும் என்று எண்ணினேன். ஒன்று வைரமுத்து சார், அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் சார். இருவரது வாய்ஸூம் வேற ஒரு லெவலில் இருக்கும். அதற்கான வரவேற்பும் ரசிகர்களிடம் அதிகமாகயிருக்கும். அதனால் கெளதம் மேனன் சாரைப் பேசவைத்தேன். டீசர் பார்த்துவிட்டு பலர் திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சில இடங்களில் கெட்ட வார்த்தைகள்கூட வரும்’’ விரைவில் டீசர் வெளியாகும் என்று முடித்தார் விஜய் மில்டன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்