சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

நெட்ஃபிளிக்ஸில் பிரபலமான ‘அண்டர்கவர்’ என்கிற டச்சு மொழி சீரிஸின் ப்ரீக்வெல் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Mare of Easttown - SERIES

வெப் சீரிஸ் பாணி படைப்புகளுக்குப் பெரிய கதைக்களம் தேவைப்படும். கதாபாத்திர வார்ப்புகள் அடர்த்தியாக இருக்க வேண்டும். ஒரு நகரில் இருக்கும் பெண்களும், அவர்களின் குற்றமும் தண்டனையும் பற்றிப் பேசுகிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Mare of Easttown. ஊரில் இளம் பெண்கள் காணாமல்போகிறார்கள். அந்த ஊரிலேயே அனைவருக்கும் பரிச்சயமான காவல்துறை துப்பறிவாளர் மேர் எப்படி அதைக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. இதற்கிடையே அவரவரின் குற்றமும் மன்னிப்பும் ஆங்காங்கே வெளிப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணின் கதாபாத்திரமும் அடர்த்தியாய் எழுதப்பட்டிருக்கிறது. இளம் பாட்டியாக கேட் வின்ஸ்லெட். விவாகரத்து, மகனின் இழப்பு, பேரனின் பிரிவு எனப் பல்வேறு பிரச்னைகளோடு குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். வின்ஸ்லெட்டின் டாப் 5 பர்பாமன்ஸில் நிச்சயம் இது இடம்பெறும். தொடர் முடிந்து, மேர் படிக்கட்டில் ஏறும்போது, ஒட்டுமொத்த பாரமும் பார்வையாளர்கள் மேல் வந்து விழுகிறது. அந்த வகையில் வென்றிருக்கிறார் கதையை எழுதிய பிராட் இன்ஜெல்ஸ்பி.

OTT கார்னர்
OTT கார்னர்

Ferry - MOVIES

நெட்ஃபிளிக்ஸில் பிரபலமான ‘அண்டர்கவர்’ என்கிற டச்சு மொழி சீரிஸின் ப்ரீக்வெல் இது. ஒரு சீரிஸின் ப்ரீக்வெலாய் படம் வருவது மிகவும் அரிதாகவே நடக்கும். அந்த பில்டப்பிற்கு ஏற்றவகையில் தயாராகி வெளியாகியிருக்கிறது பெர்ரி. ஆம்ஸ்டர்டாமின் முக்கிய போதைப்பொருள் மாபியாவிடமிருந்து சில கொள்ளையர்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். அந்த முயற்சியில் மாபியா தரப்பில் ஒரு உயிர் பலியாகிவிட, பழிக்குப் பழிவாங்க தன் தளபதி பெர்ரியை அனுப்புகிறார் அந்த மாபியா கும்பலின் தலைவன். அதன்பின் தெறிக்கும் ரத்தச் சிதறல்கள்தான் கதை. அண்டர்கவர் சீரிஸ் பரிச்சயமானவர்களுக்கு இது பெர்ரி எனும் டான் உருவான கதையைப் பேசும் படம். சீரிஸ் பார்க்காதவர்களுக்கு இது ஒரு விறுவிறு ஆக்‌ஷன் த்ரில்லர். ஆக, ஒரு வீக்கெண்டில் ஜம்மென அமர்ந்து ஒரு சண்டைப்படம் பார்க்க விரும்புவர்களுக்கு நல்ல சாய்ஸ். ஆனால் சண்டைக்காட்சிகள், போதை மருந்துகளுக்காக ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி.

OTT கார்னர்
OTT கார்னர்

Silence... Can You Hear It? - MOVIES

ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் மகள் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார் எனக் கண்டுபிடித்துத் துப்புத்துலக்க வருகிறார் அடிதடி அசிஸ்டெண்ட் கமிஷ்னரான மனோஜ் பாஜ்பாய். இப்படியான whodunit பாணி திரைப்படம்தான் zee5யில் வெளியாகியிருக்கும் Silence... Can You Hear It? வீட்டிலிருக்கும் உறவினர்கள், இறந்துபோன பூஜாவின் தோழி, தோழியின் கணவர், அடியாட்கள் எனப் பல்வேறு திருப்பங்களின் மூலம் இறுதிவரை த்ரில்லை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். போலீஸ் வேடம் என்றால் இன்னும் குஷியாகிவிடுகிறார் மனோஜ். எந்த மெனக்கெடலும் இல்லாமல், எளிதாக ஸ்கோர் செய்கிறார். சற்றே மெதுவாய் நகரும் திரைக்கதைதான் ஒரு கட்டத்துக்கு மேல் சோதிக்கிறது. இரண்டு மணி நேர த்ரில்லர் சினிமா விரும்பிகளுக்கு ‘சைலன்ஸ்’ நல்ல சாய்ஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Sexified - SERIES

இந்தியாவில் ஓ.டி.டி தளங்களுக்கு சென்சார் வருகிறதோ இல்லையோ, நெட்ஃபிளிக்ஸில் மாதா மாதம் ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி தொடர் ஒன்று வெளியாகிவிடுகிறது. கல்லூரிக்குள் சிறந்த ஸ்டார்ட் அப் செயலியை யார் உருவாக்குகிறார்கள் என்கிற போட்டி நடக்கிறது. பெண்களுக்கான பிரத்யேகச் செயலி ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபடுகிறார் நடாலியா. அடுத்து என்ன என்பதை காமெடி அடல்ட் தூக்கலாகச் சொல்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் போலந்து தொடரான Sexified. கல்லூரி வாழ்க்கையில் இருக்கும் பாலியல் பிரச்னைகள், மன அழுத்தம் போன்றவற்றைப் பேசும் தொடர் ஆங்காங்கே டிராக் மாறிச் சென்றுவிடுவதால் ஜாலியாகப் பார்க்க மட்டும் உகந்ததாக இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சில மணி நேர டைம்பாஸுக்கு, Sexified தொடர் பார்க்கலாம்.