The Trial of the Chicago 7

அரசையும் அதன் அதிகாரத்தையும் கேள்வி கேட்கும் கோர்ட் ரூம் டிராமா படங்கள் சுவாரஸ்யமானவை. ஆரோன் சொர்கின் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் நேரடி ரிலீஸ் கண்டிருக்கும் ‘தி டிரயல் ஆப் சிகாகோ 7’ எனும் கோர்ட் ரூம் டிராமா படம் பேசும் அரசியல், போருக்கு எதிராகப் போராடிய மாணவர் அமைப்புகளை அரசின் இரும்புக் கரம் ‘சட்ட ரீதியாக’ எப்படி ஒடுக்க நினைக்கிறது என்பதுதான். நீதிமன்றக் காட்சிகள் மட்டுமல்லாமல் பிற காட்சிகளிலும் வரும் பல வசனங்களில் ‘அனல்’ தெறிக்கிறது. புதிதாகப் பதவியேற்ற அரசு பழிவாங்கும் நோக்குடன் நடத்தும் ஒரு வழக்கு, அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் மக்களின் ஆதரவு என நிஜ வரலாற்றை செல்லுலாய்டில் பதித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் பல்வேறு நீதிபதிகளின் எச்சரிக்கையைத் தாண்டி அதுவரை போரில் இறந்தவர்களின் பெயர்களை வாசிக்கும் இடம் உணர்ச்சிக் குவியல். அரசியல் மற்றும் வரலாற்றைத் தாண்டி படமாகவும் இது ஒரு சிறந்த என்டர்டெயினர்!

ADDHAM

‘நமக்கு எது தேவையோ அதுவே அறம்’ என்னும் வாசகத்தை மையப்படுத்தி தெலுங்கில் மூன்று குறும்படங்கள் வெளியாகியிருக்கின்றன. சரி, தவறு என விகிதங்களுக்கு அப்பால், மனதின் வலிகளைச் சுமந்து செல்லும் மனிதர்கள் எடுக்கும் அந்தந்த நேரத்து முடிவுகளைப் பற்றிப் பேசுகின்றன இந்தக் குறும்படங்கள். 18 நிமிடங்கள் என்னும் அளவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படங்களின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தமிழ் நடிகர்கள் என்பது கூடுதல் சிறப்பு. சிவா ஆனந்த் எழுதியிருக்கும் இப்படங்களுக்கு KS சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை பெரும்பலம். தமிழில் வெளியாகாததும், தமிழ் சப் டைட்டில் இல்லாததும்தான் குறை.

The Unwhisperable Secret

வரலட்சுமி சரத்குமார், கிஷோர்.

மனநல மருத்துவரான வரலட்சுமியிடம் தன் வாழ்வில் நிகழ்ந்த பெரும்துயர் குறித்த ஆற்றாமையைப் பகிர வருகிறார் கிஷோர். அந்தச் சம்பவத்தைப் போன்ற நிகழ்வுகள் வரலட்சுமியையும் பாதித்திருக்க அவர் அடுத்து எடுக்கும் முடிவுகள்தான் இந்தக் கதையின் சாராம்சம். கடந்த காலக் காயங்கள் விட்டுச் செல்லும் தழும்புகளுக்குப் புதிய மருந்துகளைத் தர விழைகிறது இந்தக் குறும்படம்.

HALAL LOVE STORY

மலப்புரத்தின் கால்பந்துக் கலாசாரப் பின்னணியில் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படத்தைத் தொடர்ந்து, மலப்புரத்தின் இஸ்லாமியக் கலாசாரத்தை அடியொற்றி ‘ஸக்காரியா’ எடுத்திருக்கும் இரண்டாவது படம் ‘ஹலால் லவ் ஸ்டோரி.’ மார்க்க நெறிகளைக் கடைப்பிடிக்கும் ஓர் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களில் கலைப்பித்தேறிய பிரசாரக்குழு ஒன்று ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறது. கதை முதல் கதை மாந்தர்கள் தேர்வு வரை இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றும் குழுவுடன் இணைந்து ஒரு இயக்குநர் உருவாக்கும் சினிமாவுக்குள் சினிமா கதை நேசமும் பாசமுமாக நெகிழ்ச்சியுமாக நகர்கிறது. கிரேஸ் ஆண்டனி, ஜோஜூ ஜார்ஜ், இந்திரஜித், பார்வதி என தேர்ந்த நடிகர்களின் பட்டாளம் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.

Crossroads

பிரசன்னா, அபிராமி வெங்கடாசலம், பவித்ரா மாரிமுத்து

‘அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே’ எனப் பாடும் அளவுக்கு மனைவி அபிராமி வெங்கடாசலத்தால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார் பிரசன்னா. அந்த இரவை நிம்மதியாய்க் கழிக்க பாருக்குச் செல்லும் அவருக்கு புதிதாக ஒரு தோழி கிடைக்கிறாள். அந்தத் தோழி யார் என்னும் சின்னப் புன்னகையுடன் முடிகிறது க்ராஸ்ரோட்ஸ். எதிர்பார்த்த திருப்பம்தான் என்றாலும் சின்னச் சின்ன வசனங்கள்தான் இந்தக் குறும்படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

The Road That Never Ends

ஜெயப்பிரகாஷ், ரோஹிணி

பள்ளியில் பெயிலாகி ஊரைவிட்டு ஓடிவரும் சிறுவனுக்கு லிப்ட் தருகிறார் லாரி ஓட்டுநரான ஜெயப்பிரகாஷ். கோப்பை மதுவுடன் அவர் ஓட்டிச் செல்லும் லாரி தரும் திருப்பங்களும், அதற்குப் பிறகு ரோஹிணி சொல்லும் அந்த இருண்ட வாழ்வின் சூழல்களும் ஒரு நிமிடம் அச்சமுறச்செய்கின்றன. வசனங்கள் பெரிதாக நம்மைத் தொய்வுறச் செய்யாமல், ரோஹிணி தரும் முகபாவங்களே பெரும் சுமையை நம்மீது இறக்கிவைக்கிறது.