Published:Updated:

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!

ஆஸ்கர் விருது
பிரீமியம் ஸ்டோரி
ஆஸ்கர் விருது

வெளியாவதற்கு முன்பிருந்தே பலரை எதிர்பார்ப்பில் காக்க வைத்த படம் DUNE. திரையரங்கில் ஒரு பிரமாண்டத்தை மெய்ப்பித்துக் காட்டியது.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!

வெளியாவதற்கு முன்பிருந்தே பலரை எதிர்பார்ப்பில் காக்க வைத்த படம் DUNE. திரையரங்கில் ஒரு பிரமாண்டத்தை மெய்ப்பித்துக் காட்டியது.

Published:Updated:
ஆஸ்கர் விருது
பிரீமியம் ஸ்டோரி
ஆஸ்கர் விருது
94வது ஆஸ்கர் திருவிழா ஒருவழியாய் நடந்துமுடிந்திருக்கிறது. ஆஸ்கரின் ஹைலைட்ஸ் இதோ...

* இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியை ஏமி ஸ்கூமர், வாண்டா சைக்ஸ், ரெஜினா ஹால் தொகுத்து வழங்கினார்கள். தன்னைவிட வயது குறைவான பெண்களுடன் டிகாப்ரியோ ரிலேசன்ஷிப்பில் ஈடுபடுவதை நக்கல் அடித்துதான் நிகழ்ச்சியையே ஆரம்பித்து வைத்தார் ஏமி ஸ்கூமர். டிகாப்ரியோ நடித்த Dont Look Up திரைப்படம் மாறிவரும் பருவநிலை குறித்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம். ``டிகாப்ரியோ இந்த பூமிக்காக நிறைய செய்துவருகிறார். தன் பெண் தோழிகளுக்காக நல்லதொரு பூமியை விட்டுச் செல்வார் என நம்புகிறேன்’’ என்றார் ஸ்கூமர்.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!

* வரலாற்றில் சில தருணங்கள் மீண்டும் நிகழும். அப்படியானதொரு தருணமாய் அமைந்தது சிறந்த துணை நடிகைக்கான விருது. 1962-ம் ஆண்டு west side story படத்தின் அனிதா என்னும் கதாபாத்திரத்துக்காக ஆஸ்கர் விருது வென்றார் ரீட்டா மொரினோ. அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தப் படத்தை ரீமேக் செய்தார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ரீட்டா மொரினோ, 1962-ம் ஆண்டு அணிந்ததைப் போன்ற ஆடையையே இந்த முறையும் அணிந்து வந்தார். இந்த முறை அதே `அனிதா' கதாபாத்திரத்திற்காக அரியானா டிபோஸ் அந்த விருதை வென்றார். இந்த விருதை வெல்லும் இரண்டாவது லத்தீன் ஆப்பிரிக்கப் பெண் அரியானாதான். ஆஸ்கர் விருது வெல்லும் முதல் பால்புதுமையினர் (queer) இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* நடிப்பதற்கு மிகவும் அவசியமாகப் பலரும் நினைப்பது செவித்திறனும், பேசும் மொழியும்தான். அப்படியிருக்கையில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றிருக்கிறார் செவித்திறன் சவால் கொண்ட ட்ராய் கொட்சூர்.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!

* ஆஸ்கரில் ஒரு திரைப்படம் தகுதிபெற வேண்டுமென்றால் அந்தத் திரைப்படத்தைத் திரையரங் குகளில் திரையிட வேண்டும் என்பதுதான் பல ஆண்டுகளாக இருக்கும் விதி. ஓ.டி.டி தளங்களின் வருகைக்குப் பின்னர், ஓ.டி.டி திரைப் படங்களும் ஆஸ்கரில் தலைகாட்ட ஆரம்பித்தன. அதில் முத்தாய்ப்பாக இந்த முறை சிறந்த திரைப் படத்துக்கான விருதை வென்றதே ஓ.டி.டி-யில் வெளியான திரைப்படம்தான். ஆப்பிள் டி.வி வெளியிட்ட CODA (Child Of Deaf Adults) சிறந்த படம், சிறந்த துணை நடிகர் (ஆண்), சிறந்த தழுவிய திரைக்கதை ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றது.

* இது எதிர்மறை கதாபாத்திரங்களின் வலியைச் சொல்லும் காலம். ‘ஜோக்கர்’ திரைப்படம் காலம் காலமாய் பேட்மேனுக்கு வில்லனாய் நடித்த ஜோக்கரின் மறுபக்கத்தைக் காட்டியது போல, கடந்த ஆண்டு வெளியான க்ரூயல்லா திரைப்படம். டால்மேஷியன்ஸ் திரைப்படங்களில் வரும் க்ரூயல்லா கதாபாத்திரத்தின் முன்கதையைச் சொல்லியது. படம் வெளியானபோதே அனைவரையும் ஈர்த்தது எம்மா ஸ்டோன் அணிந்திருந்த ஆடைகள்தான். சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை க்ரூயல்லா படத்துக்காகப் பெற்றார் ஜென்னி பீவன்.

A Room With a View, Mad Max: Fury Road முதலிய திரைப் படங்களுக்கு ஏற்கெனவே ஆஸ்கர் வென்றிருக்கிறார் ஜென்னி பீவன்.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!

* வெளியாவதற்கு முன்பிருந்தே பலரை எதிர்பார்ப்பில் காக்க வைத்த படம் DUNE. திரையரங்கில் ஒரு பிரமாண்டத்தை மெய்ப்பித்துக் காட்டியது. பத்து விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படம், டெக்னிக்கல் விருதுகளில் ஆறு விருதுகளைத் தட்டிச் சென்றது. இசை, ஒளிப்பதிவு, ஒலி, விஷுவல் எபெக்ட்ஸ், படத்தொகுப்பு, தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய விருதுகளை வென்றது. இந்தப் படத்திற்காக நோலனின் ‘டெனெட்’ திரைப்படத்தை விட்டு விலகினார் ஹேன்ஸ் ஜிம்மர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர், இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஜிம்மர் வெல்லும் இரண்டாவது ஆஸ்கர் விருது இது.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர்!

* தி பியானோ படத்தின் மூலம் உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் ஜேன் கேம்பியன். 1994-ம் ஆண்டு அந்தப் படத்துக்காகச் சிறந்த இயக்குநர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார் ஜேன். ஆனால், அந்த ஆண்டு அந்த விருதை ஷின்லர்ஸ் லிஸ்ட் படத்துக்காக வென்றார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இந்த ஆண்டு, சிறந்த படத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜேன் கேம்பியனின் The Power of the dog திரைப்படத்துடன் போட்டி போட்டது ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் West Side Story. ஆஸ்கர் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு பெண் சிறந்த இயக்குநருக்குப் பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறை. 12 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட The power of the dog, இறுதியில் சிறந்த இயக்குநருக்கான விருதைத் தட்டிச் சென்றது. கடந்த ஆண்டும், சிறந்த இயக்குநர் விருதை வென்றது ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism