Published:Updated:

ஏர் ஃபோர்ஸ் கார்த்தி... டாக்டர் அதிதி - காற்று வெளியிடை கதை இதுதான் மக்களே ! #VikatanFun

SHYAM SUNDAR L
ஏர் ஃபோர்ஸ் கார்த்தி... டாக்டர் அதிதி - காற்று வெளியிடை கதை இதுதான் மக்களே ! #VikatanFun
ஏர் ஃபோர்ஸ் கார்த்தி... டாக்டர் அதிதி - காற்று வெளியிடை கதை இதுதான் மக்களே ! #VikatanFun

`நீ என்னை விரும்புறதை விட நான் உன்னை அதிகமா விரும்புவேன், நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை விரும்புவேன், நீ என்னை விரும்பலைனாலும் விரும்புவேன்` இப்படி `என்ன வேணும் - எண்ணெய்தான்  வேணும்` டைப் டயலாக்கோட வெளிவந்த 'காற்று வெளியிடை' பட டிரெய்லர் இப்ப ட்ரெண்டிங்ல நம்பர் ஒன்ல இருக்கு. டிரெய்லர் `இப்படி இப்படி இருக்கு` இல்லை `அப்படி அப்படிதான் இருக்கு`ன்னு இப்பவே சோஷியல் மீடியால இருக்குற எல்லாரும் மாறி மாறி சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப நாளுக்கு அப்புறம் மணிரத்னம் இப்ப மறுபடியும் போரும், போர் சார்ந்தும் படம் எடுத்து இருக்கார். படத்தோட கதை என்னவா இருக்கும்ன்னு எல்லாரும் குழம்பிக்கிட்டு இருக்குறப்ப அந்த படத்தோட டிரெய்லரையும் பாட்டையும் பார்த்தே படத்தோட கதை என்னனு சொல்ல முயற்சி பண்ணி இருக்கோம். இது ஒரு டிரெய்லர் பார்த்து கதை சொல் டைப் ஆர்டிகிள். இதை அப்படியே வாட்ஸ் அப் ஃபார்வேர்டாக மாற்றி மக்கள் மத்தியில் பீதிகளை கிளப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல, முக்கியமா மணிரத்னம் ரசிகர்களை.

குயில் கூட ரஹ்மான் மியூசிக் ஃபியூஷன்ல வித்தியாசமா `கூவ்``ன்னு கூவுற ஓர் அதிகாலை டைம். படத்தோட ஃபர்ஸ்ட் சீன் எப்பவும் போல மணிரத்னம் படங்கள்ல வர்ற மாதிரியே இதுலயும் ரயில்வே ஸ்டேஷன்லதான் ஆரம்பிக்குது. கூட்டம் கம்மியா இருக்குற, அழகான பேக் கிரவுண்ட் மியூசிக்கோட மும்பைல ஸ்டேஷன்ல கிளீன் ஷேவ் பண்ணி 3 மாச குழந்தை மாதிரியே இறங்கி வர்றார் ஹீரோ கார்த்தி. படத்தோட ஹீரோ கார்த்தி, படத்துல ஹீரோ பேரும் கார்த்திதான். ஏர் ஃபோர்ஸ் பயிற்சிக்காக `பறந்து செல்லவா`ன்னு காஷ்மீர் போய் இருந்த ஹீரோ கார்த்தி 1 வருஷத்துக்கு அப்புறம் மும்பை தாராவில நடக்குற அவங்க வீட்டு ஃபங்ஷனுக்கு வர்றார். கார்த்திக்கு ஏதோ ஒரு வகைல தூரத்து ரிலேஷனா இருக்குற ஏதோ ஒரு பொண்ணுக்கு ஏதோ ஒரு மாப்பிள்ளையோட நடக்குற கல்யாண ஃபங்ஷன்தான் அது. கால்ல ஷூவும், கைல கிளவுசும் போட்டுக்கிட்டு ஹீரோ கார்த்தி கல்யாண கெட்டப்ல இருக்குற எல்லாரையும் கடந்து போய் பொண்ணை பார்த்துட்டு வந்துட்டு, அப்புறம் அவங்க அம்மா அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருக்கார். அப்பதான் பேக் கிரவுண்ட்ல `தன்னன்னா தன்னன்னா`ன்னு ஒரு பொண்ணு ரஹ்மான் மியூசிக்கோட பாடுறது கேட்குது. கார்த்தி போய் பார்த்தா அங்க ஹீரோயின் அதிதி ராவ் `சாரட்டு வண்டில` பாட்டை பாடிக்கிட்டே கல்யாண பொண்ணை வம்பிழுத்துக்கிட்டு இருக்காங்க. படம் பார்க்குறவங்களுக்கும் சரி படத்துல நடிக்கிறவங்களுக்கு சரி இந்த இடத்துல கண்டிப்பா அலைபாயுதே `டும் டும் டும்` சாங்க் தான் ஞாபகம் வரும். பார்த்த அந்த செகண்ட்லயே ஹீரோயின் மேல ஹீரோ லவ்ல விழுந்துடுறார்.

அந்த பாட்டுக்கு இடைலயே ஹீரோ கார்த்தி `என் பேரு கார்த்தி உன் நேம்` அப்படின்னு கேட்க, `தமிழ்நாட்டு பொண்ணுங்க பேர்லாம் சொல்ல மாட்டாங்க`ன்னு யூடியூப் விளம்பரத்தைவிட ஷார்ட்டா சொல்லிட்டு பாட்டு பாடிக்கிட்டே ஓடிட்றாங்க. பட் அந்த பாட்டு முடிஞ்சு, கல்யாணம் முடிஞ்சதும் ஹீரோயின் இருந்த இடமே தெரியாம, சொல்லாம கொள்ளாம சொந்த ஊருக்கு போயிடுறாங்க. அதுக்கு அப்புறம் ஒரு மாசம் கார்த்தி ஹீரோயின் நினைப்போடவே சாப்பிடாம சுத்துனாலும் மறக்காம ஷேவ் மட்டும் பண்ணிடுறார். ஒரு மாசம் லீவ் முடிஞ்சு மறுபடியும் காஷ்மீருக்கு ஏர் ஃபோர்ஸ் வேலைக்காக போறார் கார்த்தி. அங்கதான் அவர் மறுபடியும் ஹீரோயின் அதிதி ராவை பார்க்கிறார். `இங்க என்ன பண்ணுற`ன்னு கார்த்தி கேட்கவும் `நான் ஏர் போர்ஸ்லதான் டாக்டரா இருக்கேன்`னு அதிதி சொல்றாங்க. இந்த தடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு ஹீரோ நேரா போய் ஹீரோயின்கிட்ட ப்ரோபோஸ்லாம் பண்ணாம 'என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா'ன்னு கேட்குறார். 'அதுக்குள்ள கல்யாணமா? இன்னும் படத்துல நாலு சாங் இருக்கு, ஒரு ஃபைட் இருக்கு'ன்னு ஹீரோயின் யோசிச்சு திகைச்சு பார்த்துக்கிட்டு இருக்குறப்பதான் கார்த்தி அவர் டீம் கூட சேர்ந்து `அழகியே....மேரி மீ மேரி மீ` பாட்டு பாட ஆரம்பிக்கிறார். அந்தப் பாட்டு முடிஞ்சதும் நடக்குற டீ பார்ட்டில ஹீரோ கார்த்தி அதிதிகிட்ட `ஈவ்னிங் ஏர் போர்ஸ் ஆஃபிஸ்ல மீட் பண்ணலாம்னு` சொல்லுறார்.

