Published:Updated:

கண்டிப்பாக 'கபாலி -2' இல்லை... பா. ரஞ்சித் திட்டவட்டம்

விகடன் விமர்சனக்குழு
கண்டிப்பாக 'கபாலி -2' இல்லை...  பா. ரஞ்சித் திட்டவட்டம்
கண்டிப்பாக 'கபாலி -2' இல்லை... பா. ரஞ்சித் திட்டவட்டம்
கண்டிப்பாக 'கபாலி -2' இல்லை...  பா. ரஞ்சித் திட்டவட்டம்

நாம் ஏற்கெனவே வெளியிட்ட  'தனுஷ் உங்க வீட்ல தங்கிக்கட்டுமா...' கட்டுரையில் ரஜினிக்கும், பெரியமகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையிலான பேரன்பு குறித்து பெருவிளக்கம் கொடுத்து இருந்தோம். அமெரிக்காவில் இருந்தபோது  ரஜினி  'நீ வேணா குழந்தைகளை பார்க்க  சென்னைக்கு போயேம்மா. தனுஷ் கோவிச்சக்கப் போறார்.' என்று ஐஸ்வர்யாவிடம் சொல்ல  ' நான் குழந்தைகளை பார்த்துகறேன். நீ அங்கிளை பத்திரமா பாத்துக்கோனு தனுஷ்தான் அப்பா என்கிட்டே சொல்லி இருக்கார்.' என்று  பதிலுக்கு ஐஸ்வர்யா சொல்ல நெகிழ்ந்து போனார், ரஜினி. தனக்கு கிடைத்த மருமகன்  தனுஷ் மகன்போல இருப்பதைக்கண்டு மகிழ்ந்து போனார் என்று குறிப்பிட்டு இருந்தோம். அந்த அன்பின் அடுத்த கட்டம் பெரியமகள் ஐஸ்வர்யாவுக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கும் முடிவை எடுத்தார், ரஜினி. 


ரஜினி சொன்னதன்  எதிரொலியாக நேற்று  திடீரென  தனுஷ் ட்விட்டரில் '  நான்  கர்வத்துடனும், பெருமையுடனும் அறிவிப்பு செய்கிறேன்.  எனது ஒண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் உருவாகும் படத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிக்கிறார், ரஞ்சித் இயக்குகிறார் என்று அறிவித்தார்.  அடுத்த நிமிடம் 'மகிழ்ச்சி...' என்று தனது  ட்விட்டரில் பதிலை  தட்டிவிட்டார், ரஞ்சித்.  ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் விஜய் கால்ஷீட் இருக்கிறது. அவர் கேட்டுக் கொண்டதால் விஜய்க்கு என்று கதையை தயார் செய்யும் பணியில் ரஞ்சித் தீவிரமாக  இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.  அதற்காக கேரளாவில்  கதை விவாதம் நடந்து வருவதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சு அடிபட்டது. நேற்று வெளியான  தனுஷ், ரஞ்சித் ட்விட்டர் தகவலால் மீண்டும்  'ரஜினி - ரஞ்சித்' கூட்டணி உருவாகி இருக்கிறது.


ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்று ஒரு மாசத்துக்கு மேல் ஆகிறது . அங்கே சில மராமத்து பணிகள் நடப்பதால் சென்னையில் உள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பதாவது ஃப்ளோரில் தனுஷின் பிரம்மாணட ஃப்ளாட் இருக்கிறது. நீங்கள் மொட்டை மாடியில்  ரஜினி  அமர்ந்திருக்கும் போட்டோக்களை பார்க்கிறீர்களே அது தனுஷ் வீடு.சமீபத்தில் மலேசியா விநியோகஸ்தர் மாலிக்குடன் ரஜினி அமர்ந்து இருந்ததும், அதே போல் பொண்டாட்டிடா டப்ஸ்மாஷ் பெண்ணை சந்தித்ததும் இதே வீட்டில் தான்  சென்ற மாதம் '2.0' படப்பிடிப்பில் கலந்து கொள்வது குறித்து ஷங்கர், தயாரிப்பாளர் ராஜூ மகாலிங்கம் இருவரும் தனுஷ் வீட்டுக்கு சென்று ஆலோசனை செய்தனர். அப்போது  ''2.0' படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிந்து விட்டதாகவும், ரஜினி கொடுக்கும் கால்ஷீட் தேதியோடு முழுப்படமும் முடிவடைந்து விடும் என்று ரஜினியிடம் ஷங்கர் தெரிவித்தார்.

கண்டிப்பாக 'கபாலி -2' இல்லை...  பா. ரஞ்சித் திட்டவட்டம்

 
ரஜினி தனது சினிமா கேரியரில்  எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்து இருக்கிறார் . அதன்பின் ராஜசேகர் இயக்கத்தில்  'மாப்பிள்ளை', ' தர்மதுரை' படங்களிலும், அடுத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 'வீரா', 'பாட்ஷா' படங்களிலும், பிறகு கே.எஸ்.ரவிக்குமார் டைரக்‌ஷனில் 'முத்து'  'படையப்பா' படங்களிலும், அதன்பின் ஷங்கர் இயக்கத்தில் 'சிவாஜி' 'எந்திரன்' படங்களிலும், இப்போது பா.ரஞ்சித்  டைரக்‌ஷனில் 'கபாலி' படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கிறார். ' ரஞ்சித்தின் ட்விட்டை பார்த்த பிறகு நாம் அவருக்கு வாழ்த்துச் செய்து அனுப்பினோம் அதற்கு நன்றி தெரிவித்தார். அடுத்து  இயக்கும் ரஜினி படம் 'கபாலி -2' படமா? என்று ரஞ்சித்திடம் கேட்டோம். '' கண்டிப்பாக  'கபாலி -2' படத்தை நன் இயக்கவில்லை. அடுத்து இயக்கப்போவது வேறு ஜேனர் கதை. ரஜினி சாரிடம் ஒன்லைன் கதை சொன்னேன் அவருக்கு மகிழ்ச்சி. தனுஷ்சார் படத்தை தயாரிக்கிறார்.    நான் இப்போ நாகர்கோவிலில் இருக்கிறேன். ரஜினி சாரின் படக்கதை விவாதத்துக்காக இங்கே வரவில்லை. என் சொந்த வேலையாக வந்து இருக்கிறேன். சென்னை வந்தபிறகு விவரமாக பேசுகிறேன்'' என்று விளக்கம் சொன்னார்.   

அன்பு வாசகர்கள் கார்த்திக் மற்றும் புகழ் எழுப்பிய கேள்விக்கான விளக்கம்  கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியான படங்கள் 'முத்து' 'படையப்பா' நீண்ட இடைவெளிவிட்டு நடித்த திரைப்படம் 'லிங்கா'. அதுபோல சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த 'அண்ணாமலை'க்கு பிறகு எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'பாண்டியன்' வெளிவந்தது. அதன்பிறகே சுரேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து  வந்தது 'வீரா' 'பாட்ஷா'.  'கபாலிக்கு' முன்பே ஒப்பந்தமானது '2.0' திரைப்படம். இப்போது  ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' ரிலீஸாகி அடுத்த படத்தையும் ரஞ்சித்துக்கே ரஜினி கொடுத்து இருக்கிறார்.

- எம் .குணா