Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

அந்தப் பள்ளியில் படிக்கும் அதீத சக்திவாய்ந்த ஹோப் மைக்கல்சென் மற்றும் அவளின் நண்பர்களின் சாகசங்களைப் பேசும் நான்காவது சீசன் இது.

OTT கார்னர்

அந்தப் பள்ளியில் படிக்கும் அதீத சக்திவாய்ந்த ஹோப் மைக்கல்சென் மற்றும் அவளின் நண்பர்களின் சாகசங்களைப் பேசும் நான்காவது சீசன் இது.

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
OTT கார்னர்
OTT கார்னர்

CODA - Movie

செவித்திறன் சவால் கொண்ட தந்தை, தாய், அண்ணன் உள்ள குடும்பத்தில் காதுகேட்கும், வாய்பேசும் ஒரே பெண் ரூபி. இந்த மீனவக் குடும்பத்திற்குக் கலங்கரை விளக்கு ரூபிதான். ஒலி இல்லாத அவர்கள் உலகத்திற்கும் இரைச்சல் நிறைந்த நிஜ உலகத்திற்கும் பாலமாக இருக்கிறார். இந்தச் சூழலில் இசையில் நாட்டம் கொள்ளும் ரூபி பாடகராக விரும்புகிறார். இதனால், ஒரு கட்டத்தில் இசையா, குடும்பமா என முடிவெடுக்க வேண்டிய சூழலில் சிக்குகிறார். எதைத் தேர்ந்தெடுத்தார் ரூபி என்பதே ‘கோடா’வின் ஒன்லைன். சிறந்த படத்திற்கான ஆஸ்கரைத் தட்டிச்செல்லும் முதல் ஓ.டி.டி படம் எது என்பதில் கடும்போட்டி இருந்துவந்தது. நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி, அமேசான் என அனைத்து முன்னணித் தளங்களையும் ஓரங்கட்டி சத்தமில்லாமல் ‘கோடா’ மூலம் அதை வென்றிருக்கிறது ஆப்பிள் டி.வி ப்ளஸ். படத்தின் பெரும்பகுதி சைகை மொழியில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. செவித்திறன் குறைபாடு கொண்ட நடிகர்களே நடித்திருக்கின்றனர். அதில், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் வென்றிருக்கிறார் ரூபியின் தந்தையாக நடித்திருக்கும் டிராய் கோட்சர். இசை, மௌனம் என இரு துருவங்களையும் தொடும் அழகிய கவிதையாக மனங்களைத் தொடும் ‘கோடா’, மிஸ் பண்ணக்கூடாத அனுபவம்!

OTT கார்னர்
OTT கார்னர்

The Great - Robbery of Brazil’s Central Bank - Docuseries

2005-ல் பிரேசிலை மட்டுமல்லாமல் உலகையே அதிர வைத்தது அந்நாட்டின் சென்ட்ரல் வங்கியில் நிகழ்ந்த கொள்ளை. 164 மில்லியன் பிரேசிலியன் ரியால்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைவிட அதிகாரிகளை அதிகம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது கொள்ளையடிக்கப்பட்ட முறைதான். கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட அந்தக் கொள்ளையின் மூளை யார், காவல்துறை அவர்களை எப்படித் துரத்திப் பிடித்தது என்பதை மூன்று எபிசோடுகள் கொண்ட மூன்று மணிநேர டாக்குசீரிஸாகக் கொண்டு வந்திருக்கிறது நெட்ப்ளிக்ஸ். கொள்ளை நடந்து ஐந்தாண்டுகள் ஆனபின்னும் சளைக்காமல் துப்புத்துலக்கிக் கைது செய்த அதிகாரிகள், கொள்ளையடித்தவர்களிடமிருந்தே மிரட்டிப் பணம் பறித்த ஊழல் போலீஸ்காரர்கள், பழிக்குப் பழியாக நாடு முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட போதை மாபியா என இந்த நெட்ப்ளிக்ஸ் சீரிஸ் வெளிக்கொண்டுவரும் உண்மைகள் எக்கச்சக்கம், ஒரு விறுவிறு த்ரில்லர் சீரிஸ் பார்க்க நினைப்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸ் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Snowpiercer - Web Series

