Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

நம் எல்லோரின் வாழ்விலும் What if என்றொரு தருணம் இருக்கும். ‘ஒருவேளை இது இப்படி நடந்திருந்தால்’ எனக் கடந்த கால வாழ்க்கையில் நிகழ மறுத்த தருணங்களை எண்ணி லயித்துக்கொண்டிருப்போம்.

OTT கார்னர்

நம் எல்லோரின் வாழ்விலும் What if என்றொரு தருணம் இருக்கும். ‘ஒருவேளை இது இப்படி நடந்திருந்தால்’ எனக் கடந்த கால வாழ்க்கையில் நிகழ மறுத்த தருணங்களை எண்ணி லயித்துக்கொண்டிருப்போம்.

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

The Guilty - MOVIE

காவல்துறையின் 911 கால் சென்டருக்கு, கடத்தப்பட்ட பெண்ணிடமிருந்து அழைப்பொன்று வருகிறது. காவல்துறை அதிகாரியான ஜோ பெய்லர் அதை எப்படிக் கையாள்கிறார் என்பதை 90 நிமிட த்ரில்லராகச் சொல்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் The Guilty. படத்தில் நாயகன் ஜேக் க்ளென்ஹாலின் முகத்தைத்தான் பெரும்பாலான காட்சிகளில் நம்மால் பார்க்க முடியும். ஆனால் குற்றத்தின் வலியை உணர்ந்து மனம் மாறும் காட்சிகள்; குரலின் வழியாக நமக்குக் கடத்தப்படும் ட்விஸ்ட் என எல்லாமே செம த்ரில் அனுபவங்கள். டேனிஷ் மொழியில் 2018-ல் வெளியான ‘The Guilty’ படத்தின் ரீமேக்தான் என்றாலும், கதையின் போக்கை சற்று மாற்றியிருக்கிறார்கள். அதுவே இதை ஒரிஜினலைவிட ஒரு மாற்று குறைவாக்கிவிடுகிறது. மற்றபடி நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஒரு அட்டகாசமான த்ரில்லர் சினிமா ‘The Guilty’ என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

OTT கார்னர்
OTT கார்னர்

What if - SERIES

நம் எல்லோரின் வாழ்விலும் What if என்றொரு தருணம் இருக்கும். ‘ஒருவேளை இது இப்படி நடந்திருந்தால்’ எனக் கடந்த கால வாழ்க்கையில் நிகழ மறுத்த தருணங்களை எண்ணி லயித்துக்கொண்டிருப்போம். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இப்படியான தருணங்கள் எல்லாம் மாறியிருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை அனிமேட்டட் தொடராக விவரிக்கிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் What If தொடர். கேப்டன் அமெரிக்கா இங்கு கேப்டன் கார்ட்டர்; பிளாக் பேந்தர் இங்கு ஸ்டார் லார்டு; அவெஞ்சர்ஸுக்கு வேறு குழு; ஒட்டுமொத்த பர்னிச்சரையும் ஒரே இடத்தில் உடைத்து வைத்திருக்கிறார்கள். மார்வெல் படங்களைப் பார்த்திராதவர்களுக்கு இதுவே ஒரு புதிய கதைக்கான சுவாரஸ்யத்தை நிச்சயம் கொடுக்கும். பார்த்தவர்களுக்கு ‘இப்படியானதொரு உலகம் உருவாகியிருந்தா எப்படியிருந்திருக்கும்’ என்கிற அனுபவத்தைக் கொடுக்கும்.

OTT கார்னர்
OTT கார்னர்

Bhramam - MOVIE

இது ‘அந்தாதுன்’ ரீமேக் சீசன் போலிருக்கிறது. செப்டம்பரில் நித்தின், தமன்னா நடிப்பில் தெலுங்குப் பதிப்பான ‘மேஸ்ட்ரோ’ வெளியாக, இந்த மாதம் மலையாள வெர்ஷனான ‘பிரமம்’ அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. பியானோக் கலைஞரான ரே மேத்யூஸ் ஒரு கொலைக்கு ஐ விட்னெஸ் ஆகிவிடுகிறார். ஆனால், அவரோ விழித்திறன் சவால் கொண்டவர். லாஜிக்கல் விஷயங்களை யோசிக்க விடாமல், அடுத்தடுத்த ஆச்சர்யங்களை அள்ளித் தெளித்ததால்தான் ‘அந்தாதுன்’ இந்தியாவெங்கும் மெகா ஹிட் அடித்தது. ரவி கே சந்திரன் இயக்கியிருக்கும் இந்த மலையாள வெர்ஷனில் பிருத்விராஜ் கதையின் நாயகனாக வருகிறார். தபுவுக்குப் பதில் மம்தா மோகன்தாஸ், ராதிகா ஆப்தேவுக்குப் பதில் ராஷி கண்ணா என நடிகர்களின் மாறுதலுக்கு ஏற்ப சில காட்சிகளையும் மாற்றியிருக்கிறார்கள். ‘அந்தாதுன்’ பார்க்காதவர்களுக்கு நிச்சயம் ‘பிரமம்’ பிடிக்கும்.

OTT கார்னர்
OTT கார்னர்

There’s someone inside your house - MOVIE

நெட்பிளிக்ஸின் லேட்டஸ்ட் Teen Slasher வரவு. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அப்படி இறக்கும்போது அவர்களைப் பற்றிய ரகசியம் ஒன்றும் வெளியுலகத்திற்குத் தெரிய வருகிறது. ‘யார் இதைச் செய்கிறார்கள்’ எனக் கதை சுற்றிச் சுற்றி இறுதியாக விடை தெரியும் நேரத்தில் நமக்குக் கடுப்பு தட்டுவதுதான் படத்தின் பெரிய குறை. கொல்லப்படுவதற்கான மோட்டிவ் படத்திலேயே வரும் வசனம் போல, ‘நிஜமாவே இதுதான் காரணமா?’ ரகம். The Walking dead, Pretty little liars: The perfectionists ஆகிய தொடர்களில் வரும் சிட்னி பார்க்தான் நாயகி. படத்தை உட்கார்ந்து பார்க்கச் செய்வதும் அவரே. கதையில் கவனம் செலுத்தாமல் ‘மாசத்துக்கு இத்தனை படம் இறக்கணும்’ எனக் கங்கணம் கட்டித் திரிகிறதோ நெட்பிளிக்ஸ் என்று சந்தேகம் வருகிறது.