‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இயக்குநரின் அடுத்த படம் எப்போது? | Next movie of director Adhik Ravichandran

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (22/08/2017)

கடைசி தொடர்பு:11:01 (22/08/2017)

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இயக்குநரின் அடுத்த படம் எப்போது?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இரண்டு படங்களின் மூலமாகவும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானவர். இவரின் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சென்சார் போர்டின் 'A' சான்றிதழை வாங்கிய இந்தப் படம் வெர்ஜின் பசங்களின் தலைவர் ஜி.வி.பிரகாஷ் குமார் என்ற டைட்டிலை அவருக்குப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு, சிம்புவை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி, கடைசியில் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது.

Adhik Ravichandran

இந்நிலையில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் இயக்குநர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளிவராத நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

“என்னுடைய அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுதும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். அடுத்த மாதம் ஸ்க்ரிப்ட் எழுதி முடித்துவிடுவேன். ஆனால், இது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது. படத்துக்கான கதை மற்றும் நாயகன் பற்றி தற்போது கூறமுடியாது. அடுத்த மாதம் அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்