Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

மனிதர் மான்ஸ்டராகவும் மான்ஸ்டர் மனிதராகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது Hotel Transylvania: Transformania.

OTT கார்னர்

மனிதர் மான்ஸ்டராகவும் மான்ஸ்டர் மனிதராகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது Hotel Transylvania: Transformania.

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

புத்தம் புது காலை விடியாதா - Movie

2020-ல் அமேசான் பிரைமில் வெளியான ‘புத்தம் புது காலை’யின் ஃபார்மெட்டில் ஐந்து கதைகளுடன் அடுத்த ஆந்தாலஜி சீரிஸாக வெளியாகியுள்ளது ‘புத்தம் புது காலை விடியாதா.’ பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, சூர்ய கிருஷ்ணா, ரிச்சர்ட் ஆண்டனி ஆகியோர் இயக்க, ஜோஜு ஜார்ஜ், நதியா, லிஜோமோல் ஜோஸ், அர்ஜுன் தாஸ், கௌரி, டீஜே அருணாசலம், சணந்த், திலீப் சுப்பராயன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, விஜி சந்திரசேகர் எனப் பெரும் பட்டாளமே நடித்திருக்கிறது.

புத்தம் புது காலை விடியாதா
புத்தம் புது காலை விடியாதா

லோனர்ஸ் - ஹலிதா ஷமீம்

லோனர்ஸ் - ஹலிதா ஷமீம்
லோனர்ஸ் - ஹலிதா ஷமீம்

லாக்டௌனின் போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் இருவர் இணையத் தொடர்பு மூலம் நண்பர்களாகி தங்களின் தனிமையைப் போக்கிக்கொள்ளும் கதை. நல்லதங்காளாக லிஜோமோல் ஜோஸ் மீண்டும் தன் நடிப்பால் முத்திரை பதிக்கிறார். அதிக உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்து, ஒரு கட்டத்தில் வெடித்து அழும் அர்ஜுன் தாஸின் தோள்களை நாமுமே தட்டிக்கொடுக்க வேண்டுமோ என்று நினைக்க வைக்கிறது அவரின் நடிப்பு. ரசிக்கவைக்கும் வசனங்கள், காட்சிகளின் பின்னணி, ஒளிப்பதிவு ஆகியவற்றால் கவனிக்கவைக்கும் படம்.

தி மாஸ்க் - சூர்ய கிருஷ்ணா

தி மாஸ்க் - சூர்ய கிருஷ்ணா
தி மாஸ்க் - சூர்ய கிருஷ்ணா

ஊரும் தன் குடும்பமும் என்ன சொல்லும் என்று பயந்தே முகமூடி அணிந்துகொண்டு வாழும் இளைஞன் ஒருவன் தைரியமாகத் தன் உணர்வுகளை வெளிக்காட்ட எத்தனிக்கும் கதை. சாதாரண காதலுக்கே எதிர்ப்பு சொல்லும் பெற்றோர்கள் மத்தியில் தன்பால் ஈர்ப்பு பற்றிப் பேசுவது இன்னமும் எப்படி ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறது என்பதைப் பேசுகிறது படம். ‘Coming Out’ டிராமாவாக விரியும் படத்தில் சணந்தின் நடிப்பு ஈர்க்கிறது. அவரின் பால்ய நண்பனாக திலீப் சுப்பராயன் சர்ப்ரைஸ் பேக்கேஜ்.

முகக்கவச முத்தம் - பாலாஜி மோகன்

முகக்கவச முத்தம் - பாலாஜி மோகன்
முகக்கவச முத்தம் - பாலாஜி மோகன்

அதிதீவிர லாக்டௌனின் போது சாலைகளில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் கதையாக விரிகிறது இது. குயிலியாக கௌரி கிஷன் 80-களின் நாயகிகளை நினைவூட்டுகிறார். அவர் மேல் ஈர்ப்பு கொண்டிருக்கும் முருகனாக டீஜே, சமகால இளைஞர்களின் துடிப்பை வெளிப்படுத்துகிறார். ரோந்து பணியிலிருக்கும் காவல் அதிகாரிகளின் காதல், கூடவே அவர்கள் சேர்த்துவைக்கும் மற்றொரு காதல் என ஐடியாவாக நன்றாக இருந்தாலும், சுவாரஸ்யமில்லாத நிகழ்வுகள், அமெச்சூரான நடிப்பு, கொரோனா விழிப்புணர்வுப் படம் போன்ற பாவனை ஆகியவை முத்தத்தைக் கசக்கவைக்கின்றன.

