Published:Updated:

"நம் நக்கலாலும் வெட்டித்தனத்தாலும் முட்டாளாகப்போகிறோம்!" - #Nesamani குறித்து காயத்ரி ரகுராம்

தார்மிக் லீ

ட்விட்டரில் 'ப்ரண்ட்ஸ்' நேசமணியை வைத்து போடப்பட்ட மீம்கள்தான் வைரல். #Nesamani ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆவதைத் தொடர்ந்து காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் பகிர்ந்துள்ளார் காயத்ரி ரகுராம்.

"நம் நக்கலாலும் வெட்டித்தனத்தாலும் முட்டாளாகப்போகிறோம்!" - #Nesamani குறித்து காயத்ரி ரகுராம்
"நம் நக்கலாலும் வெட்டித்தனத்தாலும் முட்டாளாகப்போகிறோம்!" - #Nesamani குறித்து காயத்ரி ரகுராம்

ட்விட்டரில் நேற்று இரவிலிருந்து `ப்ரண்ட்ஸ்' பட`நேசமணி' கதாபாத்திரம்தான் டிரெண்ட். அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் எனச் சகல சோஷியல் மீடியாக்களிலும் அதை வைத்து போடப்பட்ட மீம்கள்தான் வைரலாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பா.ஜ.க-விலிருந்து தற்காலிகமாக ப்ரேக் எடுத்திருக்கும் காயத்ரி ரகுராம், இதைக் கண்டித்து காட்டமாக டிவீட்டியுள்ளார்.

Gayathri Raguram
Gayathri Raguram
Twitter

காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் சில மக்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு சினிமா காட்சியை வைத்து இவ்வளவு காமெடி செய்ய என்ன அவசியம். அதை வைத்துப் போடப்படும் மீம், ஹேஷ்டேக் போன்ற விஷயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று. #PrayForNesamani போன்ற தேவையில்லாத ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. நம்முடைய நக்கல்தனத்தாலும், வெட்டித்தனத்தாலும் முட்டாளாகத் தெரியப் போகிறோம்'' எனக் காட்டமாக டிவீட் பகிர்ந்திருந்தார். அதற்கு கமென்டில் குவிந்த நேசமணி ஆதரவாளர்கள், `மோடியை டிரெண்ட் பண்ணலனு கோபம் வருதா?' என்பது போல் ரிப்ளை செய்திருந்தனர்.

இதுபோல் தொடர்ந்து மோடியை ஒப்பிட்டு கமென்ட் வரவும் அதற்கு இன்னொரு டிவீட்டைப் பகிர்ந்திருந்தார் காயத்ரி ரகுராம். அதில், "மோடி ஜிக்கு எதிராக இதை நீங்கள் செய்ய நினைத்தால் இது முட்டாள்தனமானது. இது நம்மை முட்டாள்தனமாகக் காட்டும் செயல். மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் நமக்கு மூளையில்லை என்று நினைத்துவிடுவார்கள். முக்கால்வாசி ஆட்கள் இந்த காமெடியையே புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது? முட்டாள்தனம்!" எனக் குறிப்பிட்டிருந்தார் காயத்ரி. இந்த டிவீட்டின் கமென்டில் `நேசமணி' தொடர்பான ரிப்ளைகளாகக் குவிகின்றன.