Published:Updated:

''த்ரிஷாவின் ஆசை, தமன்னாவின் விருப்பம், மம்தாவின் ரீ-என்ட்ரி, 'அம்மா' சன்னி லியோன்..." #QuickSeven

சுஜிதா சென்
''த்ரிஷாவின் ஆசை, தமன்னாவின் விருப்பம், மம்தாவின் ரீ-என்ட்ரி, 'அம்மா' சன்னி லியோன்..." #QuickSeven
''த்ரிஷாவின் ஆசை, தமன்னாவின் விருப்பம், மம்தாவின் ரீ-என்ட்ரி, 'அம்மா' சன்னி லியோன்..." #QuickSeven

ன்னி லியோன் மற்றும் டேனியல் வெபர் தம்பதியினர், வாடகைத் தாய் மூலம் சில வாரங்களுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு 'நிஷா' என்கிற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இதுகுறித்து சன்னி லியோன் கூறியதாவது, "இது கடவுளின் திட்டம்! வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் திட்டத்தை நாங்கள் முன்னரே தீர்மானித்துவிட்டோம். தற்போது ஆஷர், நோவா மற்றும் நிஷா ஆகிய மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர்களாகிவிட்டோம் என்பதை நினைக்கும்போது, பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. கடவுள் எங்களுக்குப் பெரிய குடும்பத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இவரது சமூக வலைத்தள பக்கங்களில் இவருடன், டேனியல் வெபர் மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டு, அது வைரலாகி வருகிறது. 

'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார். இதில், 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மெஹ்ரின் பிர்ஸாடா, கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், வம்சி, சந்தீப் ரெட்டி வங்கா, அல்லு அரவிந்த், ஸ்வப்னா தத்து போன்ற தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும் எனத் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இதற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அடுத்த மாதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

யக்குநர் திருவின் 'மிஸ்டர். சந்திரமௌலி' திரைப்படத்தின் ஷூட்டிங் குறிக்கப்பட்ட நேரத்தில் முடிவடைந்தது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் வரும் ஒரேயொரு பாடலின் ஷூட்டிங் மட்டும் இன்னும் முடிவடைய வேண்டியிருக்கிறது என்றும், அதற்குப் படக்குழுவினர் மார்ச் 17- ம் தேதி அன்று பாங்காக் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிருந்தா இப்பாடலுக்கு நடனம் அமைக்கவிருக்கிறார். கார்த்தி, கெளதம் கார்த்தி, ரெஜினா, விஜி சந்திரசேகர், வரலக்ஷ்மி சரத்குமார், அகத்தியன் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இதற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தைத் திரையில் எதிர்பார்க்கலாம்.  

'சிவப்பதிகாரம்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான மம்தா மோகன்தாஸ், தற்போது தமிழில் 'ஊமை விழிகள்' படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இவர் நடிக்கும் படம் இது. இப்படம் 1986-ம் ஆண்டு, விஜயகாந்த் நடித்து வெளிவந்த 'ஊமை விழிகள்' படத்தின் ரீமேக் அல்ல என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் முழு படப்பிடிப்பும் ஊட்டியிலேயே நடைபெறும் என்றும், ஆக்ஷன்-த்ரில்லர் ஜானராக இப்படம் உருவாகவிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.  

1979-ம் ஆண்டு வெளிவந்த 'நீயா' படம் இந்தியில், 'நாகின்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும், தமிழில் இதன் பார்ட்-2 படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்தில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தை எல்.சுரேஷ் இயக்கயிருக்கிறார். வரலக்ஷ்மி, ராய் லக்ஷ்மி மற்றும் கேத்ரின் தெரசா இவர்கள் மூவரும் கதாநாயகியாக நடிக்க இருக்கின்றனர். 'வத்திக்குச்சி' படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ஷபீர் இப்படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். 'நீயா' படத்தின் முதல்பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் திரில்லர் கலந்த ரொமான்டிக் காட்சிகள் இருக்கும் என்று இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு தலக்கோணம் மற்றும் சாலக்குடி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படப்பிடிப்பை மதுரை மற்றும் வடசென்னையில் நடத்த இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். 

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்துவரும் த்ரிஷாவுக்கு இதுவரை ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதுதான், 'சினிமாவில் தனக்கு இருக்கும் ஒரே குறை' என்று கூறியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக கோலிவுட்டிலிருந்து அனுஷ்கா மற்றும் நயன்தாராவும், பாலிவுட்டிலிருந்து ராதிகா ஆப்தே, தீபிகா படுகோன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோரும் பரிசீலனையில் உள்ளனர். இந்நிலையில்தான், ரஜினியுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் இருப்பதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். 

மிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துவரும் தமன்னா தற்போது கன்னடப்படத்தில் நடிப்பதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளார். கன்னடத்தில் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் சேர்ந்து நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் தமன்னா. கன்னட பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த தமன்னா, 'நான் கன்னடப் படங்களில் நடிக்க வேண்டும் என்றால், கட்டாயம் புனித் ராஜ்குமார் அதில் ஹீரோவாக நடிக்க வேண்டும்' என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இதற்குப் பதில் அளித்த புனித், "கட்டாயம் தமன்னா கன்னட சினிமாவுக்கு வருகை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து விரைவில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.