கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

OTT கார்னர்

Cinderella - MOVIE
பிரீமியம் ஸ்டோரி
News
Cinderella - MOVIE

90’ஸ் கிட்ஸுக்கு மிகப் பரிச்சயமான ‘101 Dalmatians’ சீரிஸின் லேட்டஸ்ட் வரவு இந்தப் படம். தன் தாய், டால்மேஷன்களால் கொல்லப்படுவதைப் பார்க்கிறாள் எஸ்டெல்லா

OTT கார்னர்
OTT கார்னர்

Cruella- MOVIE

90’ஸ் கிட்ஸுக்கு மிகப் பரிச்சயமான ‘101 Dalmatians’ சீரிஸின் லேட்டஸ்ட் வரவு இந்தப் படம். தன் தாய், டால்மேஷன்களால் கொல்லப்படுவதைப் பார்க்கிறாள் எஸ்டெல்லா. யார் கொன்றார்கள், எதற்காகக் கொன்றார்கள் என்பது வளர்ந்தபின் தெரியவருகிறது. தாயின் கொலைக்குக் காரணமானவர்களை அவள் க்ருயல்லாவாக மாறி ஸ்டைலாகப் பழிவாங்குவதுதான் கதை. டிஸ்னி யுனிவர்ஸின் மிகப் பிரபலமான வில்லி கேரக்டர் இது என்பதால் மேக்கிங்கில் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். கவரும் விஷுவல் எபெக்ட்ஸ், அபார கலை இயக்கம், எம்மா ஸ்டோனும் எம்மா தாம்ப்சனும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பது ஆகியவற்றால் ஹாட்ஸ்டாரில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் க்ருயல்லா அருமையான வீக்கெண்ட் டைம்பாஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Cinderella - MOVIE

நூற்றாண்டுகளாகச் சொல்லப்படும் அதே கதை இம்முறை அமேசான் ப்ரைமில் புதிய வடிவில். சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறத் துடிக்கிறாள் சிண்ட்ரெல்லா. பெரிய ஆடை வடிவமைப்பாளராக மாறி சொந்தமாக நிறுவனம் தொடங்குவது அவளின் கனவு. ஒருநாள் சந்தையில் மாறுவேடத்தில் வரும் அந்நாட்டு இளவரசனை அவள் சந்திக்க, அவள் வாழ்க்கையே மாறுகிறது. அபலையைக் காப்பாற்ற வரும் ஆபத்பாந்தவனான இளவரசன் என்றே காலங்காலமாகச் சொல்லப்பட்டும் வரும் இந்தக் கதையைப் பெண்ணியப் பார்வையில் சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஏகப்பட்ட விஷயங்களைக் காலத்திற்கேற்ப சேர்த்திருந்தாலும் கதை என்னமோ திரும்பவும் இளவரசனே ஒவ்வொருமுறையும் சிண்ட்ரெல்லாவைக் காப்பாற்றுவது போன்றே நகர்கிறது. முழுக்கவும் மியூசிக்கல் படம் என்பதால் சில இடங்கள் ரசிக்க வைக்கின்றன, சில இடங்கள் பொறுமையைச் சோதிக்கின்றன.

OTT கார்னர்
OTT கார்னர்

Money Heist - MOVIE

தங்க வேட்டையில் ஈடுபடுகிற குழு தப்பித்தார்களா என்னும் கேள்விக்கான விடை இந்த சீசனிலும் தொடர்கிறது. நெட்பிளிக்ஸில் வெளியாகும் தொடர்களில் உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஈட்டியிருக்கும் தொடர். லிஸ்பன் அரசிடமிருந்து தப்பித்து வந்ததும் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தத் தொடங்குகிறார். இன்னொரு பக்கம் அலிசியா புரொபசரைப் பிடித்து வைத்துக்கொள்ள, முதல்முறையாக தொடர் பெண்களின் பக்கம் நின்று, அவர்களை நாயகர்களாக முன்னிறுத்துவது இந்த சீசனின் ஸ்பெஷல். திருடுபவர்கள் மக்கள் அபிமானம் மிக்கவர்கள் வெர்சஸ் அரசின் கோர முகம் என ஆரம்பித்த தொடர், தற்போது வெறுமனே சில அரசு அதிகாரிகளின் ஈகோ யுத்தமாக மாறி நிற்கிறது என்பது மட்டும் ஒரே வருத்தம். இந்த செப்டம்பர் மாதம் ஐந்து எபிசோடுகளையும், வரும் டிசம்பரில் ஐந்து எபிசோடுகளையும் பிரித்து வெளியிடுகிறோம் என நெட்பிளிக்ஸ் வெளியிட்ட போதே துக்கம் தொண்டையை அடைத்தது. சட்டுபுட்டுன்னு மத்த பாதியையும் ரிலீஸ் பண்ணி முடிச்சு உடுங்க புரொபசர்.

OTT கார்னர்
OTT கார்னர்

BLACK WIDOW - MOVIE

‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ படத்தில் இறந்துவிட்ட ‘பிளாக் விடோ’ (நடாஷா ரோமனாஃப்) பாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ காலத்துக் கதையைச் சொல்கிறது ஹாட்ஸ்டாரின் இந்தப் படம். அவெஞ்சர்ஸ் படை இரண்டாகப் பிளவுபட்டிருக்க, நடாஷா தேடப்படும் குற்றவாளியாக ஓட்டத்தில் இருக்கிறார். அப்போது கடந்த காலத்தில் விட்டுப்போன அவரின் சொந்தங்களும், பகைகளும் அவரைத் துரத்துகின்றன. தன் வளர்ப்புத் தங்கை எலானா பெலோவாவுடன் இணைந்து ஒரு மாபெரும் சதியை நடாஷா வெளிக்கொண்டுவந்தாரா என்பதுதான் படத்தின் ஒன்லைன். நடாஷாவாக வழக்கம்போல பட்டாசாக வெடித்திருக்கிறார் ஸ்கார்லெட் ஜோஹன்ஸன். ஆனால், பல இடங்களில் நம் மனதைக் கொள்ளைகொள்வது என்னவோ எலானாவாக வரும் ஃப்ளோரன்ஸ் ப்யூக்தான். ஆக்‌ஷன் காட்சிகளில் கவனம் செலுத்தியவர்கள், 2 மணி நேரத்துக்கு மேல் நீளும் படத்தின் திரைக்கதைக்கும் சற்று கடிவாளம் போட்டிருக்கலாம். பல சண்டைக் காட்சிகள் கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.