சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“ஒரிஜினலைத் தாண்டிப் போகணும் ரிமேக் சினிமா!”

Oh மணப்பெண்ணே படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
Oh மணப்பெண்ணே படத்தில்...

அடுத்து என்னன்னு சதா நிறைய திட்டங்களோட இருக்காம, சந்தோஷமா அன்னைக்குப் பொழுது போகுதான்னு பார்க்கிறவன்

தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ செம ஹிட் அடித்த படம். நாலு தேசிய விருதுகளை வாங்கிக் குவிச்சிருக்கு. விஜய் தேவரகொண்டாவை அங்கே அறிமுகப்படுத்தி ரசிகர்களை பித்துப் பிடிக்க வச்சுது. ஒரு சினிமா எப்படி ஆரம்பிச்சு முடியணுமோ அந்த விதத்தில் அற்புதமாக அமைஞ்ச படம். இந்தப் படத்தைப் பார்க்கும்போதே ‘நம்ம நண்பன் ஹரிஷ் கல்யாணை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்’ என்று நினைத்தேன். ஆனால் அதனோட ரீமேக் உரிமை நம்ம கைக்கு வராமல் வேடிக்கை காட்டிக்கிட்டே இருந்தது. அப்புறம் கையில் வந்து அமர்ந்த பறவை மாதிரி பிடிபட்டது. அதுவே ‘Oh மணப்பெண்ணே!’ படமாக வந்திருக்கு. அத்தனை ஏரியா மக்களுக்கும் பிடிக்கிற கதை” உற்சாகமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் அணுக்கச் சீடர்.

“ஒரிஜினலைத் தாண்டிப் போகணும் ரிமேக் சினிமா!”
“ஒரிஜினலைத் தாண்டிப் போகணும் ரிமேக் சினிமா!”

‘‘ஹரிஷ் இதுல வாழ்க்கையை அதன் போக்கில் அலட்டிக்காம வாழ்ந்து கடந்து போகிற பையன். அடுத்து என்னன்னு சதா நிறைய திட்டங்களோட இருக்காம, சந்தோஷமா அன்னைக்குப் பொழுது போகுதான்னு பார்க்கிறவன். பேட்டிக்காக சொல்றேன்னு நீங்க நினைச்சாலும் சரி. இந்த சினிமாவை எப்படியாவது நண்பனை வைச்சு எடுக்கணும்னு இருந்தவனுக்கே வாய்ப்பு வந்தது ஆச்சர்யம். என் கூட படிச்ச நண்பன் என்பதாலோ என்னவோ, எனக்கும் ஹரிஷ்க்கும் அற்புதமான புரிதல் இருந்தது. இந்தக் கதையில் என்ன விசேஷம்னா, பல இடங்களில் அவங்கவங்க வாழ்க்கையை அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்போம்.

ஹரிஷ் விளையாட்டாக இருக்கிற பையன்; ப்ரியா பவானிஷங்கர் அக்கறையும் சென்சிட்டிவும் பொறுப்பும் லட்சியமும் கொண்ட பொண்ணு. இவங்க இரண்டு பேரும் சந்திக்கிறதும், மிஞ்சியிருக்கிறதும் அவங்க இணைகிற விதமும் அவ்வளவு இயல்பாக நடந்தது. ஆரம்பத்தில் இரண்டு பேரும் செட்டாவாங்களான்னு சந்தேகம் இருந்தது. படம் இப்போது பார்த்தால் அப்படி ஒரு சந்தேகம் இருந்ததே மறந்துபோச்சு. இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே போற ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை மேல் நம்பிக்கை கூடும். சக மனுஷங்க மேல இன்னும் அன்பு கூடும். வன்முறை, ஆபாசம் என எதுவும் இல்லாமல் மனதை விட்டு இறங்காத படம். கொரோனா வழிவிட்டதும், ‘Oh மணப்பெண்ணே!’ உங்களுக்கு நிச்சயம் ட்ரீட்டா அமையும்.’’

“ஒரிஜினலைத் தாண்டிப் போகணும் ரிமேக் சினிமா!”
கார்த்திக் சுந்தர்
கார்த்திக் சுந்தர்

``ஹரிஷ் உங்கள் நண்பர் என்பதால் வசதியாக இருந்ததா?’’

‘‘ஹரிஷ் தெரிஞ்ச நண்பனாக மனசைப் புரிஞ்சவராக இருந்ததும் கூடுதல் சௌகரியம். நல்ல பர்ஃபாமர் நமக்கு ஃபிரண்டாக இருக்கிறது நல்லதுதானே. நேரம் தவறாமை, தொழில் நேர்த்தின்னு அவரின் தன்மையே அவரைப் பெரிய இடத்திற்குக் கூட்டிப் போகும். ப்ரியா கிட்டே அவ்வளவு பர்பெக்‌ஷன். படிப்படியாக வந்தவங்க. ஃபிலீங்கான கதையில் ஊர்த் திருவிழா பார்க்கிற மாதிரி கலகலப்பா செய்திருக்காங்க. சொல்லி வச்சமாதிரி அக்கறையோடு கேரக்டரில் புரிஞ்சுவச்சு நடிக்கிறாங்க. பெரும் வெற்றி பெற்ற படம் வேறே. மலையாளம், இந்தின்னு எடுத்து வெற்றிக்கொடி நாட்டிட்டாங்க. படம் ஒரிஜினலுக்கு நியாயம் செய்யணும். முடிந்தால் அடுத்த கட்டத்திற்குப் போகணும். இல்லாட்டி அந்த அளவுக்கு இருந்தாலே படத்தைக் கொண்டாடிடுவாங்க. இப்ப படமெல்லாம் முடிச்சு தள்ளி நின்று பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.’’

“ஒரிஜினலைத் தாண்டிப் போகணும் ரிமேக் சினிமா!”
“ஒரிஜினலைத் தாண்டிப் போகணும் ரிமேக் சினிமா!”

``இசை குறித்துச் சொல்லுங்கள்’’

‘‘விஷால் சந்திரசேகர்தான் மியூசிக். நான்கு பாடல்கள் நல்லா வந்திருக்கு. ‘ஒரே ஒரு புல்லாங்குழல் உறவின் அனுபவத்தைச் சொல்லிட முடியும்’னு சொல்வாங்க. பின்னணி இசை அமைப்பதற்கு முன்பு பார்த்ததைவிட பின்னாடி பார்க்கும்போது படம் இன்னொரு இடத்திற்குப் போயிருக்கு. விஷாலுக்கு அமைதி, சப்தம் புரியுது. அதனால் இந்த சினிமாவிற்கு அவர் ரசனை சேர்த்திருக்கிறார். சொல்லப்பட்ட விஷயங்களைவிட சொல்லாத விஷயங்களுக்கு சுவை அதிகம்னு பல சந்தர்ப்பங்களில் சினிமா உணர்த்திக் கொண்டே இருக்கிறது. மனதிற்கு நெருக்கத்தைக் கொடுத்தால் அது நல்ல படைப்பாக அமைஞ்சிடும். ‘Oh மணப்பெண்ணே!’ அந்த இடத்தில் வந்து நிற்கும்னு தோணுது. எனக்குக் கிடைத்த இந்த நல்ல முதல் வாய்ப்பை காலம் கொடுத்த கனியாகவே பார்க்கிறேன்.’’