வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (18/08/2017)

கடைசி தொடர்பு:12:00 (18/08/2017)

''நானும் ஆண்ட்ரியாவும் நிறைய அடித்துக்கொண்டோம்!'' - 'தரமணி' வசந்த் ரவி

ராமின் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான திரைப்படம் ' தரமணி'. ஆண்ட்ரியா, வசந்த் ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடமிருந்து லைக்ஸ் வாங்கியிருக்கும் நேரத்தில் படத்தில் நடித்த அறிமுக நாயகன் வசந்த் ரவியிடம் பேசினோம்.

tharamani

''ராம் சாரை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். எப்போதும் அவரிடம் நடிகனாக சான்ஸ் கேட்டுக் கொண்டிருப்பேன். திடீரென்று ஒரு நாள் ராம் எனக்கு போன் பண்ணி 'தரமணி' படத்தின் ஒன்லைன் சொல்லி, 'படத்தின் ஆடிசன் நடந்திட்டு இருக்கு, வந்து கலந்துகொள் ஸ்கீரின் டெஸ்ட் எடுப்போம்' என்றார். அப்போது கிளீன் ஷேவ் பண்ணிதான் இருந்தேன். படப்பிடிப்பு ஆரம்பிக்க ஒரு வருடம் காலம் இருந்தது. அப்போதிலிருந்தே முடி மற்றும் தாடி வளர்க்க ஆரம்பித்தேன். ராம் சார் இந்தப் படத்தில் நடிப்பதற்காக எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணினார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். 

முதலில் இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டில் அஞ்சலி போர்ஷனே இல்லை. அதன்பிறகுதான் அஞ்சலி போர்ஷனை ராம் சார் கொண்டுவந்தார். முதலில் எனக்கான படப்பிடிப்பு ஆண்ட்ரியாவுடன்தான் இருந்தது. ரொம்ப கேஸுவலாக நடந்துகொண்டார். நன்றாக நடித்தால் மனம்திறந்து பாராட்டுவார். அஞ்சலிகூட நடித்ததும் நன்றாகயிருந்தது. எப்போதும் அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்றுதான் அஞ்சலி இருப்பார். நிறைய தாடி வைத்து நடித்ததால் ராம் சாரைப் பார்த்த மாதிரி இருந்தாகச் சிலர் கூறினார்கள். என்னிடமிருந்து நல்ல நடிப்பை இந்தப் படத்துக்காக அவர் வெளியே கொண்டுவந்தார். 

இந்தப் படத்தில் இடைவேளை சீன் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அந்த 4 மினிட் சீன் ஒரே டேக்கில் எடுத்தது. அந்த சீனில் நானும் ஆண்ட்ரியாவும் உண்மையாகவே நிறைய அடித்துக்கொண்டோம். அந்தக் காயம் வீட்டுக்கு வந்தபிறகுதான் தெரிந்தது. அந்தளவுக்கு ரொம்ப ஈடுபாடோட இரண்டு பேரும் நடித்திருந்தோம். இந்தப் படம் என் மனைவிக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டு முறை படம் பார்த்தாங்க. இரண்டாவது முறை என்னைவிட்டு விட்டு தனியாகப் போய் பார்த்துவிட்டு வந்தார். ரொம்ப ஹாப்பியாக இருக்கு. இந்தப் படத்தின் வெற்றிக்காகதான் மூன்றரை வருடம் காத்திருந்தேன். 'தரமணி' மாதிரி தரமான படத்தில் நடிக்க இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார் வசந்த் ரவி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்