அதுவரைக்கும் ஹீரோயினுக்கு ஹீரோ மேல எந்த லவ்வுமே வரல. ஆனா அன்னைக்கு ஈவ்னிங் ஏர் ஃபோர்ஸ் ஆஃபிஸ்ல மீட் பண்ணறப்ப ஹீரோ த்ரில்லா இருக்கும் வான்னு சொல்லி அவரோட ஏரோ பிளைன்ல ஹீரோயினை கூட்டிட்டு போயிடுறார். காஷ்மீருக்கு மேல ஜில்லுன்னு காத்து வானத்தை பார்த்துன்னு சொல்லுற ரேஞ்சுக்கு குளுகுளு, கிளுகிளுன்னு இருக்கு. அப்பதான் ஹீரோயின் அதிதிக்கு லேசா ஹீரோ மேல லவ் வருது. அங்கேயே படத்தோட இன்னொரு பாட்டும் வருது. பட் அது என்ன பாட்டுன்னு ரஹ்மான் ப்ரோ இன்னும் ரிலீஸ் பண்ணாததால இப்போதைக்கு எங்களால அதை சொல்ல முடியாது மக்களே. அந்தப் பாட்டு முடியவும் ஹீரோயினுக்கு ஹீரோ மேல காதல் பிறக்கவும் கரெக்ட்டா இருக்கு. அதுதான் படத்தோட இடைவேளை.

இன்டர்வெல் முடிஞ்சதும் ஹீரோவை அவங்க டீம்ல இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய ஆப்ரேஷனுக்காக அனுப்ப முடிவு பண்றாங்க. ஹீரோயின் லவ்வை சொல்லாமலேயே ஹீரோவை அலையவிட்டுட்டு இருக்காங்க. இந்த நேரத்துல ஹீரோவுக்கு பாகிஸ்தான் போக சொல்லி ஆர்டர் வர்றதால அவர், 'நான் பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷனுக்காக போறேன். நீ என்னை விரும்புறதை விட நான் உன்னை அதிகமா விரும்புவேன், நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை விரும்புவேன், நீ என்னை விரும்பலைனாலும் விரும்புவேன்` அப்படின்னு பொத்தாம் பொதுவா சொல்லிட்டு போறார். அப்பதான் ஹீரோயின், 'நீ சீக்கிரம் பாகிஸ்தான் போயிட்டு வா, உன்னை நேசிக்கிறேனா இல்லையான்னு சின்ன டயலாக்ல சின்னதா உன்கிட்ட சொல்றேன் அதுவரைக்கும் காத்திருப்பேன், ஏன்னா அதுதான் தமிழ்நாட்டு பாணி'ன்னு சம்பந்தமே இல்லாம சாங் லிரிக்ஸை டயலாக்கா பேசுறாங்க. ஹீரோ சோகத்தோடவும், கோவத்தோடவும் பாகிஸ்தான் கிளம்பிப் போய் சண்டை போட்டுக்கிட்டு இருக்கார். அப்பதான் வாட்ஸ் அப்லயும், ஃபேஸ்புக்லயும் பாகிஸ்தான் போன இந்திய வீரர்கள் மரணம்னு நியூஸ் வருது. இதைக் கேட்டுட்டு ஹீரோயின் மயங்கி விழுறாங்க. அப்புறமா எந்திரிச்சு கார்த்தி வருவார் வருவார்`ன்னு காத்திருந்து `வான் வருவான் வான் வருவான்` பாட்டு பாடுறாங்க .படம் முடியுற டைம் பார்த்து அங்க கார்த்தி கோவமா சண்டை போட்டு கடைசியா ஜெயிச்சிட்டு இந்தியாவுக்கு திரும்ப வர்றார். ஹீரோயின் அவரை பார்த்துட்டு ஓடி வர்றாங்க. அங்கதான் மணிரத்னம்னு பேர் போடுறாங்க. படத்தை முடிக்கிறாங்க. இந்தப் படத்தோட கதைல இருந்து என்ன தெரியுதுன்னு தேவை இல்லாம வாட்ஸ் அப்ல வதந்தி பரப்பி வைரல் ஆக்காதீங்கன்னு தெரியுது. அதெல்லாம் இருக்கட்டும் ஹீரோயின் பேரு அதிதி. ஆனா படத்துல அவங்களுக்கு என்ன பேருன்னு சொல்லவே இல்லைன்னு கேட்குறீங்களா...எல்லாத்தையும் இங்கயே சொல்லிட்டா எப்படி? போய் படத்தையும் பாருங்க பாஸ்.

லோ.சியாம் சுந்தர்