Published:Updated:

சினிமா விகடன் : OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

ஸ்டிரீம் பாய்

சினிமா விகடன் : OTT கார்னர்

ஸ்டிரீம் பாய்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

Soul

னவுகளை நிஜமாக்குவது மட்டுமே வாழ்க்கை அல்ல; வாழ்க்கையை ரசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை Soul என்னும் அனிமேஷன் கதையின் மூலம் அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார்கள் பிக்ஸார் குழுவினர். ஜாஸ் கலைஞராக தன் வாழ்வின் அற்புதத் தருணத்தை உணரும் முன்னர், ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார் ஜோ. அவர் உடலைவிட்டு ஆன்மா வெளியேறி இன்னொரு உலகத்துக்குச் சென்றுவிடுகிறது. ஆன்மாக்களினால் நிரம்பிய அந்த உலகத்தில், பூமியில் வாழ விருப்பமில்லாமல் சுற்றித் திரிகிறது ஓர் ஆன்மா. இந்த இரு ஆன்மாக்களும், வாழ்வின் அர்த்தங்களைப் பகிர்ந்துகொள்வதே ‘சோல்’ திரைப்படம். முதன்மை கதாபாத்திரம் ஆஃப்ரோ அமெரிக்கராக இருந்தாலும், முழுக்கவே வெள்ளை நிற ஆன்மாவைச் சுழன்று அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஒரு குறையை விலக்கிவிட்டால், பிக்ஸார் குழுவிடமிருந்து மீண்டுமொரு அட்டகாசமான சினிமா இது.

சினிமா விகடன் : OTT கார்னர்

The Call

ஒரே வீடு... 20 வருட இடைவெளி... இரண்டு பெண்கள்... ஒரு பழைய கார்ட்லெஸ் போன் இருவரையும் காலம் கடந்து பேசிக்கொள்ள வைக்கிறது. இறந்தகாலப் பெண்ணின் உதவியால் இறந்துபோன தன் தந்தையை மீட்டெடுக்கிறாள் நிகழ்காலப் பெண். பதிலுக்கு இவளும் உதவ முற்பட, அது இவளையே ஒரு பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது. இறந்தகாலத்தில் இருந்துகொண்டு தன் வாழ்க்கையோடு விளையாடும் எதிரியை ஒருவர் எப்படி வீழ்த்த முடியும்? 2011-ல் ஆங்கிலத்தில் வெளியான ‘The Caller’ படத்தின் சாரத்தை மட்டும் எடுத்து, சுவாரஸ்யம் கூட்டி, தங்களின் கலாசாரப் பின்னணியோடு ரீமேக் செய்திருக்கிறது தென் கொரியா. ஆரம்ப நிமிடங்களிலேயே பரபரவென நகரும் படம், பல சுவாரஸ்ய ‘டைம் டிராவல்’ மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. ஒவ்வொருமுறை மாற்றங்கள் நிகழும்போதும் வரும் VFX காட்சிகள், அவற்றின் ஒளிப்பதிவு, தரம். இருந்தும், அட்டகாசமான த்ரில்லர் படத்தில் ஒரு மனநோயை ‘பேய் பிடித்த’ கோணத்தில் மூடநம்பிக்கையுடன் அணுகியது அபத்தம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism