Published:Updated:

‘கமிட்டட்’ ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘டிஸ்கோ’ சாயிஷா, ‘கிரஷ்’ சனா..! - நியூ ஹீரோயின்களின் வாட்ஸ்அப் சாட்

சுஜிதா சென்
‘கமிட்டட்’ ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘டிஸ்கோ’ சாயிஷா, ‘கிரஷ்’ சனா..! - நியூ ஹீரோயின்களின் வாட்ஸ்அப் சாட்
‘கமிட்டட்’ ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘டிஸ்கோ’ சாயிஷா, ‘கிரஷ்’ சனா..! - நியூ ஹீரோயின்களின் வாட்ஸ்அப் சாட்

தமிழ் சினிமாவைக் கலக்கிக்கிட்டு இருக்கிற டாப் ஹீரோயின்ஸ் இவங்கதான். 'விக்ரம் வேதா' ஷ்ரத்தா ஸ்ரீநாத், 'வனமகன்' சயீஷா, 'குற்றம் 23' மஹிமா, 'தொண்டன்' அர்த்தனா, 'ரங்கூன்' சனா மக்பூல், 'பிச்சுவா கத்தி' அனிஷா சேவியர், 'மீசைய முறுக்கு' ஆத்மிகா இவங்க எல்லார்கிட்டேயும் என்னங்க விசேஷம் என்று வாட்ஸ் அப்பில் கேட்டோம். அந்த ‘சாட்’-லிருந்து...

ஷ்ரத்தா ஸ்ரீநாத் :

ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் : கமிட் ஆயிட்டேனே..!

பிடிச்ச சாப்பாடு : பானி பூரி 

ஹாலிடே ஸ்பாட் : ஃபிரான்ஸ் 

பிடிச்ச ஹீரோ : விஜய் சேதுபதி

ஹீரோயின் : நயன்தாரா

பொழுதுபோக்கு : கேக் செய்யுறது. பேக்கரியில பேக்டு ஐட்டம்ஸ் வாங்கவே மாட்டேன். 

டைம் பாஸ் : கார் ட்ரைவிங் 

தமிழ் இண்டஸ்ட்ரியில இருக்குற நெருங்கிய நண்பர் : இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன்

பிடிச்ச படம் : 'காக்கா முட்டை', 'அன்பே சிவம்'

மறக்க முடியாத லவ் ப்ரபோசல் : ஐய்யோ, அதெல்லாம் படத்துல மட்டும்தானே நடந்துருக்கு. நெஜத்துல இதுவரைக்கும் என்னை யாருமே ப்ரபோஸ் பண்ணதே இல்ல. 

யாருக்காகவும் விட்டுத்தராதது :  ஊரு சுத்துறது. எனக்கு எல்லாத்தையும் விட டிராவல்னா அவ்வளவு பிடிக்கும். 

சாயிஷா 

"நீங்க எப்படி ஃபிட்னஸ்ஸை மெயின்டெயின் பண்றீங்க?"

"தினம் ஒருமணி நேரம் டான்ஸ்...டான்ஸ் மட்டும்தான்."

"பிடித்த பழமொழி"

"YOUR DETERMINATION WHEN YOU HAVE NOTHING 

YOUR ATTITUDE WHEN YOU HAVE EVERYTHING"

('மெர்சல்' ஆடியோ லான்ச்ல தளபதி சொன்னது. தளபதி வெறியன்...)

"ரிலேஷன்ஷிப்?"

"எனக்குக் கல்யாணம் காதல் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ்..."

"யாராவது ப்ரபோஸ் பண்ணா என்ன சொல்வீங்க?"

 "எனக்கு டைம் நஹி பேட்டா..!"

"பியூட்டி டிப்ஸ்"

"நிறைய தண்ணி குடிங்க. எதையுமே கேர் பண்ணாதீங்க."

சனா 

"ரங்கூன் படத்துல பாடகி... நிஜத்துலயும் பாடுவீங்களா?"

"சத்தியமா இல்ல. என்னோட குரலைக் கமென்ட் அடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனால பாத்ரூம்லகூட பாடமாட்டேன்."

"கிட்டார் வாசிக்கத் தெரியுமா?" - "அதை எப்படி பிடிக்கணும்னு கவுதம் கார்த்திக்கிட்ட கத்துக்கிட்டேன்."

"கௌதம் கிட்டார் வாசிப்பாரா" - "வாசிப்பாராவா...அவரு சூப்பர் கிட்டாரிஸ்ட்டு"

"கல்யாணம்" - "ஹா ஹா ஹா... நோ வே பாஸ்"

"ஷாருக்கான்" - "லவ்" 

''சல்மான் கான்''   - "க்ரஷ்" 

"அமீர் கான்"  - "ஜிம்"

"அஜித்" - டான்ஸ் 

"ரஜினி" - ஃபேன்

"விஜய்"  - ஹாட் ஹாட் சூப்பர் ஹாட்...!