உலகமே ஒரு ரயில் என்றாகிவிட்டால், அதனுள் நடக்கும் யார் தலைமை என்கிற யுத்தம்தான் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் Snowpiercer வெப்சீரிஸின் கதை. பிரெஞ்சு நாவல் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரிய இயக்குநர் போங் ஜூன் ஹோவால் சினிமாவாக எடுக்கப்பட்டது. தற்போது அந்த நாவலையும் சினிமாவையும் மையமாக வைத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது. பனி சூழ்ந்து உலகம் உறைந்துவிட, எஞ்சிய மனிதர்கள் ஒரு ரயிலில் தப்பிக்கிறார்கள். ஆனால், உலகைச் சுற்றும் அந்த ரயிலுக்கே தெரியாமல் இன்னொரு ரயிலும் வலம் வருகிறது. இந்த இரண்டு ரயில் மனிதர்கள், அவர்களுக்குள்ளான சண்டைகள் என்பதையெல்லாம் மீறி உலகம் பனி விலகி மூன்றாவது சீசனில் புத்துயிர் பெறும் தியரிகள் ரயிலுக்குள் உலா வருகின்றன. சிலர் அதை நம்ப, பலர் அதை மறுக்க, மீண்டும் இரண்டு ரயில்களும் தத்தம் வழியைப் பார்த்துக்கொண்டு பிரிகின்றன. அடுத்து என்ன நடக்கும் என்கிற சஸ்பென்ஸுடன் நான்காவது சீசனுக்கான அழைப்பு மணியுடன் இந்த சீசனை முடித்து வைத்திருக்கிறார்கள். பிரமாண்ட ரயில், உறைந்த உலகம் போன்றவற்றை ரசிக்க விரும்புபவர்கள் இந்த சீரிஸைப் பார்க்கலாம்.

OTT கார்னர்
OTT கார்னர்

Legacies - Web Series

வேம்பயர்ஸ், விட்சஸ், வேர்வுல்ஃப்ஸ் உள்ளிட்ட சகல அமானுஷ்ய ஜீவராசிகளும் உலாவும் உலகில் அத்தகைய சிறுவர் சிறுமிகளை நெறிப்படுத்தி மனிதர்களுடன் இணைந்து வாழ உதவுகிறது சால்வடோர் பள்ளி. அந்தப் பள்ளியில் படிக்கும் அதீத சக்திவாய்ந்த ஹோப் மைக்கல்சென் மற்றும் அவளின் நண்பர்களின் சாகசங்களைப் பேசும் நான்காவது சீசன் இது. ஹோப் தீய சக்தியான மாலவோரை அழிக்க தன் விதிப்படி வேம்பயர்ஸ், விட்சஸ், வேர்வுல்ஃப்ஸ் ஆகிய மூன்றின் கலவையாகிறாள் (ட்ரைபிரிட்). இதற்காகத் தன் காதலனைத் தியாகம் செய்தாளா, தீயதை முழுமையாக அழித்தாளா, இதனால் அவள் மனநிலை என்னவானது என்பதாக விரிகிறது இந்த சீசன். ஸ்பின் ஆஃப் தொடரான இது, இதன் ஒரிஜினல் தொடர்கள் அளவுக்கு இல்லை என்ற விமர்சனத்தை இந்த சீசன் மாற்றியிருக்கிறது. தொடரும் ட்விஸ்ட்கள், பரபர திரைக்கதை, ஏகப்பட்ட சாகசங்கள் என நகரும் எபிசோடுகள் சுவாரஸ்யம். ஹோப்பாக வரும் டேனியல் ரோஸ் ரஸல், பள்ளியின் தலைமையாசிரியர் அலாரிக் சால்ட்ஸ்மேனாக வரும் மேட் டேவிஸ், இரட்டை சகோதரிகளாக வரும் கைலி பிரையன்ட், ஜென்னி பாய்ட் ஆகியோர் ஈர்க்கின்றனர். CW-வின் தொலைக்காட்சித் தொடரான இதை இந்தியாவில் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.