Published:Updated:

சினிமா விகடன் : OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

சினிமா விகடன் : OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

Marvel Agents of Shield

‘அ
வெஞ்சர்ஸ்’ திரைப்படத் தொடரில் வரும் கதாபாத்திரங்களை வைத்துத் தொலைக்காட்சித் தொடராக வந்த தொடர் தான் ‘மார்வெல் ஏஜெண்ட்ஸ் ஆஃப் ஷீல்டு.’ படத்தில் வரும் சாமுவேல் ஜாக்சன் ஆரம்பத்தில் ரிப்பன் வெட்டி நடையைக் கட்ட, எல்லா சீசனிலும் ஹீரோவா கெத்து காட்டினார் பில் கோல்சனாக வரும் கிளார்க் கிரெக். நல்லவர்களின் கூடாரமாக இருக்கும் ஷீல்டுக்கும் கெட்டவர்களின் கூடாரமாக இருக்கும் ஹைட்ராவுக்கும் நடக்கும் சண்டைகள்தான் ‘ஏஜெண்ட்ஸ் ஆஃப் ஷீல்டி’ன் ஒன்லைன்.

Series
Series
சினிமா விகடன் : OTT கார்னர்

அவர்களோடு ஏலியன், வேற்றுக்கிரகம், டைம் டிராவல், க்ளோனிங், பெரிய பட்ஜெட் கிராஃபிக்ஸ் என சயின்ஸ் பிக்‌ஷனின் ஒட்டுமொத்த மெனுவையும் கொட்டித் தீர்த்து எடுத்திருக்கிறார்கள். 2013-ம் ஆண்டு ஆரம்பித்த தொடரை வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முடித்து வைத்திருக்கிறார்கள். மார்வெல், டிசி படங்களின் தீவிர விசிறி நீங்கள் என்றால், கட்டாயம் ஏஜெண்ட்ஸ் ஆஃப் ஷீல்டைப் பார்க்கலாம்.

To All the Boys: Always and Forever

Movie
Movie
சினிமா விகடன் : OTT கார்னர்

To All the Boys வரிசையில் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகியிருக்கும் மூன்றாவது படம் To All the Boys: Always and Forever. ஹாலிவுட்டின் பிரபலமான ‘ஹைஸ்கூல் ரொமான்ஸ்’தான் கதைக்களம். பள்ளி மாணவி லாரா ஜீன் அவளது காதலன் பீட்டர் கவின்ஸ்கி இருவரும் பள்ளி இறுதியாண்டில் படிக்கிறார்கள். இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து, ஒன்றாகவே படிப்பை முடித்து பின் திருமணம் செய்துகொள்வது அவர்களின் கனவு. ஆனால் இருவருக்கும் வெவ்வேறு கல்லூரிகளில்தான் இடம் கிடைக்கிறது. லாரா ஜீனிற்கு பீட்டர் படிக்கும் கல்லூரிக்கு அருகிலேயே இருக்கும் ஒரு கல்லூரியிலும், 3,000 மைல் தொலைவில் இருக்கும் நியூயார்க் பல்கலைக் கழகத்திலும் என இரண்டு கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. நியூயார்க் வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்பது லாராவின் ஆசை. அவ்வளவு தொலைவில் அவள் சென்றுவிட்டால் ‘லாங் டிஸ்டன்ஸ்’ உறவு நிலைக்காது என்பது பீட்டரின் பயம். சண்டை, காதல், சமாதானம் என இரு பதின்ம பருவத்துக் காதலர்களின் பயணமே கதை. ரிலாக்ஸ்ட் வீக் எண்ட் வேண்டும் என்பவர்கள் சீரிஸின் மூன்று படங்களையும் பார்க்கலாம்.

PELE

DOCUMENTARY
DOCUMENTARY
சினிமா விகடன் : OTT கார்னர்

வெள்ளையர்கள் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த கால்பந்து விளையாட்டில், கெத்தாக உள்ளே நுழைந்து வெற்றி வாகை சூடிய பிலேவின் வாழ்க்கை வரலாற்றைப் பேசுகிறது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் `பிலே.’ உருகுவேவுக்கு எதிராக தோற்றுத் தேம்பிக்கொண்டிருக்கும் தந்தைக்கு ஆறுதல் சொல்லும் மகனாக ஆரம்பிக்கிறது பிலேவின் கால்பந்துக் கனவு. போட்டிகளில் வென்றதைப் பற்றி மட்டும் பேசாமல், பிரேசிலின் சர்வாதிகார அரசியலையும், அதற்கு கால்பந்தை எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதையும் தொட்டுச் செல்கிறது இந்த டாக்குமென்டரி. சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படத்தைவிடவும் இந்த டாக்குமென்டரி சிறப்பாக இருக்கிறது. அதோடு, ஆங்கில ஒலிக்கு மாற்றும் வசதியிருந்தாலும், போர்ச்சுகல் மொழியில் பிலேவின் குரலிலேயே பார்க்கும்போது இன்னும் மனதுக்கு நெருக்கமாய் இருக்கும்.

Series
Series
சினிமா விகடன் : OTT கார்னர்

Chilling Adventures of Sabrina

ர்ச்சி காமிக்ஸை அடிப்படையாக வைத்து டீன் பார்வையாளர்களை டார்கெட் செய்து சப்ரீனா தொடரை உருவாக்கியது நெட்ஃப்ளிக்ஸ். இரண்டு சீசன்களை நான்கு பாகங்களாக வெளியிட்டு தற்போது அந்தத் தொடருக்கு முடிவுரை எழுதியுள்ளது. க்ரீன்டேல் நகரில் மாந்திரிகங்கள் அறிந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக மனிதர்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு இடையில் சப்ரீனா என்ற பள்ளிப் பருவப் பெண் பாதி மனிதனாகவும் பாதி மாய மந்திரங்கள் அறிந்த சூனியக்காரியாகவும் இருக்கிறாள். இரண்டு வாழ்க்கைக்கு இடையில் சிக்குண்டு இருப்பவள் தன் நண்பர்களையும், குடும்பத்தையும் மீட்க எடுக்கும் முடிவுகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் ஒன்லைன். இறுதி பாகத்தில், எட்டு வகையான ஆபத்துகளை சப்ரீனா தலைமையிலான இளம்படை, எபிசோடுக்கு ஒன்றாகச் சந்திப்பதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மாய மந்திரம் என்றவுடன் ஹாரர் மற்றும் த்ரில்லர்தானா என எண்ணவேண்டாம். பெண்ணுரிமை, பெண்களை வஞ்சிக்கும் நூற்றாண்டுக் கால மனோபாவம், சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கிக் கலாசார ரீதியாக ஒடுக்குதல் எனப் பல முற்போக்குக் கருத்துகளைத் தொடர் விவரிக்கிறது. ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு ட்விஸ்ட், புதுப்புது சாகசங்கள், விதவிதமான பிரமாண்ட செட்கள் என ஒரு பக்கா என்டர்டெயினர் இந்த சீரிஸ். மாயாஜாலக் கதைகள் உங்களின் ஃபேவரைட் என்றால் தாராளமாக இதை க்ளிக்கலாம்!