Published:Updated:

‘டப்பிங் சீரியலுக்கு நிகரா நாமளும் ஹிட் அடிக்கலாம்!’ - சீரியல் இயக்குநர் அழகர்

விகடன் விமர்சனக்குழு
‘டப்பிங் சீரியலுக்கு நிகரா  நாமளும் ஹிட் அடிக்கலாம்!’ - சீரியல் இயக்குநர் அழகர்
‘டப்பிங் சீரியலுக்கு நிகரா நாமளும் ஹிட் அடிக்கலாம்!’ - சீரியல் இயக்குநர் அழகர்
‘டப்பிங் சீரியலுக்கு நிகரா  நாமளும் ஹிட் அடிக்கலாம்!’ - சீரியல் இயக்குநர் அழகர்

மிழ் தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் அன்மைய பெஞ்ச் மார்க் தொடரான 'சரவணன்-மீனாட்சி' உள்ளிட்ட பல வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குநர் அழகர் அவர்களுடன் ஒரு சின்ன சிட்-சாட்... 

டெம்ப்ளேட்டாதான் இருக்கும்...இருந்தாலும்,   உங்க பயணம் பத்தி சொல்லுங்க..

பக்கா ஸ்ரீவில்லிபுத்தூர்க்காரன். ஸ்கூல் முடிச்சதும் என் வீட்டில் டிப்ளமோதான் சேர்த்து விட்டாங்க. ஆனால் நான் கிளாஸ் போனதே கிடையாது, கட் அடிச்சுட்டு அடுத்த ஊரான ராஜபாளையத்துக்கு போய் ஒரு நாளைக்கு மூணு படம் பார்த்துடுவேன். ஒரு நாள் இதை தெரிஞ்சுகிட்ட அப்பா, என்னை கூப்பிட்டு ‘என்னதான் படிக்கணும்னு?’ கேட்டார் . என்னோட சினிமா ஆசையை சொன்னதும் பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்த்துவிட்டார். அதுதான் என் இயக்குனர் ஆசையில் வைத்த முதல் ஸ்டெப். 

சினிமா கனவோட வந்த நீங்க எப்படி டிவி மீடியாவில் நுழைஞ்சீங்க?

செல்வராகவன் சாரோட 'காதல் கொண்டேன்' படத்தில் வொர்க் பண்ணினேன். அதுக்கப்புறம், இயக்குனர் சுசி கணேசனோட ’விரும்புகிறேன்’ படம். அந்த நேரத்தில் என்னோட நண்பர் ஒருத்தர், டிவி சீரியலும் இயக்க முயற்சி செய்யச் சொன்னார். அதுக்கேத்த மாதிரி ‘நீ நான் அவள்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து டிவி தொடர் இயக்கம் செட் ஆயிடுச்சு. விஜய் டிவி, சன் டிவினு நிறைய டிராவல் பண்ணியாச்சு. ‘ஏழாம் உயிர்’ முடிச்சுட்டு, இப்போ அடுத்ததா ’காக்க காக்க’ இறங்கியிருக்கேன்.

‘டப்பிங் சீரியலுக்கு நிகரா  நாமளும் ஹிட் அடிக்கலாம்!’ - சீரியல் இயக்குநர் அழகர்

நீங்க இன்னும் தொடாத சப்ஜெக்ட் எதுன்னு நினைக்கிறீங்க ?

‘பாசமலர்’  எடுத்துக்கிட்டீங்கனா அண்ணன், தங்கை பாசம்தான் மெயின். ‘சரவணன் மீனாட்சி’ காதல் வழிஞ்ச சப்ஜெக்ட். அதுக்கப்புறம் ‘ரோஜாக்கூட்டம்’ பெண்களுக்கானது.‘ஏழாம் உயிர்’ முழுக்கவே ஆன்மிகம். எல்லா வகையான சப்ஜெக்ட்டும் பண்ணிட்டதாதான் நினைக்கறேன்.

'காக்க காக்க'  சினிமா டைட்டில் மாதிரி  இருக்கே...  எதுவும் ஆக்‌ஷன் சீரியலா?

ஹா...ஹா..இல்லைங்க. முழுக்க, முழுக்க பக்தியும், திரில்லரும் இணைஞ்ச கதை இது. ஏற்கனவே 'யாமிருக்க பயமேன்'  சீரியல் முருகன் சார்ந்து எடுத்துருக்கேன். இப்போ, வெறும் பக்தி மட்டும் இல்லாம, கூடவே ஒரு வித்தியாசமான தேடல்தான் கதை. அறுபடை வீடுகளிலும் அடுத்தடுத்த காட்சிகள் பயணமாகும். விரைவில் முதல் எபிசோட் ரீலீஸ் ஆக இருக்கு.

‘காக்க காக்க’ சீரியலுக்காக இலங்கை பயணம் செய்துட்டு வந்திருக்கீங்க. எப்படி இருந்தது?

 'காக்க காக்க' சீரியல் கடவுள் முருகன் சம்பந்தப்பட்டதுங்கிறதால இலங்கை கதிர்காமத்தில் ஷீட்டிங் வைக்கவேண்டியிருந்தது. இலங்கை மக்கள் ரொம்ப வேலையில் டெடிகேட்டடா இருக்காங்க. அங்கிருந்த அத்தனை நாளும் அருமையா பார்த்துக்கிட்டாங்க.

சினிமாக்கும், சீரியலுக்கும் என்ன வித்தியாசம்?

’நேரம்...அதைத்தான் நான் வித்தியாசம்னு நினைக்கறேன். அங்க நேரம் உங்களுக்கு அதிகமிருக்கும். ஆனா, சீரியலைப் பொறுத்த வரையில் நேரம் ரொம்ப கம்மி. சினிமாவில் ரிசல்ட் தெரிய லேட்டாகும். ஆனா, சீரியலில் உடனே உடனே ரசிகர்களோட கருத்துக்கள் தெரிஞ்சுடும்.’


டப்பிங் சீரியல்களோட தாக்கம் டிவிக்களில் இப்போ அதிகமா இருக்கு. அதைப்பத்தி என்ன நினைக்கறீங்க?

’அது ரொம்பவே தவறான விஷயமாத்தான் நான் நினைக்கறேங்க. சின்னத்திரையை நம்பி இங்க நிறைய குடும்பங்கள் இருக்கு. ‘டப்பிங் சீரியலை அப்படியே வாங்கி ஒளிப்பரப்பினால் மட்டுமே போதும். புதுசா ஒரு கதை சொல்லி, இயக்கி ஏன்  ஒளிபரப்பணும்?’ என்பதுதான் சேனல்களோட கருத்து. இருந்தாலும் நல்ல கதைகளையும், அதற்கான பொருளாதார உதவியும், சரியான ஆடைத்தேர்வுகளும் இருந்தால் ஒரிஜனலா இங்கயே ஷூட் பண்ணப்படற சீரியல்களும் நல்லாவே டிஆர்பியில் எகிறும். இதை சேனல்கள் தயவுசெய்து கருத்தில்  வெச்சுகிட்டா, டப்பிங் சீரியலுக்கு நிகரா நாமளும் ஹிட்டடிக்கலாம்!’ எத்தனையோ சின்னத்திரை கலைஞர்களின் ஒட்டுமொத்த குரலாக சொல்லி முடித்தார் அழகர்.

-பா.விஜயலட்சுமி

படங்கள்- பா.காளிமுத்து