Published:Updated:

சினிமா விகடன் : OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

ஸ்டிரீம் பாய்

சினிமா விகடன் : OTT கார்னர்

ஸ்டிரீம் பாய்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

Welcome Home

மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காக அந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு எல்லாம் பயணப்படுகிறார்கள் இரு பள்ளி ஆசிரியைகள். வழியில் ஒரே ஒரு வீடு மட்டுமே உள்ள கிராமம் ஒன்றும் இருக்கிறது. அந்த வீட்டின் கதவை இவர்கள் தட்டும் சமயம் வெளியே அடைமழை பிடித்துக்கொள்கிறது. வீட்டுக்குள் போயே ஆகவேண்டும், ஆனால் கதவு திறப்பதாயில்லை என இவர்கள் பரிதவிக்கும் நேரம் மெதுவாகத் திறந்து வழிவிடுகிறது வாசல். அக்கதவுகளுக்குப் பின்னால் இருக்கும் பயங்கரங்களே கதை.

சினிமா விகடன் : OTT கார்னர்

கேட்பதற்கு பேய்க்கதை போல இருந்தாலும் பேய்ப்படம் அல்ல. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நமக்கு திக் திக் தருணங்களைப் பரிசளித்துக்கொண்டே இருக்க, மற்றொருபக்கம் ஆசிரியைகளாக வரும் காஷ்மீரா இரானியும் ஸ்வர்தா திகலேயும் படத்தைத் தூக்கிச் சுமக்கிறார்கள். வன்முறைகள் நிறைந்த ஸ்ட்ரிக்ட்லி 18 ப்ளஸ் படம் இது. ஆனால் ஒரு சிறப்பான த்ரில்லர் அனுபவம்.

பேட் பாய் பில்லியனர்ஸ்: இந்தியா

உலகமே பார்த்து வியந்த இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் சுப்ரதா ராய். ஆனால், எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் வந்த பாதை தவறென்றால் சட்டெனச் சரிந்துவிடுவோம் என்று அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை உணர்த்தியது இவர்களது வாழ்க்கை. இந்தக் கதையை ஆவணப்படுத்தியிருக்கும் தொடர்தான் ‘பேட் பாய் பில்லியனர்ஸ்: இந்தியா’ (Bad Boy Billionaires:India).

சினிமா விகடன் : OTT கார்னர்

மேலே குறிப்பிட்ட பெரும்புள்ளிகளின் வீழ்ச்சியை மட்டும் பதிவுசெய்யும் தொடராக இல்லாமல் அவர்கள் கண்ட பெரும் கனவுகள் என்ன, அவர்களை நம்பி எத்தனை குடும்பங்கள் இருந்தன என அனைத்தையும் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடையும் இரண்டு பாதிகளாகப் பிரித்துவிடலாம். முதல் பாதி இவர்களது எழுச்சியையும் இரண்டாம் பாதி சரிவையும் காட்டுகிறது. இதற்காக இவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர், ஊழலை வெளிக்கொண்டுவந்தவர்கள், இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரையும் பேட்டி கண்டிருக்கின்றனர். அனைவரது குரலையும் பதிவுசெய்ய மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ இந்தத் தொடருக்கென தனியாக ஓர் அழுத்தமான குரல் இல்லாமல் போய்விடுகிறது.