Published:Updated:

காதலும், ஃபேன்டசியும், கொஞ்சம் விஜய்சேதுபதியும்..! `Oh My கடவுளே’ ப்ளஸ்/மைனஸ் ரிப்போர்ட்

ஓ மை கடவுளே

எப்படியிருக்கிறது `ஓ மை கடவுளே?'

காதலும், ஃபேன்டசியும், கொஞ்சம் விஜய்சேதுபதியும்..! `Oh My கடவுளே’ ப்ளஸ்/மைனஸ் ரிப்போர்ட்

எப்படியிருக்கிறது `ஓ மை கடவுளே?'

Published:Updated:
ஓ மை கடவுளே

`நம்ம வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நம்ம நன்மைக்குதான் நண்பா. நாமதான் அதைத் தெரிஞ்சுக்குறதும் இல்லை, புரிஞ்சுக்குறதும் இல்லை' என அகில உலகத்துக்குமான தத்துவத்தை, வாழ்க்கையின் தாத்பரியத்தை, காதல்-காமெடி-கற்பனை கலந்து குட்டிக்கதை சொல்கிறது `ஓ மை கடவுளே.'

* பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டி என உறவுமுறைகளை வைத்து நெகட்டிவிட்டியாக மீமர்களும் கவிஞர்களும், கட்டுரையாளர்களும் கழுவி ஊற்றிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், பெஸ்ட்டி உறவுமுறைகளைப் பற்றிய தெளிவான புரிதலோடும் அழுத்தமான சிந்தனையோடும் அணுகியிருக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இப்படிச் சொன்னால் எல்லோருக்கும் புரியும் ப்ரோ!

* கதாபாத்திர வடிவமைப்பில் காணப்படும் முழுமையான ஆர்க், திரைக்கதைக்கு ஒன்றரை டன் குளுக்கோஸ் சேர்க்கிறது. மையக் கதையிலிருந்து இஷ்டத்துக்கு விலகி திரைக்கதை எழுதாமல், கஷ்டப்பட்டு எல்லாக் காட்சிகளையும் கனெக்ட் செய்ததில், நாம் வாங்கிய நார்மல் டிக்கெட்டும் கோல்டன் டிக்கெட்டாக மாறுகிறது.

ஓ மை கடவுளே
ஓ மை கடவுளே

* தேவையான அளவு மட்டுமே சேர்த்த உப்பு, உரைப்பு, இனிப்பாக வசனங்கள், `ஓ மை கடவுளே'வுக்கு இன்னும் சுவை கூட்டுகின்றன. அவ்வளவு காலம், `ஏய் நூடுல்ஸ் மண்டை' எனக் கலாய்க்கும் அசோக் செல்வன், ஒரு கனம், `உன் கர்லி ஹேர் நல்லாருக்கு' எனச் சொல்லுமிடம் மானே, தேனே, பொன்மானே எதுவுமில்லாத பல கோடி இதயங்களைக் கலங்க வைக்கும் அழகிய கவிதை!

* அர்ஜூன் மாரிமுத்துவாக பீரும் சிறப்புமாக நடித்துக்கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் செயற்கைத்தனம், `மே ஐ கம் இன்' என்கிறது. ஆனால், அடுத்தடுத்தக் காட்சிகளில் அதை வாசலிலேயே வைத்து பிடனியில் அடித்து பத்திவிட்டது பெரும் ஆறுதல். தெளிந்து குழம்புவது, குழம்பித் தெளிவதென தெளிந்துத் தெளிந்து அடிவாங்கும் கதாபாத்திரம், அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* அசோக் செல்வன் மற்றும் மக்கள் செல்வன் காட்சிகள் அடிப்பொலி சாரே! செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் விஜய் சேதுபதி. காத்து வாக்குல நடித்துக்கொடுத்திருக்கிறார். கச்சிதமாக இருக்கிறது! ரமேஷ் திலக்கும் அவருக்கு இணையாக ஸ்கோர் செய்கிறார். ரமேஷ் திலக்கை இன்னும் நிறைய படங்களில் நிறைய பாத்திரங்களில் பார்க்க வேண்டுமென ஆசை வருகிறது!

* நடிப்பில் மீண்டும் நாக் அவுட் பன்ச்சுகளை அடித்து அசத்தியிருக்கிறார் ரித்திகா சிங். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த லிஃப்ட் காட்சியில் நடிப்பு மட்டுமல்ல லிப் ஸிங்க்கும் பக்கா! அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு. படத்தில் அவருக்குக் கோபம் வந்தால், நமக்கு பயந்து வருகிறது. சீரியல் உலகில் கிடைத்த அனுபவம், பெரியத்திரையில் சீரியஸாக உதவியிருக்கிறது வானிபோஜனுக்கு. நல்ல ஸ்டார்ட்!

ஓ மை கடவுளே
ஓ மை கடவுளே

* காமெடியன் போஸ்ட்டில் இருந்து குணச்சித்திர ரோலுக்கு புரொமோஷன் ஆகியிருக்கிறார் ஷாரா. தனக்குக் காமெடி மட்டுமல்ல, நடிப்பும் வரும் என இனி ரவுண்ட் நெக் டி-ஷர்டிலும் காலரைத் தூக்கிவிட்டுச் சுற்றலாம். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பைவிட, அவர் கதாபாத்திரத்தின் பின்கதை உருக்கம். அந்த ஒட்டுத்தாடிதான் கொஞ்சம் உறுத்தல்!

* படத்தில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் சரக்கு அடிக்கும் காட்சிகள், எந்தளவுக்கு இயல்பானதாகக் காட்டியிருக்கிறார்களோ, அப்படியே அதே இயல்பை பெண் கதாபாத்திரங்கள் சரக்கு அடிக்கும் காட்சியிலும் தொடர்ந்திருக்கிறார் இயக்குநர். தமிழ் சினிமாவில் சம்பிராதயமாக ஹீரோயின்கள் சரக்கடித்துவிட்டு செய்யும் சேட்டகளை எல்லாம் காட்டி வெறுப்பேற்றாமல் விட்டதற்கு நன்றி.

* திரையில் ஆங்காங்கே, சில சின்னச் சின்ன விஷயங்கள் `அட' போட வைத்தன. அசோக் செல்வன் அணிந்துவரும், `F.R.I.E.N.D.S' மற்றும் `FLAMES' டி-ஷர்ட். கேப் டிரைவரின் டேஷ்போர்டில் தொங்கும் பாக்ஸிங் க்ளவ் கீ செயின் என நிறைய அடுக்கலாம். அந்த ஆடிஷன் சீனும் பைக் ரைடும், அதன் இடையிடையே வரும் பாடலும் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. யெஸ்... சோதிக்குது பொறுமைய!

ஓ மை கடவுளே
ஓ மை கடவுளே

`உன் வாழ்க்கை உன் கையில் மாப்பி. பி ஹேப்பி' எனும் தத்துவத்தை கடைசியாகச் சொல்லவரும் படம், பின்னர் ஏன் ஃபேன்டஸிக்குள் நுழைந்தது எனும் கேள்வி வரலாம்! ஆனால், லவ் கோர்ட் விசிட்டிங் கார்டில் பெரியார் நகர் எனும் பெயர் இருப்பதைக் கொண்டு, அந்த `ஃபேன்டஸி'யானது திரைக்கதைக்கான சிறு கருவியாக மட்டுமே பயன்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.