"அஜய் தேவ்கன்" - I don't Like him 

"அணில் கபூர்' - என்றென்றும் 16

"கமல்ஹாசன்"  பெர்சனாலிட்டி 

அனிஷா சேவியர் 

ரோல் மாடல்: 

"எனக்கு நானேதான் ரோல் மாடல்"

பியூட்டி டிப்ஸ் ப்ளீஸ் :

முடி: "நோ ஷாம்பு. சீயக்காய் வித் வெந்தயம்"

ஸ்கின்: "கடலைமாவு, மஞ்சள் கலந்த கலவை"

ஜூஸ்: "கற்றாழை வித் லெமன்"

சாப்பாடு: "வெஜிடேரியன். நோ ஆயில் ஐட்டம்ஸ்"

பிட்னஸ்: "மூச்சுப்பயிற்சி, பீச் வாக்கிங்"

நடிச்சா இவரோடதான் நடிப்பேன் :  "சூர்யா சார்"

டைம் பாஸ் :  "தூக்கம் - சோஷியல் மீடியா"

யாரோட லவ் :  "சினிமா மட்டும்தான் என்னோட முதலும் முடிவுமான காதல். இந்தக் காதல் கை விட்டுச்சுனாத்தான் கல்யாணமே"

மஹிமா நம்பியார் 

"சமுக வலைதளங்களில் உங்க ஃப்ரொபைலைக் கண்டுபிடிக்க முடியலையே" 

"நோ ஃபேஸ்புக், நோ ட்விட்டர், நோ இன்ஸ்டாகிராம்...எதுலயுமே இல்லங்க." 

"ட்ரீம் ரோல்" -  "ரொமான்டிக் ஹீரோயின் ரோல்ஸ்"

"க்ரஷ்-லவ்வர்-பாய் பிரெண்ட்" - "தல அஜித் சார். அவரு படங்கள்ல ஹீரோயினை பார்த்து ஒரு 'லுக்' விடுவாரு பாருங்க. அதுக்கு மயங்காத பொண்ணுங்களே இல்ல." 

"கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்" -  "க்ரைம்-திரில்லர் வகைப் படங்கள் அத்தனையுமே கட்டாயம் பார்க்கணும்."

"ஆர்.ஜே பாலாஜியோட னே 'அண்ணனுக்கு ஜே' படத்துல நடிக்குறீங்க?" - "ஆமாங்க. ஆனா, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சீன்கூட நடிக்கலை."

"இப்போ 'ஐங்கரன்' படத்துல உங்க ஹீரோவா நடிக்குற ஜீ.வி, நல்ல மியூசிக் டைரக்டரா இல்ல நல்ல நடிகரா?" - "பெஸ்ட் மியூசிக் டைரக்டர்"

"அதிகமா மிஸ் பண்றது" -  "என்னோட டான்ஸ் க்ளாஸ்"

ஆத்மிகா

ரோல் மாடல் :  ஜெயலலிதா, வேலு நாச்சியார் 

நடிச்சா இவரோடதான் நடிப்பேன் :  சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி 

டைம் பாஸ் :  புத்தகங்கள் படிக்கிறது

கலாய்ச்சு ரோஸ்ட் பண்றவங்க கிட்ட இருந்து தப்பிப்பது எப்படி?-  கையெடுத்து கும்பிடுறதைத் தவிர வேற வழியே இல்ல. 

எது உங்களோட ஒரிஜினல் ஃபேஸ்புக் அக்கவுன்ட் :  I am Aathmika. மத்தது எல்லாம் போங்கு. 

கல்யாணம் எப்போ :  கட்டாயம் வீட்ல பாக்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணுவேன். எப்போன்னு சத்தியமா தெரியாதுங்க

சினிமா ஆசை :  நான் நடிக்கிற எல்லாப் படத்துக்கும் நானேதான் டப்பிங் பேசணும்னு ஆசை. 

நரகாசுரன் படத்துல என்ன ஸ்பெஷல்? : பாடல்களே இல்லைங்கிறதுதான் ஸ்பெஷலே

அர்த்தனா  பினு 

எப்படி நடிக்கக் கத்துகிறது? -  கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி எடுக்கணும்

காதல் பற்றிய உங்களோட கருத்து - நான் லவ் பண்ண மாட்டேன். லவ் பண்ணிட்டு பிரேக்-அப் ஆகும்போது ஏற்படுற அந்த வலி ரொம்பக் கொடூரமா இருக்கும். சிங்கிளா இருக்குறதுதான் எப்போதுமே நல்லது.

எப்படி ஸ்கிரிப்டை தேர்ந்தெடுக்கணும்?-  கதை- கதாபாத்திரம் மற்றும் அதைக் கையாளப்போற இயக்குநர். மூணுமே ஒரே கோட்டுல இருந்தா அந்த ஸ்க்ரிப்டுக்கு ஓகே சொல்லிட வேண்டியதுதான். 

எதிர்காலத் திட்டம் - உளவியல் படிக்க காலேஜ்ல அப்ளிகேஷன் போட்ருக்கேன்.