’’திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்..!’’ - நடிகை மனிஷா யாதவ்

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மனிஷா யாதவ். சமீபத்தில் திருமணம் முடித்து பெங்களூருவில் செட்டிலாகியிருக்கும் இவர், தான் நடித்த 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் ரிலீஸாகப்போவதால் தற்போது செம குஷியாகயிருக்கிறார். திருமணத்துக்கு பின்பும் மனிஷா நடிப்பாரா என்ற கேள்வியுடன் அவரைத் தொடர்புகொண்டோம்.

oru kuppai kathai

''ரொம்ப சந்தோஷமாகயிருக்கேன். திருமணத்துக்கு முன்பு நான் நடித்த திரைப்படம்தான் 'ஒரு குப்பைக் கதை'. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்தேன். படத்தின் பெரும்பாலான பகுதியை சென்னையில் நிஜமான குடிசைப் பகுதிகளில்தான் எடுத்தார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது நிறைய மழை பெய்தது. அதனால், இன்னும் அதிகமாகவே கஷ்டப்பட்டோம். 

என்னைவிட படத்தின் ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர் இந்தப் படத்தில் நடிக்க மிகவும் மெனக்கெட்டார். 'வழக்கு எண் 18/9', 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துக்குப் பிறகு, இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை சினிமாவில் வாங்கிக் கொடுக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ஹோம்லி லுக் கேரக்டரில் நடித்திருக்கிறேன்’’ என்றவரிடம், 'ஒரு குப்பைக் கதை' படத்துக்காக விருது கிடைக்குமா என்றால், ’’படம் பண்ணும்போது அப்படி எதுவும் தோணவில்லை. ஆனால், படத்தை எடிட்டிங் முடிந்து பார்த்துவிட்டு சில பேர் இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால், விருதுக்காக இந்தப் படம் பண்ணவில்லை. திருமணத்துக்குப் பிறகு, நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், நல்ல கேரக்டருக்காக வெயிட் பண்ணுறேன். இது எனக்கு ஹாப்பியாக இருக்கு'' என்றார் மனிஷா யாதவ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!