Published:Updated:

அதுவேவா? இல்ல வேறயா? - தானா சேர்ந்த ஸ்பெஷல் 26!

அலாவுதின் ஹுசைன்
அதுவேவா? இல்ல வேறயா? - தானா சேர்ந்த ஸ்பெஷல் 26!
அதுவேவா? இல்ல வேறயா? - தானா சேர்ந்த ஸ்பெஷல் 26!

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'தானா  சேர்ந்த  கூட்டம்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாகப் பேசுப்பட்டு, `டீசர் சும்மா பத்திக்கிச்சு' என விளம்பரம் கூட வந்துவிட்டது.

படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே, `இது ஸ்பெஷல் 26' ரீமேக்தான் என முணுமுணுக்கப்பட்டது. ரீமேக்கா இல்லையா எனப் படக்குழுவிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றாலும், படத்தின் டீசரில் `ஸ்பெஷல் 26' அடையாளங்கள் பளீரெனத் தெரிகிறது. அக்ஷய் குமார் நடிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வந்த படம் 'ஸ்பெஷல் 26' (Special 26). டீசரில் சில மாறுதல்கள் ஆங்காங்கே தென்பட்டாலும் பிரதான கதாபாத்திரங்கள், காட்சிகள் 'ஸ்பெஷல் ஜப்பீஸ்'ஐ  அப்படியே பிரதிபலிக்கிறது என்பது நம் கண்டுபிடிப்பு (ரொம்ப கஷ்டம் இல்ல பாஸ்).

அனுபம் கேர் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், மற்றொரு நண்பர் கதாபாத்திரத்தில் சத்யன்

முக்கியமான (உண்மையான சிபிஐ ) கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாய் கதாபாத்திரத்தில் நவரசநாயகன் கார்த்திக்

போலீஸிலிருந்து நாயகனுக்கு உதவும் கதாபாத்திரத்தில் கலையரசன்

காஜல் அகர்வால் மற்றும் மும்பை பஸ்சுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் மற்றும் சென்னை பஸ்

ஆங்காங்கே சில மாஸ், எமோஷனல், த்ரில்லர் சீன்கள் எனப் பத்துப் பொருத்தமும் அளவாய் பொருந்தியது தற்செயலா இருக்க சான்சே இல்லை

எனினும் இது  அஃபீஷியல் ரீ-மேக் என எந்த ஒரு தகவலும் வெளியாகவும் இல்லை. மூலக் கதை என யாருக்கும் 'கிரெடிட்ஸ்' அளிக்கப்படவும் இல்லை. எழுத்து - இயக்கம் விக்னேஷ் சிவன் என்று வருகிறது. ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 'ஸ்பெஷல் ஜப்பீஸ்' (Special 26) திரைப்படமே 1987ஆம் வருடம் நடந்த  தொடர் போலி சிபிஐ ரைடுகளை (பின்னாளில் 'ஒப்பேரா ஹவுஸ் ராபேரி' - opera house heist என்று அழைப்பட்டது) அடிப்படியில் எடுக்கப்பட்டதுதான். 

அந்தச் சம்பவம்,

மார்ச் 17ம் தேதி பத்திரிகை ஒன்றில் "ரகசிய உளவுத்துறை பணிகளுக்கு 50 நபர்கள் தேவை. தகுதியான பட்டதாரிகள் நேர்காணலுக்கு வரவும்" என முகவரியுடன் கூடிய விளம்பரத்தை மோகன் சிங் என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது. அந்த நேர்காணலின் முடிவில் தோராயமாக 26  நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் நாளை ஒத்திகைக்காக ஒரு சோதனைக்குச் செல்ல இருக்கிறோம். நாளை இதே இடத்தில் சந்திக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதே போல் மறுநாள், ஓபேரா ஹவுஸ் நகைக்கடைக்குள் இந்தக் குழுவுடன் சிங் நுழைந்து தன்னை கடை உரிமையாளரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, வருமான வரி சோதனைக்கான சர்ச் வாரண்டைக் காண்பிக்கிறார். உடனடியாக அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படுகிறது, உரிமையாளரின் லைசன்ஸ் துப்பாக்கியும் ஒப்படைக்கப்படுகிறது. கணக்கில் வராத பணம், நகைகள், பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. அந்த நகை மற்றும் பணத்தை தாங்கள் வந்த பேருந்தில் எடுத்துச் செல்ல உத்தரவிட்டுகிறார் சிங். நேர்காணலில் தேர்வான நபர்களிடம் கண்காணிப்பிலிருக்குமாறு கூறிவிட்டு, நான் அந்தப் பேருந்தைப் பின் தொடர்ந்து கண்காணிக்கிறேன் எனக் கூறி தானும் கிளம்புகிறார். அதற்கு ஒரு மணிநேரத்திற்குப் பிறகு கடை உரிமையாளருக்குச் சந்தேகம் வந்து காவல்துறைக்கு அழைத்துச்சொல்ல, பின்புதான் நடந்திருப்பது ஒரு கொள்ளை என்றே தெரியவருகிறது. விசாரணையைத் தொடங்கிய காவல் துறைக்கு அவன் தங்கியிருந்த அறை எண் 415 என்றும், மார்ச் 17ம் தேதி விளம்பரம் கொடுத்திருக்கிறான் என்ற விவரங்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஹோட்டலில் கொடுத்த முகவரியை வைத்து கேரளாவுக்கும், பின்பு துபாய் வரையும் போய் தேடியும் இதில் ஈடுபட்டவர்கள் பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை. எனவே, தேசிய அளவில் இந்தக் கொள்ளை சம்பவத்தைப் பற்றிய தகவலைத் தெரிவித்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிக்கிறது காவல்துறை. மொத்தமாக 30லிருந்து 35 லட்சம் வரை கொள்ளையடித்த இந்தச் சம்பவம்தான், கொஞ்சம் முன் கதை சேர்க்கப்பட்டு `ஸ்பெஷல் 26' படமாக மாறியது.

இப்படி அதே உண்மை சம்பவத்தை வைத்து, 'தானா  சேர்ந்த  கூட்டத்தை' புதிய வெர்ஷனில் விக்னேஷ் சிவன் அண்ட் கோ எடுத்திருக்கலாம், அல்லது ரீமேக் ரைட்ஸ் வாங்கியும் எடுத்திருக்கலாம் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது. என்னமோ போங்க இந்தப் பொங்கலுக்கு நமக்கு ஒரு நல்ல படம் வந்தா சரி...  சொடக்கு மேல சொடக்குப் போடுவோம்!