Published:Updated:

'டிடி' நடிப்பில் 'மின் முத்தம்' ... 'அனிருத்'தின் ஜூலி ... பிரபலங்களின் காதலர் தின ஸ்பெஷல் சிங்கிள்ஸ்

அலாவுதின் ஹுசைன்
'டிடி' நடிப்பில் 'மின் முத்தம்' ... 'அனிருத்'தின் ஜூலி ... பிரபலங்களின் காதலர் தின ஸ்பெஷல் சிங்கிள்ஸ்
'டிடி' நடிப்பில் 'மின் முத்தம்' ... 'அனிருத்'தின் ஜூலி ... பிரபலங்களின் காதலர் தின ஸ்பெஷல் சிங்கிள்ஸ்

‘எல்லா நாளும் காதல் தினமே’ என்பார்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்கள், ‘காதலர் தினம்’ என்றால் கொண்டாடித் தீர்த்து விடுவார்களே. அவர்கள் இந்த காதலர் தினத்துக்கு என்ன ஸ்பெஷல் வைத்திருக்கிறார்கள், பார்ப்போம். 

ஜூலி - #julie

அனிருத்- விக்னேஷ் சிவன் கூட்டணி, ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பது வழக்கம். 2015ல், ‘ஆக்கோ’ படத்துக்காக 'எனக்கென யாரும் இல்லயே ' பாடலை விக்னேஷ் சிவன் எழுத, இசையமைத்து பாடி இருந்தார் அனிருத். இதே கூட்டணி 2016ம் ஆண்டு காதலர் தினத்துக்கு, 'அவளுக்கென' என்று ஒரு இண்டிபென்டென்ட் பாடல் போட்டார்கள். வழக்கம்போல் அதுவும் வேற லெவல் ஹிட். கடந்த 2017 காதலர் தினத்துக்கு 'ஒண்ணுமே ஆகால' என்றார்கள். இப்படி ஒவ்வொரு காதலர் தினத்தையும் கன்டென்ட்டாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்த காம்பினேஷனின் இந்த வருட ஸ்பெஷல், ‘ஜூலி’. இந்தத் தலைப்பில் ரெடி செய்யும் இந்தப் பாடலை நாளை வெளியிடுகிறார்கள். இதில் என்ன சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று காத்திருந்து கேட்போம். 


ஜுங்கா = #junga

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் வெளிவந்து ஐந்து வருடங்கள் ஆன நிலையில், இயக்குநர் கோகுல்- விஜய் சேதுபதி காம்போ மீண்டும் இணையும் படம் 'ஜுங்கா'.சயிஷா சேகல் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி. இந்தப்படத்தின் பெரும்பகுதி ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் படப்பிடிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி மாதம் வெளியான டீசரைத் தொடர்ந்து, சித்தார்த் விபின் இசையில், ரனினா ரெட்டி-சத்யப்பிரகாஷ் பாடியுள்ள ‘கூட்டிப்போ கூடவே’ என்ற ஒரு பாடல் மட்டும் ‘ஜுங்கா’வில் இன்று வெளியானது

கோலி சோடா 2 

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'கோலி சோடா' திரைப்படம் அனைவரது வரவேற்பையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. நான்கு வருடங்கள் கழித்து, இதன் அடுத்த பாகத்தை புது கூட்டணியுடன் இணைந்து இயக்கியுள்ளார். இந்த ‘கோலிசோடா-2’வின் ட்ரெயிலரை விஜய் சேதுபதி நாளை வெளியிடுகிறார்.       


உலவிரவு   

குறும்படங்கள், பேட்டிகள், பாடல்கள்... என தன் படைப்புகள், தனக்குப் பிடித்த மற்றவர்களின் படைப்புகளை பகிரும் தளமாக கௌதம் வாசுதேவ் மேனன் தொடங்கிய யூ-டியூப் சேனல் ‘ஒன்றாக’. இதில், இன்டிபென்டன்ட் மியூசிக்கை ஊக்கப்படுத்தும் வகையில், ‘ஒரிஜினல்ஸ்’ என்ற தலைப்பில் பாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார், கௌதம். முதலில் ‘கூவ’ என்ற அந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, கார்த்திக் இசையமைத்துப் பாடினார். அதில் டான்சர் சதீஷை வைத்து இயக்கியிருந்தார் கௌதம். அடுத்து காதலர் தினத்துகாக கார்த்திக், மதன் கார்க்கி, கௌதம் மேனன் காம்பினேஷனில் உருவாக்கியுள்ள பாடல் ‘உலவிரவு’. திவய்தர்ஷினி(டிடி) நடித்திருக்கும் இந்த வீடியோவும் நாளை வெளியாகிறது. 

பியார் பிரேமா காதல் 

ஹரிஷ் கல்யாண்,  ரைசா நடிப்பில் உருவாகி வரும் படம், ‘பியார் பிரேமா காதல்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் இந்தப்படத்தை, ‘கிரகணம்’ படத்தின் இயக்குநர் இளன் இயக்கி வருகிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியானது. 

ஒரு குப்பைக் கதை
இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ், மனிஷா யாதவ்  நடித்து இருக்கும் படம், ‘ஒரு குப்பைக் கதை’. விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய  'விலகாதே என்னுயிரே' என்ற பாடலை நாளை வெளியிடுகின்றனர் 


மெட்ரொ சிரிஷின் ‘மொரட்டு சிங்கிள்’

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘மெட்ரோ’ சிரிஷ் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் நாளை வெளியாக உள்ளது. ‘மொரட்டு சிங்கிள்’ என்ற அடைமொழியுடன் வரும் இந்த ஒரு பாடலும் நாளைதான் வெளியாக உள்ளது. 

ஆர்.கே.நகர்

வைபவ், சனா அல்தாஃப், அஞ்சனா, சம்பத் உள்பட பலர் நடித்து இருக்கும் படம் ‘ஆர்.கே.நகர்’. பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைத்து உள்ளார். சரவண ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு தயாரித்து உள்ளார். இதில் இருநது, ‘பப்பர மிட்டாய்’ என்ற பாடல்  நாளை வெளியாகிறது. 

இப்படி பல  பாடல்கள், டீசர்கள், ட்ரெயிலர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி  வெளியாகிறது.