Published:Updated:

``மிகச்சிறந்த நடிகை ஷோபா... ஆனா, இப்ப நினைவுலகூட யாரும் நினைக்கிறதில்லை!'' - விஜி #RemembringShoba

விஜி சந்திரசேகர்
விஜி சந்திரசேகர்

யாரும் எதிர்பார்க்காத இறப்பு. அதுவும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதுலயிருந்து மே-1 வந்துட்டாலே எனக்கு ஷோபாவுடைய இறப்பு செய்திதான் கண் முன்னாடி வரும்.

தென்னிந்திய சினிமா மறக்கமுடியாத நாயகிகளில் ஒருவர் ஷோபா. மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என 70 படங்களுக்கும் மேல் நடித்துப் புகழ்பெற்றவர். `முள்ளும் மலரும்', `பசி', `அழியாத கோலங்கள்', `மூடுபனி' என இவர் நடித்த தமிழ்ப்படங்கள் இன்றுவரை கொண்டாடப்படுகின்றன. மிகச்சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வென்றவர் ஷோபா. 1980-ம் ஆண்டு மே 1-ம் தேதி அவருக்கு தேசிய விருது வழங்கப்பட இருந்தது. ஆனால், அன்றே அவரது சென்னை இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார் ஷோபா. இறக்கும்போது அவருக்கு வயது 18. அவர் இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஷோபா பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகை விஜி சந்திரசேகர்.

ஷோபா
ஷோபா

``நடிகை ஷோபாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சொல்லப் போனா ரெண்டு பேருக்கும் பெரிய அறிமுகம் கிடையாது. அவங்க உயிரோட இருந்தப்போ சினிமாவுக்கு நான் நடிக்கக்கூட வரல. ஆனா, சின்ன வயசுல இருந்து அவங்க நடிப்புப் பிடிக்கும். அவங்க ரசிகை நான். அவங்ககிட்ட ஒரு ஈர்ப்பு இருந்துக்கிட்டே இருக்கும். நான் படிச்ச காலேஜுக்கு ஒருமுறை ஷோபா வந்திருந்தாங்க. அப்போ நான் ஃபர்ஸ்ட் இயர் படிச்சிக்கிட்டு இருந்தேன். காட்டன் புடவை, சின்ன கொண்டை, பெரிய பொட்டுனு அழகா இருந்தாங்க. கூட்டத்துல ஒருத்தியா நின்னுட்டு அவங்க பேசுறதைப் பார்த்திருக்கேன். மெய்சிலிர்த்த மூவ்மென்ட்ஸ் இதெல்லாம். சினிமா மேல பெரிய ஆசை, கனவுகூட அப்போ எனக்குள்ள இருந்ததில்ல.

அந்தக் காலத்துல எல்லாருக்கும் பிடிச்ச நாயகி ஷோபாதான். இவங்களோட `பசி' படத்தை சமீபத்துலகூட பார்த்தேன். `முள்ளும் மலரும்' எப்போவுமே ஃபேவரைட். ஓவர் ஆக்ட்டிங் அப்படிங்குற வரையறைகுள்ள வராம அளவா நடிப்பாங்க.
விஜி

அவங்க இறந்த செய்தி கேட்டு ரொம்பவே ஷாக் ஆகிட்டேன். நியூஸ் பேப்பர் முழுக்க ஷோபானு இவங்க பேர்தான் எழுதியிருந்தது. யாரும் எதிர்பார்க்காத இறப்பு. அதுவும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதுலயிருந்து மே-1 வந்துட்டாலே எனக்கு ஷோபாவுடைய இறப்புச் செய்திதான் கண் முன்னாடி வரும். அவங்களோட `பசி' படத்துக்கு அப்போ தேசிய விருது அறிவிச்சிருந்தாங்க. ஆனா, விருது வாங்காமலேயே இறந்துட்டாங்க. அப்போலாம் வீட்டுல சினிமா பார்க்க அனுமதி கிடைக்காது. அதனால இவங்க படத்தை நான் நடிக்க வந்ததுக்குப் பிறகுதான் பார்க்க ஆரம்பிச்சேன். இருந்தும் இவங்களை சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்.

பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரியே இருப்பாங்க. அந்த காலத்துல எல்லாருக்கும் பிடிச்ச நாயகி ஷோபாதான். இவங்களோட `பசி' படத்தை சமீபத்துலகூட பார்த்தேன். `முள்ளும் மலரும்' எப்போவுமே ஃபேவரைட். ஓவர் ஆக்ட்டிங் அப்படிங்குற வரையறைகுள்ள வராம அளவா நடிப்பாங்க. இவங்க இறந்த பிறகுதான் சினிமாவுக்குள் நான் நடிகையா அறிமுகமானேன். அப்போ நிறைய பேர் இவங்களைப் பற்றி ஷூட்டிங் ஸ்பாட்டுல பேசிக்கிட்டு இருப்பாங்க. நிறைய கட்டுரைகளும் ஷோபா பற்றி படிச்சிருக்கேன். என் பொண்ணுக்கிட்ட , `ஷோபா நடிச்ச படத்தையெல்லாம் பாரு. நடிப்புனா இவங்களை பார்த்து கத்துக்கலாம்'னு சொல்லுவேன். பழைய படத்தை அதிகமா பார்க்கச் சொல்லிக்கிட்டே இருப்பேன். இந்த லாக்டெளன்ல அதிகமான படங்களைத்தான் லவ்லியும் பார்த்துட்டு இருக்கா. நேச்சுரல் ஆக்டர்ஸ் ஷோபாவைத் தவிர உலகத்துலயே வேற யாருமில்ல. உலகத்துக்கே இது தெரியும். இவங்க விதி ஏன் இப்படி முடிஞ்சதுனு தெரியல. நஷ்டம் நமக்குதான். நல்ல நடிகையை இழந்துட்டோம்.

ஷோபா
ஷோபா

சில வருஷங்களுக்கு முன்னாடியெல்லாம் ஷோபாவுடைய நினைவுநாளுல நிறைய பேர் அவங்களை ஞாபகம் வெச்சிக்கிட்டு நினைவுகளைப் பகிருவாங்க. இப்போ அதெல்லாம் கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிருச்சு. யாரும் பெருசா இவங்களை நினைக்குற மாதிரி தெரியல. அதனால இவங்க நினைவு நாள் வந்தப்போ ட்விட் பண்ணேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர் வருத்தப்பட்டாங்க. கொஞ்சநாள் வாழ்ந்திருந்தாலும் மனசுல இருந்து நீங்காத படங்கள்ல நடிச்சவங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு எல்லா மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகை. இவங்களை நினைச்சிட்டாலே மனசு கஷ்டமாகிரும். முன்ஜென்மத்துல ஏதோ ஓர் உறவு இருந்திருக்கும்னு நினைக்குறேன்'' என்கிறார் நடிகை விஜி சந்திரசேகர்.

அடுத்த கட்டுரைக்கு