அரசியல் நையாண்டிதான் எங்க கதைக்களம்..! - அருள்நிதி | Arulnithi says about Karu Pazhaniappan movie

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (18/08/2017)

கடைசி தொடர்பு:18:20 (18/08/2017)

அரசியல் நையாண்டிதான் எங்க கதைக்களம்..! - அருள்நிதி

'பிருந்தாவனம்' படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. விரைவில் வெளியாகப்போகும் இந்தப் படத்துக்குப் பிறகு, இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்கிறார். இதுபற்றி அருள்நிதியிடம் பேசினோம். 

arul nithi

''மாறனை எனக்கு இரண்டு வருடத்துக்கு முன்பே தெரியும். அப்போது வேறு ஒரு கதையுடன் என்னை சந்தித்தார். அந்தக் கதையை அப்போது பண்ண முடியவில்லை. ‘பிருந்தாவனம்’ படம் முடித்த பிறகு, நிறைய கதைகள் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' பற்றி சொல்லி, மாறனிடம் கதை கேட்கச் சொன்னார்கள். அவரிடம் கதை கேட்டேன் . கதை சொல்லும்போது முழு திரைக்கதையும் பற்றி ஒரு மூன்றரை மணி நேரம் விரிவாகச் சொன்னார்.

ரொம்ப நம்பிக்கையுடன் திரைக்கதைப் பற்றிச் சொன்னார். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட திரைக்கதைப் பற்றி எந்தக் கேள்வியானாலும் சொல்வார். அவர் சொன்னதை அப்படியே திரைக்குக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் படம் பண்ணினேன். ஒரே நாளில் நடக்கும் கதைதான் இந்தப் படம். டாக்ஸி டிரைவராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன்'' என்றவரிடம், கரு.பழனியப்பனின் இயக்கத்தில் நடிக்கப்போகும் புதிய படத்தைப் பற்றிக் கேட்டோம்.

“அரசியல் நையாண்டிதான் இதன் கதைக்களம். செப்டம்பரில் ஷூட்டிங் ஆரம்பமாகப்போகிறது. இதற்குமேல் இந்தப் படத்தைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது” என்றார் அருள்நிதி. இந்தப் படத்துக்கான லொகேஷனைத் தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close