’’என் கையில் மூணு படம்... இப்போ நான் ஒரே பிஸி..!’’ - நடிகர் செந்தில் | Actor Senthil speaks about his upcoming movies

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (19/08/2017)

கடைசி தொடர்பு:09:07 (19/08/2017)

’’என் கையில் மூணு படம்... இப்போ நான் ஒரே பிஸி..!’’ - நடிகர் செந்தில்

'நானும் ரெளடிதான்' படத்துக்குப் பிறகு, சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம்  'தானா சேர்ந்த கூட்டம்'. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், கார்த்திக், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியிட்டது படக்குழு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, செந்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி கேட்க அவரை தொடர்புகொண்டு பேசினோம்.

senthil

''இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. மிகவும் மரியாதையாக என்னை படக்குழு நடத்தியது. படத்தின் கதைக்கு நான் தேவைப்பட்டதால் என்னிடம் கேட்டார்கள். இந்தப் படத்தில் சூர்யா தம்பியுடன் படம் முழுக்க வருவேன். அவருடன் நிறைய காமெடிகள் செய்திருக்கிறேன். என்னை சூர்யா, அண்ணன் என்றுதான் அழைப்பார். நான் அவரைத் தம்பி என்றுதான் கூப்பிட்டேன். படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் நானும் சூர்யாவும் ஒரே ஆபிஸில் ஒர்க் பண்ணுவோம். சூர்யாவின் நண்பனாகப் படத்தில் வருவேன். படத்தின் டூயட் காட்சிகளைத் தவிர எல்லா சீன்களிலும் சூர்யாவுடன் வருவேன். படத்தில் நிறைய காமெடி சீன்கள் இருக்கும். இந்தப் படம் தவிர, இன்னும் மூன்று படங்களில் கமிட் ஆகியிருக்கேன். மறுபடியும் நான் பிஸி ஆகிட்டேன்'' என்று கூறினார் செந்தில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close