Published:Updated:

சந்தோஷ் நாராயணன், சிவா ஃபேமிலி, செந்தில் - ராஜலட்சுமி, ஆந்தகுடி இளையராஜா.. மிஸ் பண்ணக் கூடாத தீபாவளி எக்ஸ்க்ளூசிவ்ஸ்!

விகடன் டீம்
சந்தோஷ் நாராயணன், சிவா ஃபேமிலி, செந்தில் - ராஜலட்சுமி, ஆந்தகுடி இளையராஜா.. மிஸ் பண்ணக் கூடாத தீபாவளி எக்ஸ்க்ளூசிவ்ஸ்!
சந்தோஷ் நாராயணன், சிவா ஃபேமிலி, செந்தில் - ராஜலட்சுமி, ஆந்தகுடி இளையராஜா.. மிஸ் பண்ணக் கூடாத தீபாவளி எக்ஸ்க்ளூசிவ்ஸ்!

தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கத்தில் சினிமா விகடன் யூ ட்யூப் சேனல் உங்களுக்காகப் பல சிறப்பு வீடியோக்களை வெளியிட இருக்கிறது. அந்தச் சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ...

அக்டோபர் 31 - 11 மணி : மேகா ஆகாஷ் போட்டோஷூட் வீடியோ மற்றும் பேட்டி:
 

`எனை நோக்கி பாயும் தோட்டா', `பூமராங்', `பேட்ட', `சிம்பு - சுந்தர்.சி படம்', `சாட்டிலைட் சங்கர்' எனும் பாலிவுட் படம் ஆகியவை நடிகை மேகா ஆகாஷின் அப் கம்மிங் லிஸ்ட்டில் இருக்கின்றன. இப்படி பிஸியாக இருக்கும் இவரை போட்டோஷூட் செய்து அவரிடம் சுவாரஸ்யமான பேட்டியும் கண்டிருக்கிறோம்.

அக்டோபர் 31 - 5 மணி : நடிகர் ஹரி ஃபேமிலி பேட்டி:
 

`மெட்ராஸ்' படத்தில் ஜானி கேரக்டரில் நம்மை கவர்ந்த நடிகர் ஹரி, இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஜானி கெட்டப்பில் வீட்டுக்கு வந்த தன்னை யாரோ என்று நினைத்து அம்மா துரத்தியது போன்ற சுவாரஸ்யமான சம்பவங்களை தன் குடும்பத்தோடு பகிர்ந்துகொள்கிறார். 

நவம்பர் 1 - 11 மணி : ப்ரியா பவானி சங்கர் பேட்டி:
 

செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, இப்போது சினிமா... என கரியருடன் சேர்த்து தன் குடும்பம், நண்பர்கள் என தன் பர்சனல் பக்கங்களையும் தனக்கான குறும்புத்தனங்களோடு பகிர்ந்துகொள்கிறார், நடிகை ப்ரியா பவானி சங்கர்.

நவம்பர் 1 - 5 மணி : ஆர்.ஜேக்கள் மீட்டிங்
 

`சூரியன் எஃப்.எம்' பிளேடு ஷங்கர், `ஹலோ எஃப்.எம்'பாலாஜி, `மிர்ச்சி' விஜய் - ஷா, `ஃபீவர் எஃப்.எம்' சிந்து ஆகியோர் வெவ்வேறு ஜானர்களில் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களை இணைக்கும் ஒரு புள்ளி ரேடியோ. இந்த ஐவர் கூட்டணியை ஒரு இடத்தில் சந்திக்க வைத்து அவர்களின் பயணம், ஆர்.ஜேயிங்கில் சிரமங்கள், அடுத்த ப்ளான் ஆகியவற்றைக் கேட்டோம். கலாய்யுடன் கூடிய கலகலப்பான மீட்டிங்!

நவம்பர் 2 - 11 மணி : மிர்ச்சி சிவா ஃபேமிலி பேட்டி:
 

ஸ்பூஃபை தனக்கான ஜானராக எடுத்துக்கொண்டு இன்று `அகில உலக சூப்பர் ஸ்டார்' அடைமொழியை அடைந்திருக்கும் நடிகர் சிவா, 23 நபர்கள் கொண்ட தன் குடும்ப உறுப்பினர்களோடு ஜாலியாக உரையாடும் அசத்தல் பேட்டி.

