Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

கேங்க்ஸ்டராகச் சுற்றும் அஸீஸ் அலி, காதலியால் பாக்ஸராகிறார். பிறகு நடக்கும் ஒரு தவற்றால் அவரின் கரியருக்கு 5 வருடத் தடை வந்து சேர்கிறது

OTT கார்னர்

கேங்க்ஸ்டராகச் சுற்றும் அஸீஸ் அலி, காதலியால் பாக்ஸராகிறார். பிறகு நடக்கும் ஒரு தவற்றால் அவரின் கரியருக்கு 5 வருடத் தடை வந்து சேர்கிறது

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

LOKI - SERIES

காலப்பிழை ஏற்படுத்தும் நபர்களைக் கண்காணித்துக் கைது செய்கிறது ஒரு குழு. அப்படிக் கைது செய்யப்படும் லோகி என்ற குறும்புக்காரக் கடவுள் என்ன செய்கிறார் என்பதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ் ‘லோகி’யின் ஒன்லைன். அவெஞ்சர்ஸ், தோர் என மார்வெல்லின் பல படங்களில் ‘முதுகு குத்தி’ என்றால் அது லோகிதான். லோகியே சொல்வதுபோல், தன்னை யாரும் நம்ப மாட்டார்கள் என்பதுதான் அவருக்கான டேக்லைன். அப்படியான லோகியை நம்பி ஒரு அசைன்மென்ட் தரப்படுகிறது. லோகி மனிதர்களை நம்ப ஆரம்பிக்கிறார். திரைப்படங்களில் வந்த ஒரு நபரை வைத்து ஒரு முழு நீள எமோஷனல் டிராமாவை வழங்கியிருக்கிறது மார்வெல். அடுத்த பாகத்துக்கான லீடும் பக்காவாக செட் செய்யப்பட்டிருக்கிறது. லோகியாக டாம் ஹிடில்ஸ்டனும், சில்வியாவாக சோஃபியா டி மார்டினாவும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். அவெஞ்சர்ஸ் பர்னிச்சரை உடைத்தது மட்டும்தான் ஒரே நெருடல்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Toofaan - Movie

கேங்க்ஸ்டராகச் சுற்றும் அஸீஸ் அலி, காதலியால் பாக்ஸராகிறார். பிறகு நடக்கும் ஒரு தவற்றால் அவரின் கரியருக்கு 5 வருடத் தடை வந்து சேர்கிறது. அதிலிருந்து மீண்டு வந்து, தன் மனைவியின் விருப்பம்போல தனக்குக் கிடைத்த இரண்டாம் வாய்ப்பை இறுக்கிப் பிடித்தாரா என்பதுதான் இந்த தூஃபான் (புயல்) சொல்லும் கதை. அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் ‘பாக் மில்கா பாக்’ கொடுத்த இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் ஃபர்ஹான் அக்தர் காம்போ மீண்டும் இணைந்திருக்கிறது. இயக்குநராக இருந்து நடிகராக மாறிய ஃபர்ஹான் இந்தப் படம் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக நம் மனதில் வந்து அமர்கிறார். நாயகி மிருணாள் தாகூருக்கும், கோச்சாக வரும் பரேஷ் ராவலுக்கும் கதையின் ஓட்டத்தைத் தீர்மானிக்கும் பாத்திரங்கள். ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத் தொடங்கும் படம், பின்னர் அதை ஒதுக்கிவிட்டு, காதலுக்கு முக்கியத்துவம் தந்து நகர்வது ஏமாற்றம். கிளிஷேக்களுடனேயே மொத்தப் படமும் நகர்வது ஒரு பழைய படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Malik- Movie

மிகுந்த எதிர்பார்ப்பு கலந்த காத்திருப்பிற்குப் பின் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது மாலிக். திருவனந்தபுரத்தின் கடற்கரைப் பிரதேசத்தைத் தன் கண்ணசைவில் வைத்திருக்கிறார் அலி இக்கா எனும் டான். போலீஸ், அரசியல்வாதிகள் என யாராலும் தொடமுடியாத அவரை வீழ்த்தத் துடிக்கிறது அதிகார வர்க்கம். அருகிலிருக்கும் மாற்றுமதத்தினரை சூழ்ச்சியால் அலி இக்காவிற்கு எதிராகத் திரட்டுகிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. பகத்தின் கரியரில் அதிக பொருட்செலவில், மேக்கிங்கில் அதிக சிரத்தையோடு உருவாக்கப்பட்ட படம் இது என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கு ஜோடியாய் நடித்திருக்கும் நிமிஷா தன் பங்கிற்குப் படத்தைத் தாங்கி நிற்கிறார். வினய் போர்ட், ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன் என எல்லா ப்ரேமிலும் ஏதோவொரு நடிகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆங்காங்கே ‘நாயகன்’ வாசமும் அடிக்கிறது என்றாலும் மேக்கிங்கில் கவர்கிறார் இயக்குநர் மகேஷ் நாராயணன்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

வெள்ளை யானை- Movie

விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசும் மற்றுமொரு படம் Sun NXT-ல் இந்த ‘வெள்ளை யானை.’ தேடித் தேடி வந்து கொடுத்த வங்கிக்கடனைத் திரும்பக் கட்டுமாறு ஊரிலிருக்கும் குடியானவர்களைத் துரத்துகிறார்கள் வங்கி அலுவலர்கள். வானம் பொய்த்துப் பொட்டல்காடாகக் காட்சியளிக்கும் நிலத்தை வைத்துக்கொண்டு கடனைக் கட்டமுடியாமல் தவிக்கிறார்கள் விவசாயிகள். துயரம் தாங்காமல் மரணங்கள் நிகழத் தொடங்க, பிழைப்புத் தேடிப் பெருநகரத்திற்குப் படையெடுக்கிறார்கள். அந்நகரம் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை. அதிகம் பேசப்படாத விவசாயிகளின் இடப்பெயர்ச்சியைப் பேச முயன்றதற்காக இயக்குநருக்குப் பாராட்டுகள். ஆனால் நாடகத்தன்மையான காட்சிகள், முதிர்ச்சியில்லாத நடிப்பு போன்றவை அந்த நோக்கத்தைச் சிதைக்கின்றன. சந்தோஷ் நாராயணனின் இசையும் பெரிய ஏமாற்றம். சமுத்திரக்கனி மட்டுமே ஓரளவிற்குப் படத்தைக் காப்பாற்றுகிறார் என்றாலும், அவரும் முன்பு செய்த அதே ரோலையே திரும்பச் செய்து அலுக்க வைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism