Published:Updated:

"இது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல்!" நிரஞ்சனி அகத்தியன்

நிரஞ்சனி அகத்தியன்
நிரஞ்சனி அகத்தியன்

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் படத்தின் நாயகிகளுள் ஒருவர் நிரஞ்சனி அகத்தியனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றத் திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா, கெளதம் மேனன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி மற்றும் அந்தப் படத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியன் இருவருக்கும் திருமணம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து நிரஞ்சனியிடம் பேசினேன்.

தேசிங் துரைசாமி
தேசிங் துரைசாமி

"எங்க வீட்டுல நடக்கயிருக்குற கடைசி திருமணம் என்னுடையது. என்னோட அக்காக்கள் கனி மற்றும் விஜி ரெண்டு பேரும் செம ஹேப்பியா இருக்காங்க. என்னோட திருமண செய்தியை முதல்ல இவங்கதான் வெளியிடணும்னு ஆர்வமா இருந்தாங்க. முக்கியமா, எங்க வீட்டு மருமகன்கள் திரு மற்றும் ஃபெரோஸ் ரெண்டு பேருமே ரொம்ப ஜாலி டைப். எனக்கு நல்ல நண்பர்களும்கூட. இதே மாதிரியே என்னுடைய வருங்கால நண்பரும் ஜாலியான பெர்சனாலிட்டிதான். எங்க வீட்டுக்கு ஏத்த மணமகன் தேசிங். முக்கியமா எங்க வீட்டுல ஏற்கெனவே மூன்று இயக்குநர்கள். இப்போ இவரும் அதுல சேர்ந்துட்டார். எல்லா பெருமையும் எங்க அப்பா அகத்தியனையே சேரும்" என நிரஞ்சனி சொல்லவும் இவர்களின் லவ் ஸ்டோரி பற்றி கேட்டேன்.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' போதுதான் உங்களின் லவ்ஸ்டோரி ஆரம்பமானதா?

விஜயலட்சுமி, நிரஞ்சனி, கனி
விஜயலட்சுமி, நிரஞ்சனி, கனி

''இந்தப் படத்துல கமிட்டாகுற வரைக்கும் தேசிங்கை எனக்கு சுத்தமா தெரியாது. படத்தோட கேரக்டருக்காகத்தான் முதல்ல சந்திச்சார். படத்தோட வேலைகள் தொடங்குனதுல இருந்து ரெண்டு பேரும் நண்பர்களாக இருந்தோம். இதுக்குப்பிறகு, கொஞ்சம் கொஞ்சமா எங்களைப் பற்றி நல்லா தெரிஞ்சிக்கிட்டு, ஒரு புரிதல் வந்ததும் கல்யாணம் பண்ற முடிவை ரெண்டு பேரும் எடுத்தோம். எங்க ரெண்டு பேருடைய வீட்டுலயும் இதுக்கு சம்மதம் சொன்னாங்க. முக்கியமா, என்னுடைய சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் செம ஹேப்பியா இருக்காங்க. அப்பாவும் ஹேப்பி."

திருமண நாள் சொல்லுங்க?

நிரஞ்சனி அகத்தியன்
நிரஞ்சனி அகத்தியன்

"இந்த வருஷம் ஆரம்பிச்சவுடனே தேதியை ஃபிக்ஸ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். நெருங்கிய நண்பர்களின் திருமணம் தை மாசத்துல இருந்தனால எங்க திருமணத்தை பிப்ரவரி 25-ம் தேதி வெச்சிருக்கோம். கடலுக்கு முன்னாடியிருக்குற திடல்ல கல்யாணம் பண்ணனும் ஆசை. இதனால பாண்டிச்சேரில திருமணம் செய்ய இருக்கோம்."

உங்க இருவரின் திருமணத்துக்கு துல்கர் சல்மான் எப்படி வாழ்த்துகள் சொன்னார்?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்... டீம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்... டீம்

"எங்களுடைய காதல் குறித்து வெளியே யார்கிட்டயும் நாங்க பகிர்ந்துக்கிட்டது இல்ல. ஆனா, திருமண அறிவிப்பு வெளியே வர்றதுக்கு முன்னாடி நெருங்கிய நட்பு வட்டராங்களுக்கு சொல்லணும்னு ஆசைப்பட்டோம். இதுல, துல்கருக்குதான் முதல்ல சொன்னோம். தேசிங்கு போன் பண்ணி திருமணம் நடக்கப் போறதை சொன்னார். 'பொண்ணு யார்'னு துல்கர் கேட்டதுக்கு 'நிரஞ்சனி'னு பதில் சொல்லியிருக்கார். முதல்ல, துல்கருக்கு என் ஞாபகம் வரல. கொஞ்ச நேரத்துல, 'ஓ, நம்ம நிரஞ்சனியா... நம்பவே முடியலயே. நீங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கவே இல்ல. எந்த அறிகுறியும் ஷூட்டிங் ஸ்பாட்ல தெரியவே இல்ல'னு சொல்லியிருக்கார். ஆனா, ரித்துகிட்ட சொன்னப்போ 'கொஞ்சம் டவுட் அப்பப்போ இருந்தது. வாழ்த்துகள்'னு சொன்னாங்க.

திருமணத்துக்கு பிறகும் சினிமால தொடர்ந்து நடிப்பீங்களா?

தேசிங் பெரியசாமி, நிரஞ்சனா
தேசிங் பெரியசாமி, நிரஞ்சனா

"நல்ல வாய்ப்புகள் வந்தா நிச்சயமா நடிப்பேன். இதே மாதிரியே என்னுடைய காஸ்ட்யூம் டிசைனிங் வேலைகளிலும் தொடர்ந்து ஈடுபடுவேன். நானும், தேசிங்கும் எங்களுடைய வேலைகளை புரிஞ்சிக்கிட்டு பகிர்ந்து செய்யறதுக்கு விருப்பமா இருக்கோம்."

அடுத்த கட்டுரைக்கு