Published:Updated:

“ அட... நீ கலாய் நண்பா’னு விஜய் கேஷுவலா சொன்னார்..!’’ - மெர்சல் அனுபவம் சொல்லும் யோகிபாபு

நா.சிபிச்சக்கரவர்த்தி
“ அட... நீ கலாய் நண்பா’னு விஜய் கேஷுவலா சொன்னார்..!’’ - மெர்சல் அனுபவம் சொல்லும் யோகிபாபு
“ அட... நீ கலாய் நண்பா’னு விஜய் கேஷுவலா சொன்னார்..!’’ - மெர்சல் அனுபவம் சொல்லும் யோகிபாபு

பரட்டை தலை முடி, வெள்ளந்தி சிரிப்பு என எப்போது பார்த்தாலும் உற்சாகமாகவே இருக்கிறார் நடிகர் யோகிபாபு. “தலைவா... நீங்க என்ன வேணாலும் கேளுங்க. பதில் சொல்ல நான் ரெடி.” என்றவரிடம்... "தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானால் என்ன பண்ணுவீங்கனு கேட்போம். பரவாயில்லையா?" என்றதற்கு "ஆஹா... எடுத்த உடனே பாலிடிக்ஸ் எல்லாம் வேண்டாம். அதை கடைசியா வைச்சுக்கலாம்" என அதையும் ஜாலியா எடுத்துக்கொண்டு சிரிக்கிறார் யோகி. 

"உங்களை நினைச்சுப் பார்த்தாலே முதல்ல ஞாபகம் வர்றது உங்க ஹேர் ஸ்டைல்தான். எப்படி முடியை பராமரிக்கறீங்க?"

"ஒரு ரூபாய் சீயக்காய்தான். தலைக்கு குளிச்சுட்டு காலையில ஃபேனுக்கு கீழே வர்ற காத்துல நிற்க வேண்டிதான். அவ்வளவுதான். வேற எதுவும் பண்ணுறதில்லை."

"சின்ன வயசுல புட்பால் பிளேயர் ஆகணும்னு தான் ஆசைப்பட்டீங்களாமா?"

"ஆமாங்க. லீவு நாட்களில் எல்லாம் எங்க ஏரியா கிரவுண்ட்ல தான் விளையாடிட்டு இருப்பேன். அந்த சமயத்துல புட்பால் ப்ளேயர் ஆகணும்னு ஆசைப்படேன். அப்புறம் அப்பா ஆர்மியில் இருப்பதால், அதை வைச்சு ஸ்போர்ட்ஸ் கோட்டால சேரலாம்னு ஆசைப்பட்டேன். அது மிஸ் ஆகிடுச்சு. அப்புறம்தான் சினிமா பக்கம் வந்தேன்."

"சினிமாவுல முதன்முதலில் எப்படி வாய்ப்பு கிடைச்சது?"

"சில கம்பெனிகளில் வேலை செஞ்சேன். அப்புறம் அந்த வேலை பிடிக்காம அதையும் விட்டுட்டேன். அப்பதான் என் நண்பர் ஒருத்தர் கூப்பிட்டார்னு 'லொள்ளு சபா' செட்டுக்கு போய் இருந்தேன். அப்ப இயக்குநர் ராம் பாலா சார் என்னைப் பார்த்தார். 'யாரு இவன் வித்தியாசமா மண்டையை வைச்சுட்டு சுத்திட்டு இருக்கான்'னு கூப்பிட்டு பேசினார். 'நடிக்க கூப்பிட்டா நடிப்பீங்களா?'னு கேட்டார். 'நிச்சயம் நடிக்கறேன் சார்'னு சொன்னேன். அங்க ஆரம்பிச்சதுதான் என் சினிமா கெரியர். அப்புறம் உள்ளே வந்தேன். சினிமால எல்லாரையும் போல கஷ்டப்பட்டேன். அப்புறம் அதுல இருந்து மீண்டு வந்துட்டேன்."

"உங்களுக்கு மனசு சோர்வாக இருந்தால் அடிக்கடி திருத்தனி முருகன் கோவிலுக்கு போய்டுவீங்களாமே?"

