Published:Updated:

’டார்லிங் டம்பக்கு' ராக் ஸ்டார் அனிருத்துக்கு ஹாப்பி பர்த் டே..! #HBDAnirudh

GEETHAPRIYA G
’டார்லிங் டம்பக்கு' ராக் ஸ்டார் அனிருத்துக்கு ஹாப்பி பர்த் டே..! #HBDAnirudh
’டார்லிங் டம்பக்கு' ராக் ஸ்டார் அனிருத்துக்கு ஹாப்பி பர்த் டே..! #HBDAnirudh

சினிமா இசையுலகில் சிறு வயதிலேயே தனக்கென்று ஒரு அரியாசனத்தைத்  தக்க வைத்துக் கொண்டவர்... தான் இசையமைத்த முதல் படத்திலேயே உலகமறிய செய்தவர்... கொலவெறி பாடல் மூலம் இணையத்தை சுற்றி வந்தவர்... அனிருத் ரவிசந்தர்.

என்னதான் சினிமா குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், அவரோட முழு திறமையால தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சினிமாவில்  தன் முதல் படத்திலேயே வெற்றிக் கனியை ருசித்தவர் அனிருத். இன்று (அக்டோபர் 16) அவரோட பிறந்த நாள். அவருக்குப் பிறந்த நாள் பரிசு தரும் விதமாக அனிருத்தின் சினிமா கெரியரில் சில முக்கியமான தருணங்களை ரிவைண்ட் செய்து பார்ப்போம்.

2011 ஆம் ஆண்டு, லயோலா கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன்பின் சினிமாவில் வெற்றி இசையமைப்பாளராக வலம் வந்தார். அதற்கும் மேலே அனிருத் இசையமைத்த "ஒய் திஸ் கொலவெறி" டியூன் டாப் டக்கராக வலம் வந்தது.

’3’ படத்தின் ரொமான்டிக் பாடல்கள் எல்லாம் இளைஞர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது என்றே சொல்லலாம். சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் பெரும் வரவேற்பு கொடுத்த படம் 'எதிர்நீச்சல்'. அதிலேயும் குத்துப் பாடல், ரொமான்டிக் பாடல் என அசத்திவிட்டார். அப்படியே வணக்கம் சென்னை படத்தில் "ஒசக்க ஒசக்க" பாடலில் கிராமத்து வாசனையை மார்டனாகக் கொடுத்தார். அதே படத்தின் "எங்கடி பொறந்த" பாடல்கள்  ஐ டியூன்ஸில் டாப் பட்டியலில் இடம் பெற்றது.

அடுத்த கொஞ்ச நாட்களிலேயே பல இடங்களிலும் ரிங்டோனாக ஒலித்தது, 'விஐபி' படத்தின் பிஜிஎம். நம்ம ஊர்ல  எல்லாருமே ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாறினாலும்  என்னைக்குமே மாறாத ஒரு விஷயம்  அம்மா சென்டிமென்ட்தான். தமிழ் சினிமாவில் வந்த அத்தனை அம்மா பாடல்களுடனும் கைகோத்து நின்றது, அனிருத் இசையமைத்த "அம்மா அம்மா நீ எங்கே அம்மா" பாடல். 'மான் கராத்தே' படத்தில் "டார்லிங் டம்பக்கு" என மெட்டு போட்டு நம்ம எல்லாருக்குமே டார்லிங் ஆகிட்டார்.

கநாநாயகர்களுக்கு பிஜிஎம் போட்டு தியேட்டர்ல கைதட்டல் வாங்குவது ஒரு ரகம் என்றால், வில்லனுக்கு பிஜிஎம் போட்டு ஹிட் கொடுப்பது அனிருத் ஸ்டைல் என்றே சொல்லலாம். 'கத்தி' பட வில்லனுக்கு இவர் போட்ட பிஜிஎம்மை பலரும் ரிங்டோனான வைத்து சுற்றினர். 

"ஆலுமா டோலுமா" மெட்டு போட்டு தல அஜித்தை ஆட வச்சது மட்டுமில்லாமல் இசைப் பிரியர்களுக்கு ஒரு விருந்து வச்சுட்டார். அப்படியே 'விவேகம்' படத்தில் 'சர்வைவா' பாடல் கொடுத்து ஆட்டம்  குறையாமல் பார்த்துக் கொண்டார். 'காக்கி சட்டை', 'தங்க மகன்', 'நானும் ரெளடி தான்' என  இவர் இசையமைத்த எல்லா படங்களும் ஹிட் அடிக்க, தமிழ் ரசிகர்களின் ப்ளே லிஸ்ட் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது.

இவர் இசையமைத்து பாடின பாடல்கள் ஹிட்டுன்னா, அனி மற்ற  இசையமைப்பாளர்களின் பாடிய பாடல்களும் ஹிட்டுதான். தமிழ் மலையாள ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படம் 'பிரேமம்'. அந்தப் படத்தின் சூப்பர் குத்து பாடலான "ராக்கு குத்து" பாடியது நம்ம அனிதான். 'ஐ' படத்தின் 'மெரசலாகிட்டேன்' பாடல், 'டன்டனக்கான்' என ஏராளமான வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார்.

அமெரிக்காவிலும் சிக்காகோவிலும் மியூசிக் கான்செர்ட் செய்தார். பிலிம் ஃபேர் விருது, இன்டர்நேஷனல் விருது எனப் பல  விருதுகளைக் குவித்துள்ளார். அனிருத்திற்கென்றே விசிறிகள் பட்டாளம் உள்ளது. இளைஞர்களை இசையின் மூலம் சுண்டி இழுக்கும் திறன் பெற்றவர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அனிக்கு பெண் விசிறிகள் ஏராளமோ ஏராளம். அனிருத்தின் குரலுக்கு மயங்காத இசை பிரியர்கள் உண்டோ...!

இசையின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த அனிருத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.