Published:Updated:

OTT கார்னர்!

OTT கார்னர்!
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்!

ஸ்ட்ரீம் பாய்

OTT கார்னர்!

ஸ்ட்ரீம் பாய்

Published:Updated:
OTT கார்னர்!
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்!

ENOLA HOLMES - NETFLIX WEB MOVIE

துப்பறியும் புலி ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யங்களைப் பற்றிப் பேசுகிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘எனோலா ஹோம்ஸ்.’ ஷெர்லாக்குக்குத் தங்கச்சியா என ஷாக் ஆக வேண்டாம், ஆர்தர் கொனான் டாய்ல் எழுதிய ஷெர்லாக் என்னும் புனைவுக் கதாபாத்திரத்தை வைத்து பலர் தங்களின் கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்திருக்கிறார்கள். 2006-ம் ஆண்டு ‘எனோலா ஹோம்ஸ் புதிர்கள்’ என நான்ஸி ஸ்ப்ரிங்கர் புத்தகம் வெளியிட, அது ஹிட் அடிக்க, அதை அப்படியே படமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனோலாவாக Stranger Things புகழ் மில்லி பாபி பிரவுன், ஷெர்லாக்காக ஹென்ரி கேவில், எனோலாவின் தாயாக ஹெலெனா பொன்ஹாம் கார்டர் எனப் படுபயங்கர கதாபாத்திரத் தேர்வுகள். ஆனால், ஷெர்லாக்காக ராபர்ட் டௌனி ஜூனியர், பெனிடிக்ட் கம்பர்பேட்ச் அளவு ஹென்றி கேவில் மனதில் ஒட்டவில்லை.

OTT கார்னர்!

பார்வையாளர்களுடன் பேசிக்கொண்டே நகரும் கதையில், இசை, அந்தக்கால உடைகள், ட்விஸ்ட் என எல்லாமே பக்கா. 16 வயது மில்லி பாபி பிரவுன்தான் படத்தின் தயாரிப்பாளர் என்பது மற்றுமொரு ஆச்சர்யத் தகவல்.

OTT கார்னர்!

jurassic world camp - NETFLIX WEB SERIES

cretaceous

மைக்கேல் கிரிஸ்டன் எழுதிய நாவல் என்பதையெல்லாம் கடந்து ஜுராஸிக் பார்க் என்னும் புனைவு உலகம் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுவிட்டது. இந்த முறையில் நெட்பிளிக்ஸில் குழந்தைகளுக்கான அனிமேட்டட் தொடராக வெளிவந்திருக்கிறது. குழந்தை களுக்கான தொடர் என்பதால், மனிதனைப் பாதியாகக் கவ்வி வாய்க்குள் தள்ளுவது, ரத்தம் பீறிட டைனோசர்கள் சண்டை போட்டுக்கொள்வதுபோன்ற எந்த 18+ காட்சிகளும் இல்லாதது ஆறுதல். வெவ்வேறு சூழலைச் சார்ந்த ஆறு சிறார்கள் ஜுராஸிக் பார்க்கைப் பார்க்க வருகிறார்கள். அடுத்து என்ன, ஜுராஸிக் பார்க்கில் டைனோசர்கள் தப்பித்து விடுகின்றன. இவர்கள் அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள், மீள்கிறார்களா இல்லையா என்பதே மீதிக் கதை. டைனோசர்களைப் பற்றி எல்லாமும் அறிந்த டேரியஸ், சோஷியல் மீடியா புலியான ப்ரூக்லின், பணக்கார விஐபி கெஞ்சி, பயந்த சுபாவம் கொண்ட பென் என வெவ்வேறு விதமான சிறார்கள், அவர்கள் செய்யும் சாகசங்கள் என விரிகிறது கதை.

OTT கார்னர்!

THE ONE AND ONLY IVAN - DisNEP hotstar MOVIE

மிருகக்காட்சிசாலை என்னும் சொல்லே தவறானதுதான், ஏனெனில் மிருகங்கள் காட்சிப்படுத்துவதற்காக உருவானவை அல்ல. அப்படியானதொரு மிருகக் காட்சி சாலையில் இருக்கும் கொரில்லா, தன்னுடன் இருக்கும் குட்டி யானையை மீட்டு காட்டுக்குள் அழைத்துச் செல்லும் கதைதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. 27 ஆண்டுகள் வாஷிங்டனில் இப்படியானதொரு சூழலில் வாழ்ந்து, பின் மக்களின் போராட்டங்களால் காட்டுக்குள் விடப்பட்ட இவான் என்னும் நிஜ கொரில்லாவின் வாழ்க்கையை மையப்படுத்தி கற்பனை கலந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைக்கு ஏஞ்சலினா ஜூலியும், கொரில்லாவுக்கு சாம் ராக்வெலும் குரலுதவி செய்திருக்கிறார்கள். கொரில்லாவுக்கும் நாய்க்கும் இருக்கும் நட்பு, கொரில்லாவுக்கு உதவ முன்வரும் சிறுமி, கொரில்லாவின் ஓவியத் திறன் என வார விடுமுறையில் குழந்தைகள் பார்த்து ரசிக்க ஜாலி மிருகப்படம் இந்தத் திரைப்படம்.

OTT கார்னர்!

Alive - NETFLIX WEB MOVIE

பிரிக்க முடியாதது கொரியாவும் ஜோம்பி படங்களும்தான். ஜோம்பி சீரிஸில் கொரிய மக்கள் நமக்கு நல்கியிருக்கும் புதிய படைப்பு தான் நெட்பிளிக்ஸில் வெளியாகி யிருக்கும் ‘அலைவ்.’ வீடியோ கேம் விளையாட்டில் கில்லியான கதாநாயகன் வீட்டுக்குள் மாட்டிக் கொள்ள ஊரே ஜோம்பியாக மாறிவிடுகிறது. ஜோம்பிகளைக் கடந்து அடுத்தடுத்த நாள்களை அவன் எப்படி வெற்றிகரமாகக் கடக் கிறான் என்பது மீதிக் கதை. இந்த அப்பார்ட்மென்ட்டில் தனியாக கதாநாயகன் இருந்தால், எதிர் அப்பார்ட்மென்ட்டில் தனியாக கதாநாயகி இருக்க வேண்டுமே. ஆம், எப்படி இந்த இருவரும் தங்களைக் கண்டு கொள்கிறார்கள். ஜோம்பிகளிட மிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என விரிகிறது இந்த ஜோம்பிக் கதை. எந்த உணவும் கிடைக்காமல் வீட்டுக்குள் ளேயே பித்துப் பிடித்தது போல் சுற்றும் கதாநாயகன், ஏனோ லாக்டௌன் நாள் களைக் கண் முன் கொண்டு வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism