Published:Updated:

இப்படியொரு பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா? #MyVikatan

சினிமாவில் பெண் பாத்திரப் படைப்பு எப்படியிருக்கிறது என்று பல காலமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

இப்படியொரு பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா? #MyVikatan

சினிமாவில் பெண் பாத்திரப் படைப்பு எப்படியிருக்கிறது என்று பல காலமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

Published:Updated:

ஓலா...

நமக்கெல்லாம் இந்தப் பெயர் கார்களை நினைவூட்டும். இங்கு அது கார் வாங்க விரும்பும் ஒரு பெண்ணின் பெயர். 18 வயதை விரைவில் எட்டிப் பிடிக்கவிருக்கும் போலந்து பெண். அவளின் ஆசையெல்லாம் தனக்கே தனக்காக ஒரு கார். ஆனால், பாருங்கள்... கார் வாங்குவதற்கு முதலில் டிரைவிங் டெஸ்ட்டில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு கவனமும் பொறுமையும் அவசியம். அவையெல்லாம் ஒலாவிடம் இருக்கிறதா?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கார் வாங்க நிறைய பணம் வேண்டும். அவ்வளவு பணம் அவளிடமோ, அவளின் அம்மாவிடமோ இல்லை. அப்பாதான் பணம் அனுப்ப வேண்டும். அவர் உணவுக்காக உழைப்பதோ அயர்லாந்தில்.

இங்கே போலந்தில் அவளோடும் அம்மாவோடும் இருப்பது ஒரு தம்பி. மாற்றுத் திறனாளி. அவனைக் கவனித்துக்கொள்வதே அம்மாவுக்கு பெரும்பாடு.

ஓலாவுக்கு அந்த நாள் நல்லதாக இல்லை. அவளுடைய கனவை நனவாக்கும் முதலடியே ஒரு சிறு தவறு காரணமாக மூன்றாவது முறையாக தோல்வி அடைகிறது. மீண்டும் முயற்சி செய்ய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். கார் வாங்குவதற்கு பணம் அனுப்புவதாக வாக்களித்திருந்தாரே அப்பா. அவரும் வர வில்லை. அவருடைய தொலைபேசி அழைப்பும் வரவில்லை. ஆனால், அயர்லாந்திலிருந்து ஒரு தவறவிடப்பட்ட அழைப்பு. அந்த எண்ணை அழைத்தால் அதிர்ச்சியை அள்ளித் தருகிறார்கள். அப்பா அங்கே நடந்த ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டார்.

இப்போது அயர்லாந்து சென்று அப்பாவின் உடலைப் பெற்று போலந்துக்குக் கொண்டுவந்து இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். தம்பியை விட்டுவிட்டு அம்மாவால் நகர முடியாது. தவிர, அவருக்கு ஆங்கிலமும் தெரியாது. திடீர் குடும்பத் தலைவர் பொறுப்பு ஒலாவுக்கு வந்து சேர்கிறது. அவள் ஏனோ யோசிக்கிறாள். அப்பா அவ்வளவாக வீட்டுக்கு வராததும், அவரோடு ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம் உருவாகாததும்கூட காரணமாக இருக்கலாம்.

ஆனால், யாரேனும் ஒருவர் போய்த்தானே ஆகவேண்டும்? வேறு வழியின்றி நாடுவிட்டு நாடு பயணமாகிறாள் ஒலா. அங்கு என்ன நடந்தது? ஒலாவின் அப்பா எப்படி இறந்தார்? காப்பீட்டுப் பணம் கைகொடுக்குமா? மகள் கார் வாங்குவதற்காக அப்பா சேர்த்து வைத்திருப்பதாகச் சொன்ன பணம் எங்கே?

எல்லாவற்றுக்கும் விடை I Never Cry என்ற போலந்து-அயர்லாந்து திரைப்படத்தில் காத்திருக்கிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா, கோவா - இந்திய சர்வதேச திரைப்பட விழா, ஷான் செபாஸ்டியன் திரைப்பட விழா உட்பட உலகின் பல முக்கியமான விழாக்களில் பெரிதும் வரவேற்பு பெற்ற படம் இது.

படத்தின் இயக்குநர் Piotr Domalewski. போலந்தைச் சேர்ந்தவர். வயது 37. Cicha Noc என்ற விருது வென்ற படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக இவர் இயக்கிய படம்தான் I Never Cry. இப்போது ஆப்கான் மண்ணில் போலந்து ராணுவம் சம்பந்தப்பட்ட Nangar Khel – Betrayed என்ற படத்தை இயக்கி வருகிறார். தயாரிப்பு நிலையிலேயே அந்தப் படம் மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

ஒலாவின் ஆசை, கனவு, இலக்கு என எல்லாமே ஒரு கார்தான். அதன் அடிப்படை பெண்ணின் மொபிலிட்டிதான். காரில் பயணிக்க ஆசைப்பட்ட அந்தப் பெண், எதிர்பாராவிதமாக படம் முழுக்க வெவ்வேறு வாகனங்களில் பயணிக்கிறாள்.
Director Piotr Domalewski
Director Piotr Domalewski

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படியொரு பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா?

சினிமாவில் பெண் பாத்திரப் படைப்பு எப்படியிருக்கிறது என்று பல காலமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

`பெண் பிறரைச் சார்ந்திருக்கிறாள்; பெண் பிறரைச் சார்ந்தே வாழ வேண்டும்' என்பது போன்ற எண்ணங்கள் உடைய ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது 'மொபிலிட்டி' என்கிற இடம் விட்டு இடம் நகர்வதற்கான வசதி. அது சைக்கிளாகவோ, பைக்காகவோ, காராகவோ இருக்கலாம்.

இதற்கு ஓர் உதாரணம் தமிழ்நாட்டிலேயே உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கம் நடைபெற்ற போது, சைக்கிள் ஓட்டத் தெரிந்த பெண்களே அறிவொளியில் கற்கவும் கற்பிக்கவும் களத்தில் இறங்கினார்கள். ஒரு கிராமம் தாண்டி மறு கிராமத்துக்கு சைக்கிளிலேயே சென்று பல்வேறு வயதினருக்குப் பாடம் நடத்தினார்கள்.அந்த மாவட்டத்தில் அறிவொளி இயக்கம் மகத்தான வெற்றிபெற சைக்கிள் - அதாவது பெண்களுக்கான மொபிலிட்டி முக்கிய காரணமாக அமைந்தது.

இதேபோல தமிழக அரசு சார்பில் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்ட போதும், பின்னர் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்ட போதும, காலங்காலமாக இருந்துவந்த பல தடைகள் நீங்கின.

உலக சினிமா பற்றிப் பேசும்போது ஏன் இந்த உள்ளூர் உதாரணங்கள்? நாம் பேசிக்கொண்டிருக்கும் படத்துக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அந்தப் படம் I NEVER CRY. படத்தின் நாயகி ஒலாவின் ஆசை, கனவு, இலக்கு என எல்லாமே ஒரு கார்தான். அதன் அடிப்படை பெண்ணின் மொபிலிட்டிதான். காரில் பயணிக்க ஆசைப்பட்ட அந்தப் பெண், எதிர்பாராவிதமாக படம் முழுக்க வெவ்வேறு வாகனங்களில் பயணிக்கிறாள். நாடுவிட்டு நாடு செல்லும் சூழல் எதிர்பாராமல் அமைகிறது. விருப்பமில்லாமல்தான் தொடங்குகிறது அந்தப் பயணம். சந்திக்கும் மனிதர்களும் கண்டறியும் உண்மைகளும் அவளின் வாழ்க்கைப் பயணத்தில் பெரும் அத்தியாயமாக மாறுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எங்கோ வேறொரு தேசத்தில் இறந்துபோன ஒருவரின் உடலைக் கொண்டுவருவதில்தான் எவ்வளவு சிக்கல்கள்? அந்நிய தேசத்தில் தொழிலாளிகளாகச் செல்லும் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? எல்லாம் வெட்ட வெளிச்சமாகிறது இந்தப் படத்தில்.

இந்தப் பயணம் எப்படித் தொடங்குகிறது என்று அவசியம் சொல்லவேண்டும். அயல்நாட்டில் பணிபுரிந்துவந்த அப்பாவின் மரணச் செய்தி... அதைத் தொடர்ந்து அவரின் உடலை தாய்நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டிய கட்டாயம்... இப்படி இருந்தாலும் படத்தின் தலைப்புக்கேற்பவே ஒவ்வொரு காட்சியிலும் உருவெடுக்கிறாள் ஓலா.

மொழி தெரியாத நாடு, அறியாத மனிதர்கள், அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் என எல்லாமே தாறுமாறாகத்தான் இருக்கிறது ஆனால்,ஓலா ஒருபோதும் கலங்குவதில்லை. கதவுகள் திறக்கப்படவிட்டால் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துவிட பெண் மனம் அவளுக்கு வாய்த்திருக்கிறது. இதை பேரதிர்ஷ்டம் என்பதா? பெருங்கவலை கொள்வதா?

எங்கோ வேறொரு தேசத்தில் இறந்துபோன ஒருவரின் உடலைக் கொண்டுவருவதில்தான் எவ்வளவு சிக்கல்கள்? அந்நிய தேசத்தில் தொழிலாளிகளாகச் செல்லும் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? எல்லாம் வெட்ட வெளிச்சமாகிறது இந்தப் படத்தில்.

ஒலாவின் அப்பா பணிபுரிந்தது ஒரு கட்டுமானத் தொழிலிடத்தில். பணியின்போது நடந்த விபத்தில்தான் அவர் இறந்துபோகிறார். ஆனால், ஒரு யூரோ கூட இழப்பீடு தர தயாராக இல்லை அந்த நிர்வாகம். அதற்கு அவர்கள் கூறும் காரணம் இது.

அவரும் மற்றொரு தொழிலாளியும் தங்கள் பணிநேரத்தை அவர்களுக்குள்ளாக மாற்றிக் கொண்டார்கள். அதனால், அவர் அத்துமீறி அங்கு இருந்ததாகத்தான் கருதப்படும். அதனால் இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை!

இழப்பீட்டுப் பணத்தைக் கொண்டு அப்பாவின் உடலைக் கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்திருந்தவளுக்கு இந்தப் பதில்கள் எப்படி இருக்கும்? ஆனாலும், அழவில்லை அவள்.

அடுத்து அப்பா அவள் கார் வாங்குவதற்காகச் சேர்த்து வைப்பதாகச் சொன்ன பணத்தைத் தேடிச் செல்கிறாள். அங்கும் அதிர்ச்சிதான். அப்பாவின் தோழி என்று சொல்லப்பட்ட பெண்ணைத் தேடிச் செல்கிறாள். அவள் தோழி மட்டுமல்ல; அப்பாவோடு இந்த ஊரில் குடித்தனம் நடத்தியவள் எனத் தெரிவது மற்றுமொரு அதிர்ச்சி.

அழகு நிலையத்தில் பணிப்பெண்ணாக பிழைப்பு ந்டத்தும் அவளிடம் பணம் பற்றிக் கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை என்றே பதில் வருகிறது. ம்ஹும்.

எப்படியோ அந்தப் பெண் ஒளித்து வைத்திருக்கும் 'ஒலாவுக்கான கார் பணம்' நிறைந்த கவரை எடுத்து வந்து விடுகிறாள். அதைக் கொண்டு உடலைப் பெறும் வேலைகளைத் தொடங்குகிறாள். இன்னொரு பக்கம் அயர்லாந்திலேயே கார் வாங்கிவிடலாமா என்று யோசிக்கிறாள். ஆனால், அந்தப் பணம் கார் வாங்கவும் போதாது என்பது வேறு விஷயம்!

இதற்கிடையே அப்பாவின் காதலியான அந்தப் பெண் கர்ப்பிணியாக இருப்பது தெரிய வருகிறது. கார் பணத்தை அவளிடம் கொடுத்து விடுகிறாள். 'பணியிட செக்ஸ் அத்துமீறல் செய்யும் முதலாளியிடம் இருந்து விலகிவிடு, அழகுசாதனப் பயிற்சியை இந்தப் பணத்தைக் கொண்டு நிறைவு செய்' என்று அவள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்க்கமாகச் சொல்கிறாள், 17 வயது ஒலா!

பணமின்றி உடலை எப்படிக் கொண்டு செல்வது? கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு அப்பாவின் உடலை அஸ்தியாக மாற்றி ஒரு குடுவையில் எடுத்துக்கொண்டு நாடு திரும்புகிறாள்.

ஊரில் அப்பா குடுவை இறுதிக்காரியங்களுக்காக ஒரு காரில் ஏற்றப்படுகிறது.இறுதிக்காட்சியில் யாரும் எதிர்பாரா ஒரு தருணத்தில் அந்தக் காரில் ஏறிப் பறக்கிறாள். பார்க்கிறவர்கள் பதறுகிறார்கள்.

அவளது ஆசையெல்லாம் ஒன்றாக நிறைவேறுகிறது. கார் ஓட்டுவதும், அப்பாவை காரில் ஏற்றிச் செல்வதும்!

ஓலா ஒருபோதும் அழுவதில்லை!

- ப.பிரபு

இந்த ஆண்டின் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2021 டிசம்பர் 30 அன்று தொடங்கி 2022 ஜனவரி 6 வரை நடைபெறுகிறது. 8 நாள்கள் நீடிக்கும் இந்தத் திரைத் திருவிழாவின் படங்களை சத்யம் வளாகம் மற்றும் அண்ணா திரையரங்கில் கண்டு களிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: https://chennaifilmfest.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism