Published:Updated:

"பாக்கத்தான போறீங்க..." 'ஓ பேபி' சமந்தாவின் சேட்டை

சந்தோஷ் மாதேவன்

ஒரு பக்கம் லக்‌ஷ்மியின் கதாபாத்திரம் தன் கதையைச் சொல்ல, மறுமுனையில் சமந்தா தன் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்ல, இருவரும் ஒரே நபர்தானா, வெவ்வேறு ஆட்களா என்ற குழப்பத்தையெல்லாம் கிளப்புகிறது 'ஓ பேபி' டீசர்.

சமந்தாவின் சுட்டித்தனம் எப்போதுமே ரசிக்கும்படிதான் இருக்கும். நடை, உடல் மொழி, முகப்பாவனைகள் என எல்லா ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்து சுட்டிப்பெண்ணகவே திரையில் மாறிவிடுவார். மனம், பத்து எண்றதுக்குள்ள என இதுபோன்ற கதாபாத்திரங்கள் எப்போதுமே சமந்தாவின் கோட்டைதாம். 'ஓ பேபி' படத்தின் தமிழ் வெர்ஷினின் டீசரிலும் அதையே வெளிக்காட்டியுள்ளார் அவர்.

Oh Baby Samantha
Oh Baby Samantha

நந்தினி ரெட்டியின் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'ஓ பேபி' அடிப்படையில் ஒரு தெலுங்கு படம். சமந்தாவின் தமிழ் ரசிகர்களுக்காக, இந்தப் படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றது அதன் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ். சமந்தா முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ள இந்தப் படத்தில் லக்‌ஷ்மி, நாகஷெளரியா, ராஜேந்திர பிரசாத், ஊர்வசி எனப் பலர் நடித்துள்ளனர்.

ஒரு பக்கம் லக்‌ஷ்மியின் கதாபாத்திரம் தன் கதையைச் சொல்ல, மறுமுனையில் சமந்தா தன் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்ல, இருவரும் ஒரே நபர்தானா, வெவ்வேறு ஆட்களா என்ற குழப்பத்தையெல்லாம் கிளப்புகிறது 'ஓ பேபி' டீசர். எல்லாவற்றுக்கும் விடையாக 'பாக்கத்தான போறீங்க' என சமந்தா சொல்ல, டீசர் நிறைவடைகிறது. விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது.