Published:Updated:

'பிக்பாஸ்' வின்னர் ஆரவ் இப்போ என்ன பண்றார்? #VikatanExclusive

சுஜிதா சென்
'பிக்பாஸ்' வின்னர் ஆரவ் இப்போ என்ன பண்றார்?  #VikatanExclusive
'பிக்பாஸ்' வின்னர் ஆரவ் இப்போ என்ன பண்றார்? #VikatanExclusive

பிக்பாஸ் ஃபீவர் முடிஞ்சு, நம்மளோட வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். அதுல, டைட்டில் வின் பண்ண ஆரவ் இப்போ ஆளையே காணோம். சீக்ரெட்டா நிறைய பிளான் வெச்சிருப்பார்னு நெனச்சு அவர்கிட்ட சில கேள்விகளைக் கேட்டோம். 

“பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்ததுக்குப் பிறகு லைஃப் எப்படி இருக்கு?”

“என்னை எங்க ஃப்ரீயா விட்டீங்க? பிக்பாஸ் வீட்ல இருந்து வெளிய வந்த உடனே, எந்தப் பக்கம் திரும்பினாலும் இன்டர்வியூ மயம்தான். இனி நான் பெரிய ஹீரோவா மாறுனாகூட இந்த அளவுக்குப் பேட்டி எடுப்பார்களானு தெரியலை. பிக்பாஸ்ல வர்றதுக்கு முன்னாடியே நிறைய விளம்பரப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சுட்டேன். நான் மீடியால ஓரளவுக்குப் பரிச்சயமான முகம்னு சொல்லலாம். ஆனா, அப்போல்லாம் என்னை அடையாளம் கண்டுக்காத மக்கள், இப்போ எங்கே பார்த்தாலும், 'ஆரவ்... ஒரு செல்ஃபி எடுக்கலாமா'னு ஆரம்பிச்சு, 'சீசன்-2வுல கலந்துக்குவீங்களா?' வரை... கேள்விகளா கேட்டுத் திணறடிக்கிறாங்க. மக்களோட இந்த லவ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."

"பரிசுத் தொகையை என்ன பண்ணீங்க?" 

"எல்லாப் பணத்தையும் தொண்டுக்காக ஒத்துக்கிட்டேன்னா, அப்புறம் எனக்கென்ன இருக்கும்... அதனால, பாதி பணத்தை வெச்சு திருநெல்வேலியில ஒரு என்.ஜி.ஓ தொடங்கியிருக்கோம். என்னோட நண்பர்கள்தாம் இதுக்கு முழுக்க உறுதுணையா இருந்தாங்க. தமிழ்நாட்டுல எந்தவொரு தேவை இருந்தாலும் இந்த என்.ஜி.ஓ அந்த இடத்துல உள்ள மக்களுக்கு உதவி செய்யும். நான் உட்பட எல்லோரும் அந்த இடத்துல இருப்போம். சுருக்கமா சொல்லணும்னா, ஆபத்துல இருக்குற மக்களுக்கு உதவுறதுதான் இந்த அமைப்போட நோக்கம். மதம், இனம், மொழி கடந்து இந்த அமைப்பு செயல்படணும்னு குறிக்கோள் வெச்சிருக்கோம்." 

"விளம்பரங்களுக்கு குட்-பை சொல்லிட்டீங்களா?"

"விளம்பரப் பட வாய்ப்புகள் நிறைய வந்துக்கிட்டுதான் இருக்கு. இப்போதைக்கு அதுல நடிக்கவேண்டாமேனு பார்க்குறேன். ரெண்டு மூணு படங்கள் பண்ணதுக்குப் பிறகு விளம்பரங்களுக்கு நான் போகலாம். ஆனா, இப்போ என்னோட கவனம் முழுவதும் சினிமாவுலதான் இருக்கு. ரகசிய போலீஸ் கதாபாத்திரம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி செமயா ஒரு திருடன்-போலீஸ் கதையில நடிக்கிறதுதான், என் கனவு."

"என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?"

"ஆமா, வாழ்க்கை ரொம்பவே மாறிருச்சு. அதனால மக்கள் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான ஸ்கிரிப்ட்களைக் கேட்டுட்டு இருக்கேன். அப்படி எனக்கு வந்ததுதான், ‘சிலம்பாட்டம்' பட இயக்குநர் சரவணன் சாரோட கதை. சரவணன் சார் சிறந்த ஒளிப்பதிவாளர். அதுதவிர, இந்தப் படம் அவருக்குச் சிறந்த இயக்குநர் என்ற பெயரையும், எனக்குச் சிறந்த நடிகர்ங்கிற பெயரையும் கட்டாயம் வாங்கிக்கொடுக்கும்னு நம்புறேன். ஷூட்டிங் இப்போதான் தொடங்கியிருக்கு. 24 மணிநேரமும் பட வேலைகளைப் பார்க்குறதுக்கே சரியா இருக்கு. 'சிறந்த கதைக்காக ஒரு நடிகன் வில்லனா மாறலாம், ஹீரோவா மாறலாம், ஏன்... குணச்சித்திர நடிகராகூட மாறலாம்'ங்கிற மைண்ட் செட்லதான் நான் இருக்கேன். நடிப்புக்காக நடனம் மற்றும் சண்டைப் பயிற்சிகளுக்கு கிளாஸ் போய்க்கிட்டு இருக்கேன். சண்டைப் பயிற்சி எனக்கு ரொம்பவே பிடிச்ச ஒண்ணு. மாடலிங்ல இருந்தப்பவே இந்த மாதிரியான பயிற்சிகள்ல ரொம்ப ஈடுபாடோட இருந்தேன். இப்போ அடுத்த லெவலுக்குப் போகணும்ங்கிற எண்ணத்துல கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்கேன். நண்பர்கள் மற்றும் உறவினர்களோட உட்கார்ந்து பேச நேரமே இருக்கமாட்டேங்குது. எல்லாரும் என்னை ரொம்பவே மிஸ் பண்றாங்க."

" 'பிக்பாஸ் சீஸன்-2'ல கலந்துப்பீங்களா?"

"செம கெத்தா போயிட்டு வரவேண்டியதுதான். ஆனா, கண்டிப்பா ஹவுஸ் மேட்டா போகமாட்டேன். ஏன்னா, நான் ஒரு பிக்பாஸ் மெட்டீரியல்னு பார்க்குறவங்க மனசுல பதிஞ்சிடும். பிக்பாஸ் மூலமா எனக்கு நிறைய பலன்கள் கிடைச்சிருக்கு. அது மத்தவங்களுக்கும் கிடைக்கணும்னு ஆசைப்படுறேன்."