சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்

Sardar Udham
பிரீமியம் ஸ்டோரி
News
Sardar Udham

நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் துருக்கிய த்ரில்லர் படம். பதவி உயர்விற்குக் காத்திருக்கிறார் மூத்த போலீஸ் அதிகாரி ஹாருண்

Sardar Udham - MOVIE

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ டயரை 21 வருடங்கள் காத்திருந்து சுட்டுக்கொல்கிறார் உதம் சிங். பகத் சிங்குடன் இணைந்து போராடிய உதமின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பேசுகிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்தப் படம். சர்தார் உதமாக விக்கி கௌஷல். அளவான, அதே சமயம் நெஞ்சைத் தைக்கும் வசனங்கள், தெளிவான பார்வை என முதல் பாதியில் ஈர்ப்பவர், இரண்டாம் பாதியில் ஜாலியன் வாலாபாக் காட்சிகளில் மனதை ரணமாக்குகிறார். இயக்குநர் ஷூஜித் சர்க்காரின் கரியரில் மற்றுமொரு முக்கியமான படம் இது. பாலிவுட்டின் வியாபார பயோபிக்குகளுக்கு மத்தியில் உயிர்ப்பான கலைப்படைப்பாக நம் கண்முன் விரிகிறது. மூன்று முறை தேசிய விருதை வென்ற அவிக் முக்கோபாத்யாயின் ஒளிப்பதிவு, பிரதீப் ஜாதவ்வின் கலை இயக்கம் என டெக்னிக்கல் ஏரியாவிலும் இந்தப் படம் ஓர் அசாத்திய மைல்கல். படத்தின் நீளம், வரலாற்று ரீதியான சில குழப்பங்கள் எனக் குறைகள் இருப்பினும், அவற்றையெல்லாம் கடந்து இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமானதொரு இடத்தில் அமர்கிறார் இந்த உதம்.

OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

Grudge - MOVIE

நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் துருக்கிய த்ரில்லர் படம். பதவி உயர்விற்குக் காத்திருக்கிறார் மூத்த போலீஸ் அதிகாரி ஹாருண். அதற்காகத் தன் அணிக்கு பார்ட்டி கொடுத்துவிட்டுத் திரும்பும்போது ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது. அதை வெளியே சொல்லவும் முடியாமல் அதேசமயம் தன் குற்றவுணர்ச்சியும் அழுத்த, தவிக்கிறார். அந்த அசம்பாவிதம் அடுத்தடுத்து பல சிக்கல்களை உருவாக்க, மொத்தக் காவல்துறையும் இதற்கு யார் காரணம் எனத் தேடி ஓடுகிறது. இறுதியாக முடிச்சுகள் அவிழ்ந்து மையப்புள்ளி எது, யார் என நமக்குச் சொல்வதுதான் கதை. விறுவிறு கதை சொல்லல், வரிசையாக ட்விஸ்ட்கள் என மின்னல் வேகத்தில் நகர்கிறது படம். ஹீரோவாக நடித்திருக்கும் இல்மாஸ் எர்டோஹன் கதாபாத்திரத்துக்கு பக்காவான பொருத்தம். ஆக்‌ஷன் படம் பார்க்க விரும்புபவர்களின் வீக் எண்ட் சாய்ஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Break Point

90களின் இறுதியில் இந்தியாவில் இரண்டு விளையாட்டுகள் பரவலாய் கவனம் பெற்றன. ஒன்று கிரிக்கெட். எதிர்மறைக் காரணங்களுக்காக. மற்றொன்று டென்னிஸ் - நேர்மறைக் காரணங்களுக்காக. காரணம் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி. தொடர் வெற்றிகளைக் குவித்தவர்கள் ஏனோ 21-ம் நூற்றாண்டில் திடீரெனப் பிரிந்தார்கள். வெளிப்படையாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி மோதிக்கொண்டார்கள். என்ன நடந்தது அந்நாள்களில் என மிக விவரணையாக அவர்கள் இருவரின் பார்வையிலேயே விரிகிறது ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர். நட்பு, வெற்றி, பொறாமை, துரோகம் என உணர்ச்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. இருவருக்கும் நடுவே நின்று பேசியிருக்கவேண்டிய தொடர் ஏனோ, முடியும்போது பயஸும் அவர் தந்தையும்தான் பிரச்னைகளுக்குக் காரணம் எனக் கைகாட்டுவதுபோல் அமைந்திருப்பதுதான் குறை. அந்நாள்களில் இவர்களோடு போட்டியிட்டவர்கள், இருவரின் குடும்பங்கள், நட்புவட்டம், மூத்த பத்திரிகையாளர்கள் என அனைவரின் கருத்துகளையும் தாங்கி வந்திருக்கும் இந்தத் தொடர், விளையாட்டு விரும்பிகள் தவறவிடக்கூடாத ஒன்று.

OTT கார்னர்
OTT கார்னர்

Escape the Undertaker - MOVIE

வித்தியாச அனுபவத்தை விரும்பும் ரசிகர்களுக்காக interative படங்களை அவ்வப்போது நெட்பிளிக்ஸ் வெளியிடுவதுண்டு. அந்த வரிசையில் இந்த முறை WWE புகழ் அண்டர்டேக்கரை இந்த விளையாட்டுக்குள் இறக்கியிருக்கிறார்கள். WWE போட்டிகளில் அண்டர்டேக்கருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமுண்டு. அவரிடம் இருக்கும் மாய ஆயுதத்தைப் பறிக்க மூன்று WWE வீரர்கள் முயல அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த ‘அடுத்து என்ன’ என்பதைத் தீர்மானிக்கப்போவது ரசிகர்கள்தாம். நாம் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்கு ஏற்ப கதை நகரும். நாம் நினைத்தால் ஐந்து நிமிடத்தில்கூட படத்தை முடித்துவிடலாம். ஆனால், காடுகளை உருவாக்கி கம்பீரமாகக் காட்சி தரும் யானை, கோயில் வாயிலில் யாசகத்துக்கு நிற்பதுபோல, பார்த்து வியந்த அண்டர்டேக்கரை இப்படி கோமாளித் தொடர்களிலில்லாம் செட் பிராப்பர்டி போல் பயன்படுத்தியிருப்பதுதான் உள்ளபடியே வருத்தம்.