ரேட்டிங் 3.5/5

மிடில் கிளாஸ் குடும்பங்களில் நிகழும் அன்றாடப் பிரச்னைகளைப் பற்றி ஜாலியாகப் பேசுகிறது ‘மிடில் கிளாஸ் மெலடீஸ்.’ அப்படியே வசனங்களை மலையாளத்துக்கு மாற்றிவிட்டால் ‘நமது கிராமங் களிலிருந்து அன்புடன்’ ஒரு மலையாள சினிமா ரெடி. அந்த அளவுக்கு படம் இயல்பு. மூட நம்பிக்கை எள்ளல்களைக்கூட எந்தச் சுளிப்பும் இல்லாமல் எளிதாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் இயக்குநர் வினோத் ஆனந்தோஜு. ‘சிங்கப் பெண்ணே’ வர்ஷா பொல்லாமாவைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்துக்கு சிறப்பானதொரு அறிமுகப்படம். கதையின் போக்கி லேயே வரும் செல்போன் கடைக் காதலி திவ்யா ஸ்பந்தனாவும் அவ்வளவு அழகு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், மிடில் கிளாஸ் குடும்பங்களின் இயல்பான நகைச்சுவையைப் பேசிய விதத்தில் கைதட்ட வைக்கிறது இந்தத் தெலுங்கு சினிமா.

David Attenborough: A Life on Our Planet

ரேட்டிங்- 4/5

உலகமெங்கும் பெரிதும் போற்றப்படும் இயற்கையியலாளர் டேவிட் ஆட்டன்பரோ. 93 வயதான இவர் பல தசாப்தங்களாக இயற்கை யுடன் பயணித்துவருபவர், இவர் வர்ணனையில்தான் முக்கிய வைல்டுலைப் சீரிஸ் பலவற்றையும் நாம் பார்த்திருப்போம். ‘மனிதத்தின் வளர்ச்சியால் இயற்கையும் அதை நம்பியிருக்கும் உயிர்களின் வாழ்க்கையும் எப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதற்கு என் அனுபவங்களே சாட்சி’ என அவர் பதிவுசெய்திருக்கும் ஆவணப்படமே இந்த ‘David Attenborough: A Life on Our Planet.’ தனது ஆவணப்பதிவுகள் மூலம் பூமியின் நிலை உண்மையில் எந்த அளவு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்கிற உண்மையை முகத்தில் அறைகிறார் டேவிட் ஆட்டன்பரோ. நமக்கு வாழ்க்கை கொடுத்த பூமியை மீட்டெடுக்க இந்த நொடியிலிருந்து நாம் என்ன செய்ய முடியும் என்று சில உதாரணங்கள் மூலம் வழியும் காட்டுகிறார். இயற்கையை வணங்கும் எவரும் தவறாமல் பார்க்க வேண்டியதொரு பதிவு இது.