மௌனமே பார்வையாய் - மதுமிதா

மௌனமே பார்வையாய் - மதுமிதா
மௌனமே பார்வையாய் - மதுமிதா

ஒரு சின்னப் பிரச்னையால் பேசாமல் இருக்கும் கணவன் - மனைவியை மீண்டும் காதலிக்க வைக்கிறது கொரோனாவும், லாக்டௌனும். புல்லாங்குழல் வாசிக்கும் கலைஞர் யசோதாவாக நதியா, அவரின் கணவர் முரளியாக ஜோஜு ஜார்ஜ். படத்தில் வசனங்களே இல்லை என்றாலும் இருவரின் தேர்ந்த நடிப்பே அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வைக்கின்றன. அதே சமயம், ஒரு கட்டத்துக்கு மேல், ‘மௌனப் படம்’ என்பது வலிந்து திணிக்கப்பட்ட ஒரு முடிவோ என்று யோசிக்க வைக்கிறது.

நிழல் தரும் இதம் - ரிச்சர்ட் ஆண்டனி

நிழல் தரும் இதம் - ரிச்சர்ட் ஆண்டனி
நிழல் தரும் இதம் - ரிச்சர்ட் ஆண்டனி

அப்பாவின் இறப்பு, அவரைவிட்டு மனதளவில் தள்ளியிருந்த மகளைச் சிந்திக்க வைக்கிறது. இழப்பையும், இறந்த காலத்தையும் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் சுற்றியிருக்கும் மனிதர்களும், அடிபட்ட ஒரு நாயும் அவளுக்கு உதவுகின்றன. ஷோபியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி படம் முழுவதையும் தாங்கிப் பிடிக்கிறார். தனியாக அமர்ந்து தன் இறந்தகாலத்தை நினைவில்கொண்டு அவர் பேசும் வசனங்களும், அந்த அழுகையும் இழப்பைச் சந்தித்த அனைவரையும் கலங்கச் செய்யும். ஆனால், காட்சிகளாக மட்டுமே அடுக்கியதால் படம் இலக்கின்றிப் பயணிக்கும் உணர்வு தருவதைத் தவிர்க்க முடியவில்லை.

Hotel Transylvania: Transformania - Movie

Hotel Transylvania: Transformania - Movie
Hotel Transylvania: Transformania - Movie
Hotel Transylvania: Transformania - Movie
Hotel Transylvania: Transformania - Movie

மனிதர் மான்ஸ்டராகவும் மான்ஸ்டர் மனிதராகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் அனிமேசன் திரைப்படமான Hotel Transylvania: Transformania. ஹோட்டல் டிரான்ஸில்வேனியாவை தன் மகளிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வை அறிவிக்கத் திட்டமிடுகிறார் டிராகுலா. ஆனால், டிராகுலா குடும்பத்தின் மருமகனும் மனித வம்சாவளியைச் சேர்ந்த ஜானியும் இந்த ஹோட்டலைச் சீரழித்துவிடுவாரோ என பயப்படும் டிராகுலா, அந்தத் திட்டத்தைக் கடைசி நிமிடத்தில் கைவிடுகிறார். அடுத்து நடக்கும் சிறு விபத்தில், ஜானி மான்ஸ்டராகவும், டிராகுலா மனிதராகவும் மாறிவிடுகிறார்கள். மாமனாரும் மருமகனும் இருவரையும் புரிந்துகொண்டார்களா, தங்களின் இயல்பு நிலைக்குச் சென்றார்களா என்பதாக இந்த நான்காம் பாகத்தின் கதை விரிகிறது. முதல் மூன்று பாகம் அளவுக்கு இதில் காமெடி இல்லையென்றாலும், எமோஷனலாக பக்காவாக வந்திருக்கிறது Transformania. ஹோட்டல் டிரான்ஸில்வேனியாவின் இறுதி மூன்று பாகங்கள் அமேசான் ப்ரைமிலும், முதல் பாகம் நெட்பிளிக்ஸிலும் இருக்கின்றன. தொடரைப் பார்க்காதவர்கள், தங்களின் குழந்தைகளுடன் ஜாலியாகப் பார்க்கக்கூடிய டைம்பாஸ் அனிமேசன் திரைப்படங்கள் இவை.