"என் மூஞ்சியைப் பார்த்தால் அரக்கன் மாதிரிதான் இருப்பேன். ஆனா, நான் முருகரின் தீவிரமான பக்தன். சின்ன வயசுல இருந்தே முருகரை ரொம்ப பிடிக்கும். நான் வேலை செய்யாம இருந்த நேரத்துல வீட்டுல எனக்கு மரியாதை இல்லை. என் ஃப்ரெண்ட்ஸும் என்னைக் கூப்பிட்டு பேச யோசிச்சாங்க. ஒரு டைம்ல ரொம்ப நொந்து போய்ட்டேன். கையில வெறும் 200 ரூபாய் வைச்சிட்டு பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ட்ல உட்கார்ந்திருந்தேன். திருத்தனி பஸ் ஒண்ணு வந்தது. அதுல ஏறி உட்கார்ந்துட்டேன். திருத்தனி போனதும் மலை மேல ஏறிட்டேன். யாருமே அப்ப அங்க இல்லை. நான் வேண்டிட்டு அங்க இருந்து வந்தேன். அப்புறம் தலைவன் முருகன் என் வாழ்க்கையை மாத்திவிட்டுட்டான். அதனால் தான் அடிக்கடி திருத்தனி போறேன். கடவுள் பக்தி எனக்கு இருக்கு. அதனால் அப்படி சொல்லுறேன். இல்லாதவங்க இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கலாம்."

"உங்க காமெடிக்கு ஒரு தனித்துவம் இருக்கே. அதை ப்ளான் பண்ணி உருவாக்கினீங்களா?"

"டைரக்டர் சொல்லுறதை நான் பண்ணுறேன் அவ்வளவுதான். இதுக்காக ப்ளான் எல்லாம் எதுவும் பண்ணுறதில்லைங்க."

" 'மெர்சல்' படத்துல  சமந்தா விஜய்க்கு ரோஸ் மில்க் வாங்கித்தர மாதிரி உங்களுக்கு யாராவது ரோஸ் மில்க் வாங்கி தந்து இருக்காங்களா?"

"அட... நீங்க வேற. எனக்கு யாரும் டீ கூட வாங்கி தந்தது இல்லைங்க. ஆனா, 'மெர்சல்' படம் ஷூட்டிங் போது விஜய் சார் அவ்வளவு பேசினார். அவர் கூட நடிச்சதே சூப்பர் அனுபவம்.  அவர் ஏதாவது சொல்வார். நானும் கம்முனு இல்லாம ஏதாவது கவுண்டர் கொடுப்பேன். எல்லாத்தையும் இயல்பா எடுத்துகிட்டாருங்க. 

ஒரு சீன் நடிக்கும்போது ஸ்பாட்லயே விஜய் சாரை செமயா கலாய்ச்சுட்டேன். சமந்தா, விஜய் சார்கிட்ட 'தம்பி இங்க யார்ரா அஞ்சு ரூபாய் டாக்டர்'னு கேட்பாங்க. அதுக்கு விஜய் சார், 'இங்க யாரைப் பார்த்தா பர்சனாலிட்டியா இருக்காங்களோ... அவங்கதான் அஞ்சு ரூபாய் டாக்டர்'னு சொல்லுவார். உடனே நான் 'அப்ப நீ இல்லை... போய்ட்டு வா'னு சொல்லிடுவேன். அதை அப்படியே ஏத்துகிட்டார். இப்ப இருக்கும் ஹீரோஸ் ஏத்துப்பாங்களானு தெரியலை. இன்னொரு சீன்லயும் அவரை கலாய்க்கிறமாதிரி ஒரு டயலாக் பேசணும்னு சொன்னாங்க. நான் பயந்துட்டு பேசலை. விஜய் கூப்பிட்டு 'அட.. நீ கலாய் நண்பா'னு தட்டிக்கொடுத்தார். வடிவேலு சார் கூட நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு."

"இனி வரும் படங்களிலும் காமெடியனாகதான் நடிக்கணும்னு நினைக்கறீங்களா அல்லது கேரக்டர் ரோலிலும் நடிப்பீங்களா?"
"உங்களை ஹீரோவாக நடிக்கக் கூப்பிடறாங்களாமே?"
"யாருக்கு  முதல் முத்தம் கொடுத்தீங்க?
"யார்கூட டேட்டிங் போனீங்க?"
"சரி.. நான் முதல்ல கேட்ட மாதிரி, திடீர்னு ஒருநாள் தமிழ்நாட்டின் முதல்வரானால் என்ன செய்வீங்க?" இப்படி பல கேள்விகளுக்கும் விரிவான பதிலை சொல்லி இருக்கிறார் யோகிபாபு. 

அந்த வீடியோவை முழுமையாக பார்க்க... 

...