நவம்பர் 2 - 5 மணி : அமித் பார்கவ் - ஶ்ரீரஞ்சனி பேட்டி:
 

சீரியல், சினிமா என நடித்துக்கொண்டிருக்கும் அமித் பார்கவ் - தன் கலகலப்பான பேச்சால் `கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் ஶ்ரீரஞ்சனி தம்பதியினர் தங்களின் திருமண வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். 

நவம்பர் 3 - 11 மணி : செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பேட்டி
 

மக்களிசை பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியினர் தங்களின் இசைப் பயணம் ஆரம்பித்தது முதல் இன்று வரும் சினிமா வாய்ப்புகள் வரை பல விஷயங்களை தங்களின் அடையாளமான நாட்டுப்புறப் பாடல்களுடன் உரையாடுகின்றனர்.  

நவம்பர் 3 - 5 மணி : ரமேஷ் திலக் - நவலட்சுமி பேட்டி:

தனக்கான உடல் மொழியாலும் பாவனைகளாலும் கவனிக்கப்பட்ட நடிகர் ரமேஷ் திலக் தமிழ், மலையாளம் என பிஸியாக இருக்கிறார். இவரது மனைவி நவலட்சுமி ஆர்.ஜேவாக மக்களை மகிழ்வித்து வருகிறார். தலை தீபாவளி கொண்டாடும் இந்தக் காதல் தம்பதி, திருமண வாழ்க்கை, கரியர், தங்களின் தீபாவளி ப்ளான் ஆகியவற்றை ஜாலி கேலியுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.    

நவம்பர் 4 - 11 மணி : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஃபேமிலி பேட்டி:
 

`மெர்குரி', `காலா', `பரியேறும் பெருமாள்', `வடசென்னை'... இந்த நான்கு படங்கள் இந்த வருடத்தின் ஹைலைட்டான படங்களும்கூட. இந்த நான்கையும் இணைக்கும் ஒரு புள்ளி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தினமும் கிரிக்கெட், கருப்பி பாடல் உருவான விதம், அடிக்கடி அவுட்டிங், நண்பர்கள் கூட்டம் எனத் தங்களின் டெய்லி அப்டேட்டை யதார்த்தமான பேச்சில் விவரிக்கின்றனர் சந்தோஷ் நாராயணன் - மீனாட்சி தம்பதியினர்.       

நவம்பர் 4 - 5 மணி : `கலக்கப்போவது யாரு' பழனி ஃபேமிலி பேட்டி
 

`கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் அசால்டான பாடி லேங்குவேஜ், கிராமத்து ஸ்லாங், ரைமிங் வசனங்கள் என தூள் கிளப்பும் பழனி தன் மனைவி, குழந்தையுடன் ஜாலியாக உரையாடுகிறார்.   

நவம்பர் 5 - 11 மணி : ஆந்தகுடி இளையராஜா இசைக்குழுவுடன் சந்திப்பு
 

கிராமத்து இசைக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பல கிராமத்து இசைக் கலைஞர்கள் இருந்தாலும் ஆந்தகுடி இளையராஜாவின் பாடல்கள் இணையத்தில் வைரலாகின்றன. அவரை அவரது கிராமத்துக்குச் சென்று மண் வாசனை மணக்கும் கிராமிய இசைக்குழுவுடன் இளையராஜாவின் கலகலப்பான பேட்டி. 

நவம்பர் 5 - 5 மணி : பழனி பட்டாளம் பேட்டி:
 

`கலக்கப்போவது யாரு', `அது இது எது' போன்ற நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்த பழனி பட்டாளத்துக்கு, ஒருமுறை `நீயா நானா' கோபிநாத் மாதிரி மிமிக்ரி செய்ய வாய்ப்பு வந்தது. அந்த ஷோவில் தமிழகம் முழுக்க பாப்புலரானார். மன்சூர் அலிகான், கோட்டா ஶ்ரீநிவாசராவ் உள்ளிட்ட வாய்ஸ்கள் இவரது ஸ்பெஷல். `அறம்' படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவர் தன் ஃப்ளாஷ்பேக், எதிர்கால திட்டம், குடும்பம் எனப் பலவற்றைப் பகிர்ந்துகொள்கிறார்.