Published:Updated:

OTT கார்னர்

Kuruthi - MOVIE
பிரீமியம் ஸ்டோரி
Kuruthi - MOVIE

ஒரு எளிய இஸ்லாமியக் குடும்பம் ஒரு நள்ளிரவில் இந்து-முஸ்லிம் வன்முறையாளர்களுக்கு இடையே நடக்கும் மோதலில் மாட்டிக்கொள்கிறது.

OTT கார்னர்

ஒரு எளிய இஸ்லாமியக் குடும்பம் ஒரு நள்ளிரவில் இந்து-முஸ்லிம் வன்முறையாளர்களுக்கு இடையே நடக்கும் மோதலில் மாட்டிக்கொள்கிறது.

Published:Updated:
Kuruthi - MOVIE
பிரீமியம் ஸ்டோரி
Kuruthi - MOVIE
OTT கார்னர்

NEVER HAVE I EVER - SERIES

தேவி விஷ்வகுமார் என்னும் 15 வயதுச் சிறுமியின் பள்ளி வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸான ‘நெவர் ஹேவ் ஐ எவர்.’ தான் இதுவரை பண்ணாத ஒவ்வொரு விஷயத்தையும் வைத்து ஒவ்வொரு எபிசோடின் கதையும் நகர்கிறது. தேவி விஷ்வகுமாராக தமிழ் - கனடியரான மைத்ரேயி ராமகிருஷ்ணன். ஷோ கிரியேட்டர் மைண்டி காலிங்கின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்புதான் இந்தத் தொடர் என்றாலும், மைத்ரேயி ராமகிருஷ்ணனின் யதார்த்த நடிப்புக்கு அத்தனை ரசிகர்கள். டீனேஜ் பெண்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இந்தத் தொடர், ஒரு பள்ளிப் பெண்ணின் மன ரீதியலான பிரச்னைகளையும், குழப்பங்களையும் அடுக்குகிறது. காதல் குழப்பங்கள், தோழி அட்ராசிட்டீஸ், அமெரிக்காவில் இந்தியர்களின் நிலை என நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் தமிழ்க் குடும்பத்தின் கதை என்பதால், அதற்கேற்ப ஆங்காங்கே தமிழ் வார்த்தைகளும் தொடரில் இடம்பெறுகின்றன.

OTT கார்னர்

Dial 100 - MOVIE

Zee5 தளத்தின் ஆஸ்தான நடிகராகிவிட்ட மனோஜ் பாஜ்பாயிடமிருந்து மற்றுமொரு த்ரில்லர். காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு வருகிறது ஒரு போன்கால். அதை எடுத்துப் பேசும் மனோஜிடம் ஒரு பெண், தான் ஒரு கொலை செய்யப்போவதாகச் சொல்கிறாள். பதைபதைக்கும் மனோஜ் உடனே அந்தப் பெண்ணை ட்ராக் செய்ய முயல, மெல்ல முடிச்சுகள் அவிழ்ந்து பல உண்மைகள் வெளிப்படுகின்றன. ஆனால் அவை அத்தனையுமே எளிதாகக் கணிக்கக் கூடியவை என்பதால் த்ரில்லர் படம் சோகை இழக்கிறது. மனோஜ், நீனா குப்தா என்கிற இரு அசுர கலைஞர்களுக்கிடையான நடிப்புப் போட்டியே படத்தை ரசிக்க வைக்கிறது. ‘சிஸ்டம் சரியில்ல’ என இதற்கு முன்னரும் நிறைய படங்கள் வந்துவிட்டபடியாலும் இந்தப் படத்திலும் யூகிக்க முடிந்த திரைக்கதையே இருப்பதாலும் ‘Dial 100’ ஒரு சாதாரண த்ரில்லர் படமாகவே கடந்து போகிறது.

OTT கார்னர்

Kuruthi - MOVIE

இயற்கைப் பேரழிவு நடந்துமுடிந்த ஒரு மலைக்கிராமத்தில் வசிக்கும் ஒரு எளிய இஸ்லாமியக் குடும்பம் ஒரு நள்ளிரவில் இந்து-முஸ்லிம் வன்முறையாளர்களுக்கு இடையே நடக்கும் மோதலில் மாட்டிக்கொள்கிறது. பின் நடக்கும் திடுக்கிடும் நிகழ்வுகள்தான் கதை. ஆழ்மனதில் புரையோடிப்போயுள்ள பிற மத வெறுப்பைத் திரையில் பேசியவகையில் இது முக்கியமான படம். ஆனால், சமநிலை குலைந்து ஒரு சாராரை மட்டும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதைப் போலாகிறது படம். சந்தர்ப்பச் சூழ்நிலையால் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் எடுக்கிறார்கள், சிறுபான்மையினர் மட்டுமே அமைப்பாக்கப்பட்ட பயங்கரவாதிகள் என்பன போன்ற சித்தரிப்புகள் படத்தின் பெரிய சிக்கல். பிரித்விராஜ் போன்ற அசத்தலான பர்ஃபாமர் அடிப்படைவாதம் பேசியிருப்பது பார்வையாளர்களுக்கு நிச்சயம் குழப்பத்தை வரவழைக்கும். நோக்கம் நல்லதாக இருந்தாலும் இந்த அரசியல் போதாமைகள் படத்தை ரசிக்கவிடாமல் செய்கின்றன. வசனமும் ஒளிப்பதிவும் மட்டுமே இந்த அமேஸான் ப்ரைம் படத்தின் பலம்.

OTT கார்னர்

shershaah - MOVIE

இந்திய அரசின் பரம் வீர் சக்ரா விருது வென்ற விக்ரம் பத்ராவின் பயோபிக்தான் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் ‘ஷேர்ஷா.’ இரட்டையர்களான விக்ரம்-விஷால் பத்ராவாக சித்தார்த் மல்ஹோத்ரா; விக்ரமின் காதலி டிம்பிளாக கியாரா அத்வானி. இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விக்ரமின் காதல் வாழ்க்கை பாதியும், ராணுவ வாழ்க்கை மீதியுமாக இயக்கியி ருக்கிறார் விஷ்ணுவர்தன். கார்கில் போர் சமயத்தில் பாகிஸ் தான் கைப்பற்றிய இடங்களை மீண்டும் இந்தியா வசம் கொண்டுவந்ததில் விக்ரமின் பங்கு அளப்பரியது. அந்தக் காட்சிகள் எல்லாம் படத்தில் புல்லரிக்க வைக்கும் ரகம். “நாம காஷ்மீரிகளை நம்பலைன்னா, நம்மள ஏன் அவங்க நம்பணும்” என்னும் அளவு படம் சில தர்க்கங்களை முன் வைத்தி ருக்கிறது. ராணுவ வீரர்களின் படங்களுக்கான டெம்ப்ளேட் க்ளீஷேக்கள்தான் படத்தைக் கீழிறக்கிவிடுகிறது. இந்திய அரசியல் கட்சிகள், ராணுவ பிரசாரப் படமாக வராமல், பயோபிக் என்னும் அளவில் எடுத்திருப்பது இன்னும் சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism