Published:Updated:

What to watch on Theatre & OTT: மலையாளம், இந்தி, தெலுங்கு டாப்ஸ்டார்களின் படங்கள்; என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்

இந்த வாரம் அக்டோபர் முதல் வாரத்தில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

What to watch on Theatre & OTT: மலையாளம், இந்தி, தெலுங்கு டாப்ஸ்டார்களின் படங்கள்; என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் அக்டோபர் முதல் வாரத்தில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

Published:Updated:
இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்

பிஸ்தா (தமிழ்)

பிஸ்தா
பிஸ்தா

சிரிஷ் சரவணன், சதீஷ், யோகி பாபு, செந்தில் ஆகியோர் முக்கிய நடித்துள்ள தமிழ்த் திரைப்படம் பிஸ்தா. இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ள இப்படம் இன்று (அக்டோபர் 7ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

'ரீ' (தமிழ்)

'ரீ'
'ரீ'

'ரீ' தமிழ்த் திரைப்படம் இன்று (அக்டோபர் 7, 2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தரவடிவேல் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரசாத் சீனிவாசன் மற்றும் காயத்ரி ரேமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Rorschach (மலையாளம்)

Rorschach
Rorschach

இந்த உளவியல் த்ரில்லர் படத்தை நிசம் பஷீர் இயக்கியுள்ளார். மம்மூட்டி நடித்துள்ளார். மம்மூட்டி கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. கிரேஸ் ஆண்டனி, ஜெகதீஷ், ஷராபுதீன், கோட்டயம் நசீர், சஞ்சு சிவராம் மற்றும் பிந்து பணிக்கர், ஜார்ஜ் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இது இன்று (அக்டோபர் 7, 2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Mei Hoom Moosa (மலையாளம்)

Mei Hoom Moosa
Mei Hoom Moosa

சுரேஷ் கோபி, பூனம் பஜ்வா, சைஜு குருப் மற்றும் ஹரீஷ் கனரன் ஆகியோர் நடித்த மலையாளத் திரைப்படம் 'மெய் ஹூம் மூசா'. இயக்குநர் ஜிபு ஜேக்கப் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்று (அக்டோபர் 7, 2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Ghost (தெலுங்கு)

The Ghost
The Ghost

பிரவீன் சத்தாரு எழுதி இயக்கியுள்ளப் படம் 'The ghost'. திரில்லர் திரைப்படமான இப்படத்தில் நாகார்ஜுனா மற்றும் சோனல் சவுகான் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Swathi Muthyam (தெலுங்கு)

Swathi Muthyam
Swathi Muthyam

இப்படத்தை லக்ஷ்மண் கே.கிருஷ்ணா இயக்கியுள்ளார். பெல்லம்கொண்டா கணேஷ் பாபு, வர்ஷா பொல்லம்மா, ஹர்ஷவர்தன், வெண்ணெலா கிஷோர் ஆகியோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அக்டோபர் 5ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

Goodbye (இந்தி)

Goodbye
Goodbye

குடும்ப ஃபீல்குட் படமான இதை விகாஸ் பாஹ்ல் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா (அவரது முதல் இந்தித் திரைப்படம்), நீனா குப்தா, சுனில் குரோவர், பாவைல் குலாட்டி, ஆஷிஷ் வித்யார்த்தி, எல்லி அவ்ர்ராம், சாஹில் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்று (அக்டோபர் 7ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Hindutva (இந்தி)

Hindutva
Hindutva

இந்து மதம் குறித்து கதை இது. கரண் ரஸ்தான் இப்படத்தை இயக்கியுள்ளார். தீபிகா சிகாலியா, சோனாரிகா படோரியா, அங்கித் ராஜ், ஆஷிஷ் ஷர்மா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்று (அக்டோபர் 7ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Ticket to Paradise (English)

Ticket to Paradise
Ticket to Paradise

ஜார்ஜ் க்ளூனி மற்றும் ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த இப்படம் இன்று (அக்டோபர் 7ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் பார்க்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படைப்புகள்

Eesho (SonyLIV-மலையாளம்)

Eesho
Eesho

இயக்குநர் நாதிர்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் SonyLIV ஓடிடி தளத்தில் அக்டோபர் 5ம் தேதி வெளியாகியுள்ளது. ஜெயசூர்யா, நமீதா பிரமோத், ஜாபர் இடுக்கி, சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Maja Ma (Prime-இந்தி)

Maja Ma
Maja Ma

நடனம் மற்றும் சமையலுக்குப் புகழ்பெற்ற பல்லவி படேல், நடுத்தர வயதுடைய அர்ப்பணிப்புள்ள இல்லத்தரசி. அவரது மகன் தேஜஸ் ஒரு பணக்கார NRI பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் தினத்தன்று அவரது நடுத்தரக் குடும்பத்தின் பண்பைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு நிகழ்வு அரங்கேறுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதைக்களம். இப்படம் அக்டோபர் 6ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

Prey (Disney+ Hotstar - English)

Prey
Prey

இந்த படத்தை டான் ட்ராக்டன்பெர்க் இயக்கியுள்ளார், பேட்ரிக் ஐசன் எழுதியுள்ளார். இதில் Amber Midthunder, Dakota Beavers, Dane DiLiegro, Michelle Thrush, Stormee Kipp, Julian Black Antelope மற்றும் Bennett Taylor ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு வேட்டைக்காரனாக தன்னை நிரூபிக்கப் பாடுபடும் திறமையான பழங்குடி பெண்ணான நருவைச் சுற்றி இதன் கதை சுழல்கிறது. உலகெங்கும் வரவேற்பைப் பெற்ற 'பிரிடேட்டர்' படத்தொடரின் அடுத்த பாகம் இது. இப்படம் இன்று (அக்டோபர் 7ம் தேதி) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Werewolf by Night (Disney+ Hotstar - English)

Werewolf by Night
Werewolf by Night

'Werewolf by Night' திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. ஹீதர் க்வின் மற்றும் பீட்டர் கேமரூன் எழுதி மைக்கேல் கியாச்சினோ இயக்கத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. உலகப்புகழ்பெற்ற மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) சிறப்புப் படைப்பாக இப்படம் வெளியாகியுள்ளது.

Luckiest Girl Alive (Netflix -English)

Luckiest Girl Alive
Luckiest Girl Alive

ஒரு உண்மையான குற்ற ஆவணப்படம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எதிர்கொள்ளவும், கேள்விக்குள்ளாகவும் செய்கிறது. இப்படத்தை மைக் பார்கர் இயக்கியுள்ளார். இப்படம் Netflix தளத்தில் இன்று (அக்டோபர் 7ம்) தேதி வெளியாகியுள்ளது.