Published:Updated:

``உங்கள் வாழ்க்கையில் ராம் யார்.. உங்கள் ட்விட்டரின் அட்மின் யார்?" - open talk வித் த்ரிஷா

அலாவுதின் ஹுசைன்

சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கின் மூலமாக ரசிகர்களுடன் உரையாடினார், நடிகை த்ரிஷா. அந்த உரையாடலில் சுவாரஸ்யமான கேள்வி, பதில்களின் தொகுப்பு.

``உங்கள் வாழ்க்கையில் ராம் யார்.. உங்கள் ட்விட்டரின் அட்மின் யார்?" - open talk வித் த்ரிஷா
``உங்கள் வாழ்க்கையில் ராம் யார்.. உங்கள் ட்விட்டரின் அட்மின் யார்?" - open talk வித் த்ரிஷா

மூக வலைதளங்கள் நமக்கு மிகவும் பிடித்த பிரபலங்களைப் பற்றிய அப்டேட்ஸ் தெரிந்துகொள்ளும் தளமாகப் பயன்பட்டுவருகிறது. பிரபலங்களும் ரசிகர்களுக்கும் தங்களுக்குமான ஒரு பாலமாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான `96' படத்தின் வெற்றி, `பேட்ட' படத்தில் ரஜினியுடன் நடித்தது என சந்தோஷத்தில் இருக்கும் த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் `#AskT' என்ற ஹேஷ்டேக் மூலமாக கேள்வி நேரம் ஒன்றை நடத்தினார். அதில், த்ரிஷாவின் திருமணம், பள்ளிக் காதல்... என ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்தார், த்ரிஷா. அந்த உரையாடலின் சுவாரஸ்யமான தொகுப்பு இது.  

``சமீபத்தில் உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டதே... என்ன ஆனது?"

``அதைப்பத்தி எனக்கு எதுவும் தெரியல. நான் எல்லாத்தையும் ரீ-செட் பண்ணிட்டேன்."  

``உங்க பள்ளி நாள்களில் `ராம்' கேரக்டர் இருந்ததா?" 

``நான் படித்தது பெண்கள் பள்ளி. பள்ளியில் மட்டுமல்ல, இப்போவரைக்கும் என் ராமை நான் பார்க்கலை." 

``நீங்க நடிச்ச `96' படத்தை எத்தனை முறை பார்த்தீங்க?" 

``இரண்டு முறை."

``ஜெஸ்ஸி, ஜானு... இந்த `J' மேஜிக் மீண்டும் நடக்குமா?" 

``அதுக்கு என்கிட்ட பதில் இல்லையே!" 

`` `விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தில் சிம்புவுடன் மீண்டும் நடிப்பீங்களா?"

`` `விண்ணைத்தாண்டி வருவாயா 2'ங்கிற படம் எடுப்பாங்களா, எடுக்கிறாங்களானு எனக்குத் தெரியலை." 

``உங்களுக்குச் சூழலை மாத்துற சக்தி இருந்ததுனா, எந்தப் படத்துல நீங்க நடிச்ச காட்சியை மாத்துவீங்க?" 

``நான் நடிக்காம தவறவிட்ட சில படங்களில் நடிப்பேன்." 

``கடினமான, சோகமான தருணங்களை எல்லாம் எப்படிக் கடக்குறீங்க?" 

``காலத்தை நம்புறவ நான்; அது எல்லாத்தையும் மாத்தும்."   

``உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது சமையலா, ஷாப்பிங்கா?" 

``சமையல்தான்."

`` `96' படத்தில் சின்ன வயசு ஜானுவும், பெரிய வயசு ஜானுவும் ஒரே காதணி போட்டிருந்தது, வலது கையில் வாட்ச் கட்டுறது, இடது கை பழக்கம்... இந்த மேனரிஸங்களை எங்கிருந்து பிடிச்சீங்க?"   

``அதெல்லாம் இயக்குநர் பிரேம் சொன்ன விஷயங்கள்தான்."

``இப்போ ரசிகர்களுக்கு நீங்க ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சா, என்ன சொல்வீங்க?"  

`` `96' படத்தை வெற்றி பெறச் செய்ததற்கு நன்றிகள்."

``உங்களைப் பற்றிய நெகட்டிவ் விஷயங்கள் வரும்போது, அதை எப்படி எடுத்துக்குவீங்க?" 

``அதுக்கும் ஒரு காது கொடுப்பதுண்டு அவ்வளவுதான்."

``எதிர்மறை விமர்சனங்கள் உங்களுக்குச் சோகத்தைக் கொடுக்குமா, இன்னும் நல்லா நடிக்கணும்ங்கிற உத்வேகத்தைக் கொடுக்குமா?

``இரண்டுமே இல்லை. எதிர்மறை விமர்சனங்கள் என்னை எதுவும் பண்ணாது."   

``சோகத்துல இருக்கும்போது, உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய விஷயம் எது?"  

``வீட்டில் வளர்க்கும் என் செல்ல நாய்க்குட்டிகள்!"

``உங்க ட்விட்டர் அக்கவுன்ட்டுக்கு அட்மின் இருக்காரா?"

``அட்மின் எல்லாம் இல்லை, என் ட்விட்டர் கணக்கை நானேதான் கவனித்துக்கொள்கிறேன்."

- தவிர, `96' படத்தின் கேரக்டர்கள் பொம்மையாக விற்பனைக்கு வந்திருப்பதை வாங்கியது, ரஜினியுடன் இணைந்து நடிக்க `பேட்ட' படத்தின் அனுபவம், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள `பரமபதம்' படத்தில் நடிக்கும் அனுபவம்... என ரசிகர்கள் கேட்ட இன்னும் பல கேள்விகளுக்குப் பதிலளித்தார், நடிகை த்ரிஷா. தங்களது கேள்விகளுக்கு த்ரிஷா பதிலளித்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் த்ரிஷாவின் பதிலை டேக் செய்திருந்தார்கள். இந்தக் கேள்வி நேரம் முடிந்தபிறகு, `பேட்ட' படத்தின் இறுதி நாளில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார், த்ரிஷா. 

அதேசமயம், இன்று காலை த்ரிஷா பதிலளித்திருந்த அத்தனை ட்வீட்களும் டெலீட் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.