Published:Updated:

சாக்‌ஷி, ரக்‌ஷா பந்தன்.. இணையத்தில் இன்று #OnlineTrends

விகடன் விமர்சனக்குழு
சாக்‌ஷி, ரக்‌ஷா பந்தன்.. இணையத்தில் இன்று #OnlineTrends
சாக்‌ஷி, ரக்‌ஷா பந்தன்.. இணையத்தில் இன்று #OnlineTrends
சாக்‌ஷி, ரக்‌ஷா பந்தன்.. இணையத்தில் இன்று #OnlineTrends

ன்லைன் வாழ்க்கையில் வைரல், ரணகள ரகளைகள் என தினமும் ஒரு திருவிழா தான். இன்றைய நாளில் நடந்த கலாட்டாக்கள், சுவாரஸ்ய போட்டோக்கள், மரண கலாய்கள், வீடியோ என எல்லாம் மினி காக்டெயிலாய் ஒரு பார்வை...

* ரக்‌ஷா பந்தன்: ஹேஷ் டேக்

ப்ளாக் அண்ட் வொயிட்ல போனா பாசமலர் சிவாஜி - சாவித்ரி மாதிரி, கொஞ்சம் ஈஸ்ட்மெண்ட் கலர் வந்தா முள்ளும் மலரும் ரஜினி ஷோபா மாதிரி, இன்னும் திருப்பாச்சி விஜய், வேதாளம் அஜித் என பல வித பாச எபிசோடுகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் எங்க ராக்கி கட்டிருவாய்ங்களோனு மீம் செய்து ரக்‌ஷா பந்தம்னு கிண்டல் செய்யும் ஒரு குரூப்புக்கும் இன்னிக்கி செம வேட்டை. ஹன்சிகா தன்னோட அண்ணனுக்கு ஆசிர்வாதம் வழங்க... இந்த வருட ரக்‌ஷா பந்தன் #HappyRakshaBandhan என்ற ஹேஷ்டேக் மினுங்க வைரல் ஆனது.

*வீரம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சாக்‌ஷி, ரக்‌ஷா பந்தன்.. இணையத்தில் இன்று #OnlineTrends

ஆமா, வீரமே தான். படம் ரிலீஸ் ஆகி ரெண்டு வருஷம் கழிச்சு இந்தியா லெவல்ல ட்ரெண்ட் ஆகுதேனு பாத்தா, அஜித் நடித்த வீரம் இல்ல. இது குனால் கபூர் நடிக்கும் 'வீரம்'. தபூ நடித்த 'மீனாக்‌ஷி டேல் ஆஃப் த்ரீ சிட்டீஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் குனால் கபூர். தற்போது 13ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த சந்து செகவர் என்ற போர் வீரரைப் பற்றிய படத்தில் சந்து கதாப்பத்திரத்தில் நடிக்கிறார். படம் மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகிவருகிறதாம்.

* சிரிக்காதே - ரெமோ சிங்கிள்

'ரெமோ நீ காதலன்', 'செஞ்சுட்டாளே' போன்ற தத்துவப் பாடல்களைத் தொடர்ந்து ரெமோ படத்தில் விக்னேஷ் சிவன் எழுதி அனிருத் இசையமைத்திருக்கும் 'சிரிக்காதே' சிங்கிள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த முறை லிரிக் வீடியோவாக இல்லாமல், வீடியோ ஆல்பம் ஸ்டைலில் செம ஸ்டைலிஷாக வீடியோ பாடல் வெளியாகியிருக்கிறது. சில நிமிடங்களிலேயே 10கே வீவ்ஸ் அள்ளியிருக்கிறது. 

பதக்க மங்கை சாக்‌ஷி மலிக்:

சாக்‌ஷி, ரக்‌ஷா பந்தன்.. இணையத்தில் இன்று #OnlineTrends

இன்றைக்கு முழுவதும் ஆன்லைன் உச்சரித்த அதிகப்படியான வார்த்தை சாக்‌ஷி மலிக்காகத் தான் இருக்கும். இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தந்த, சாக்‌ஷிக்கு லைன் கட்டி ஆன்லைனில் வாழ்த்துகள் பொழிந்து கொண்டிருக்கிறது. 'இறுதிச்சுற்று' ரித்திகா மீம்ஸ் போட்டு மீம் பாய்ஸ் பாசிட்டிவ் சிக்னல் காட்ட, இன்னொரு பக்கம் மோடி வாழ்த்து என செம பீக்கில் இருக்கிறார். ‘ரக்‌ஷா பந்தன் அன்று, வழக்கமாக அண்ணன்கள்தான் தங்கைக்கு பரிசு தருவார்கள். இந்தத் தங்கை எங்கள் எல்லோருக்கும் பரிசளித்திருக்கிறாள்’ என்று பாசமழையும் பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.  வாழ்த்துகள் சாக்‌ஷி...!


இது இன்றைய நாளுக்கானது தான்... நாளைக்கு என்ன என்ன விஷயங்கள் எந்த எந்த இடத்தைப் பிடிக்குதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்...!