Published:Updated:

விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா!

விகடன் விமர்சனக்குழு
விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா!
விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா!

தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையின் சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடந்தது. விஜய், அட்லீ, மகேந்திரன், கலைப்புலி தாணு, எமி ஜாக்சன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, மீனா , மீனாவின் மகள் பேபி நைனிகா என பலரும் கலந்துகொண்டனர். மேடையின் முதலும் முக்கிய விருந்தினராக ஏறியவர் நைனிகா. மீனாவுடன் மேடையேறிய நைனிகாவுக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்புகளைக் கொடுத்து , கைதட்ட. எல்லாருக்கு வணக்கம் என்றவர் , மைக்குடன் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தார்.

தொகுப்பாளினி ரம்யா மீனா மேடம் உங்களுக்கு மட்டும் எப்படி வயசே தெரியாம இருக்கீங்க. உங்க இளமையோட ரகசியம் என்ன என்றால் வழக்கம் போலவே வெட்கப்பட்டு சிரிக்க, நீங்க விஜய்யுடன் ஆடிய நடனத்தை இன்னமும் நாங்கள் மறக்கவில்லை. நீங்கள் சொல்லுங்கள் விஜய் பற்றி, விஜய்யுடன் நடிக்காமல் போனது உங்களுக்கு எப்படி இருந்தது. என்ற போது உண்மையில் விஜய்யுடன் நான்கு ஐந்து படங்களில் நடிப்பதற்காக வாய்ப்பை இழந்தேன்.

விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா!

அப்போது கைநிறைய படங்கள், அதுதான் காரணம் . விஜய்யிடம் அவரது காமெடி சென்ஸ் பிடிக்கும், பேசவே மாட்டாரு பேசினாலும் நறுக்குனு பேசிடுவாரு. என்ற மீனாவிடம், நீங்கள் எப்படி ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க என்பது போல் அப்படியே நைனிகாவுக்கு சொல்லிக்கொடுக்க, அவரும் விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க எனக் கேட்டார். அதற்கு விஜய் எழுந்து கையசைத்து இதோ என்பது போல் சைகை செய்ய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அட்லீ பேசுகையில் எனக்கு ஒரு நான்கு வயதுக் குழந்தை அதுவும் விஜய்க்கு மகளாக, 40 சீன்கள் அந்தக் குழந்தை வரப் போகிறது பல மாதங்கள் போராடி, யோசித்து எதுவும் சிக்காமல் இருந்த வேளை என் மனைவி பிரியா மொபைலில் ஒரு புகைப்படத்தைக் காட்டி இந்த பாப்பா எப்படி இருக்கிறார் என்றார். என்ன மீனா மேடம் சின்ன வயசுப் போட்டோவா என்றால் இல்லை அவங்களோட பொண்ணு போட்டோ இவரைக் கேளுங்களேன் என ஐடியா கொடுத்ததாகச் சொன்னார். மேலும் விஜய், மகேந்திரன் சார் செட்டுக்கு வந்தால் நாங்களெல்லாம் பதறுவோம், ஆனால் நைனிகா வந்தால் விஜய்யே, பதறி விடுவார். திடீரென அங்கிள் ஐயம் ஃபீலிங் ஸ்லீப்பி என போய் அமர்ந்து கொள்வார். நான் போய் பொறுமையாக இங்க பாரும்மா அங்க நிக்கறது விஜய் அங்கிள், அதோ அவரு ஜார்ஜ் அவரு கோவக் காரரு, லைட்டு போனா எடுக்க மாட்டாரு, என்றவுடன் ஆர் யூ ஆங்ரி வித் மீ அங்கிள் என்பார், இல்லை என்றவுடன் புரிந்துகொண்டு ஒரே டேக்கில் நடித்துவிட்டு போய் அமர்ந்து கொள்வார்.

விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா!

அதே நைனிகா கடைசியில் இசைத்தட்டு வெளியீடு செய்தபோது அனைவரும் மேடையில் ஏற , நைனிகாவோ மிகக் கச்சிதமாக மேடையில் போடப்பட்டிருந்த சிறிய மேடையில் ஏறி அழகாக நின்றுகொண்டார். பின்னணியில் என்ன நடக்கிறது என்பதைக் கூட பார்க்காமல் கிரே கலர் ஹை நெக் தை லெங்த் காக்டெயில் உடை, மற்றும் சில்வர் நிற ஷூக்கள் சகிதமாக தனது உடையோடு விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது இசைத்தட்டு நைனிகாவின் கைகளில் கொடுக்கப்பட அந்த இசைத்தட்டை போர்த்தியிருந்த துணியை அவிழ்க்க பலரும் ஏதேதோ முயற்சி செய்தபோது அழகாக ரிப்பனை உருவி துணியை அவிழ்த்து விட்டார் நைனிகா. உண்மையைச் சொன்னால் விஜய், அட்லீ, மகேந்திரன் என அனைவரையும் மேடையில் மறக்கச் செய்துவிட்டார் அந்த குட்டி ஏஞ்சல். அம்மாவை விட பெரிய உயரங்கள் தொட வாழ்த்துகள்.

விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா!

இதோ இப்போதே ஜிஃப் இமேஜுகளைக் களத்தில் இறக்கி நைனிகாவுக்கு வரவேற்புகளைக் கொடுத்துவிட்டனர் ரசிகக் கண்மணிகள்